ஏடிஎம் மூலம் அரிசி விநியோகம்: தினமும் 1000 பேருக்கு., சமூக இடைவெளி கட்டாயம்!

|

ஏடிஎம் மூலம் தினமும் 1000 பேருக்கு 1.5 டன் அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. ராணுவத்தினர் உதவியோடு பொதுமக்கள் சமூகஇடைவெளி கடைபிடிக்கப்பட்டு விநியோகம் நடைபெற்று வருகிறது. எந்த நாட்டில் எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளது

எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளது.இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2549 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26235 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!

உலகின் 212 நாடுகளில் கொரோனா தாக்கம்

உலகின் 212 நாடுகளில் கொரோனா தாக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் 212 நாடுகளில் தனது தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தை கடந்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை

குணமடைந்தோர் எண்ணிக்கை

அதேபோல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கையும் 16.40 லட்சத்தை தாண்டி இருக்கிறது என்பது ஆறுதல் தகவலாக இருக்கிறது. இதில் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு

இந்த நிலையில் இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. அந்த பகுதியில் 14 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் இந்தோனேசியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ளதால் பொருளாதாரம் பாதிப்பு

ஊரடங்கு அமலில் உள்ளதால் பொருளாதாரம் பாதிப்பு

இந்த ஊரடங்கு அமலில் உள்ளதால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பலரும் வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர். இதையடுத்து இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள முக்கிய நகரங்களில் அரிசி ஏடிஎம் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 1.5 டன் அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் 1000 கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.

வேலை இழந்து கடும் அவதி

வேலை இழந்து கடும் அவதி

பல்வேறு நாடுகளை போன்றே இந்தோனேசியாவில் சிறு, குறு தொழில்களில் செல்வோர்கள் வேலை இழந்து கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த 6 வாரங்களில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக அந்த நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏ.டி.எம். மூலம் இலவச அரிசி

ஏ.டி.எம். மூலம் இலவச அரிசி

இந்த நிலையில், அந்த நாட்டில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் ஆதரவற்றோருக்கு என ஏராளமானோர்க்கு ஏ.டி.எம். மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

Jio Free calls: இனி கவலை வேண்டாம்., பிளான் முடிந்தாலும் இலவச அழைப்பு?Jio Free calls: இனி கவலை வேண்டாம்., பிளான் முடிந்தாலும் இலவச அழைப்பு?

ராணுவத்தினர் பாதுகாப்போடு அனுமதி

ராணுவத்தினர் பாதுகாப்போடு அனுமதி

இந்த ஏடிஎம் பகுதிகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்போடு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஏடிஎம்களில் ராணுவத்தினர் பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வின்றி அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும் இதன்மூலம் பொதுமக்கள் பெரிதும் பயன்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அரிசி ஏடிஎம் ஆனது அடுத்த 2 மாதங்களுக்கு தொடர்ச்சியாக செயல்படும் என்று அந்நாட்டு அதிகாரிகளால் கூறப்படுகிறது.

source: cna

Best Mobiles in India

English summary
rice ATMs introduced in indonesia: Each day 1.5 tonnes rice for around 1,000 residents

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X