கொஞ்சம் வெயிட் பண்ணுனா கம்மி விலையில் 'இந்த' Samsung போனை வாங்கலாம்!

|

எனக்கு பிளாக்ஷிப் போன்லாம் வேணாம்ப்பா, பட்ஜெட் விலை போன் கூட வேண்டாம், கம்மி விலையில் டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் ஒரு அருமையான ஸ்மார்ட்போன் கிடைத்தால் போதும், குறிப்பாக அதிக காசு செலவே ஆக கூடாது என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் வாடிக்கையாளர்களுக்காகவே சாம்சங் (Samsung) நிறுவனம் விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை தரமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யவிருக்கிறது.

Samsung Galaxy A04 Core மற்றும் Samsung Galaxy M04 இந்தியாவிற்கு வருகிறதா?

Samsung Galaxy A04 Core மற்றும் Samsung Galaxy M04 இந்தியாவிற்கு வருகிறதா?

உண்மையைச் சொல்லப் போனால், தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் இந்தியாவில் விரைவில் ஒன்றல்ல இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடவுள்ளது. இதில் Samsung Galaxy A04 Core மற்றும் Samsung Galaxy M04 என்ற மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் தனது நுழைவு நிலை A சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்களுடன் இந்த மாடலையும் சேர்த்து தனது பட்டியலை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

Samsung Galaxy A04 Core இந்திய தளத்தில் காணப்பட்டதா?

Samsung Galaxy A04 Core இந்திய தளத்தில் காணப்பட்டதா?

Samsung நிறுவனம் இந்த வாரத் தொடக்கத்தில் Galaxy A04 மாடலை அறிமுகம் செய்தது. அடுத்தபடியாக, இந்தியாவில் Samsung Galaxy A04 Core மற்றும் Samsung Galaxy M04 ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் இப்போது காணப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்த போன்களின் எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நமக்கு சில தகவல்கள் தெரியும்.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

புது போனின் மாடல் எண் உடன் வெளியான லீக்

புது போனின் மாடல் எண் உடன் வெளியான லீக்

சமீபத்திய அறிக்கைகளின் படி, Galaxy A04 கோர் மற்றும் Galaxy M04 ஆகியவை Geekbench தரவுத்தளத்திலும் காணப்பட்டுள்ளது. Samsung Galaxy A04 Core சாதனம் BIS தளத்தில் SM-A042F/DS என்ற மாடல் எண் உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல், Samsung Galaxy M04 டிவைஸ் SM-M045F/DS என்ற மாடல் எண் உடன் காணப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சாம்சங் இந்த ஸ்மார்ட்போன்களை வரும் நாட்களில் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy A04 Core போனில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்?

Samsung Galaxy A04 Core போனில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்?

கூறப்படும் BIS பட்டியலில் இந்த ஸ்மார்ட்போன்கள் தொடர்பான எந்த தகவலும் இல்லை. ஆனால், நமக்குக் கிடைத்த சில தகவலின் படி, இந்த Samsung Galaxy A04 Core ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்ச விபரங்கள் கிடைத்துள்ளது. இந்த சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்திற்காக இதில் மைக்ரோ SD ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட், கேமரா மற்றும் டிஸ்பிளே விபரங்கள்

சிப்செட், கேமரா மற்றும் டிஸ்பிளே விபரங்கள்

இது ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Rogue GE8320 GPU உடன் இணைக்கப்பட்ட MediaTek Helio G35 சிப்செட் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் 6.5' இன்ச் உடன் 720 x 1600 பிக்சல் கொண்ட PLS LCD டிஸ்பிளேவுடன் வரலாம். இது 8 MP கொண்ட f/2.0 உடைய AF சிங்கள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 5MP செல்பி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது.

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

Samsung Galaxy M04 போனில் என்ன இருக்கும்?

Samsung Galaxy M04 போனில் என்ன இருக்கும்?

இது 5000mah பேட்டரியை பேக் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிளாக், காப்பர் மற்றும் க்ரீன் நிறங்களில் வருகிறது. இதற்கிடையில், சமீபத்திய அறிக்கையின்படி, Samsung Galaxy M04 கீக்பெஞ்ச் தளத்திலும் காணப்பட்டது. இது ஆண்ட்ராய்டு 12 உடன் 3ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IMG PowerVR GE8320 GPU உடன் வரும் என்று கூறப்படுகிறது. இது MediaTek Helio G35 SoC ஐக் கொண்டிருக்கும். கம்மி விலையில் பெஸ்டான போனை வாங்க விரும்பினால் கொஞ்சம் Samsung Galaxy A04 Core மாடலுக்காக காத்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A04 Core And Galaxy M04 Spotted On BIS Listing These Could Soon Launch in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X