Jio, Airtel SIM-க்கு டாட்டா... 72 நாள் டெய்லி 1GB பிளானில் அன்லிமிடெட் 5G.. Vodafone வச்சி செஞ்சிடுச்சு!
இந்திய டெலிகாம் சந்தையில் உள்ள மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL) ஆனது, 5ஜி டேட்டாவுடன் கூடிய ஒரு "சுவாரசியமான" ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதில் என்ன சுவாரசியம் என்றால் இது 5ஜி உடன் சேர்த்து டெய்லி 1ஜிபி 4ஜி டேட்டாவையும் வழங்குகிறது.
எந்த திட்டம்? நாம் இங்கே பேசும் திட்டத்தின் விலை ரூ.719 ஆகும். 5ஜி உடன் ஒரு நல்ல மீடியம்-டேர்ம் வேலிடிட்டியை விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். 5ஜி-ஐ வழங்கும் மற்ற ஆப்ரேட்டர்களிடம் உள்ள சிக்கல் என்னவென்றால், அவர்கள் எல்லாம் தினசரி 2ஜிபி அல்லது அதற்கும் மேலான டேட்டாவுடன் மட்டுமே 5ஜி-ஐ வழங்குகிறார்கள். ஆனால் வோடபோன் ஐடியாவோ, டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களுடன் கூட 5ஜி-ஐ வழங்குகிறது.

வோடபோன் ஐடியாவானது, பெரும்பாலான வட்டங்களில் உள்ள பயனர்களுக்கு ரூ.299 அல்லது ரூ.349 முதல் தொடங்கும் திட்டங்களுடன் 5ஜி-ஐ வழங்குகிறது. சில வட்டங்களில் இந்த ஆரம்ப விலையில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல மீடியம்-டேர்ம் வேலிடிட்டி உடன் வருவது ரூ. 719 ப்ரீபெய்ட் திட்டம் தான்.
வோடபோன் ஐடியா ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், டெய்லி 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும்.
எப்யுபி (FUP) லிமிட் முடிந்த பின்னர், அதாவது டெய்லி டேட்டாவை பயன்படுத்திய பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறையும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் பயனர்களுக்கு 5ஜி டேட்டா நன்மையும் உள்ளது. ஆனால் 5ஜி டேட்டாவிற்கு எப்யுபி லிமிட் - 28 நாட்களுக்கு 300ஜிபி ஆகும்.
5ஜி கவரேஜ் உள்ள பகுதிகளில் வசிக்கும் பயனர்களுக்கு மட்டுமே இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படும் என்பதையும், பயனரிடம் 5ஜி-க்கு இணக்கமான டிவைஸ் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இப்போதைக்கு இதுதான் சந்தையில் உள்ள சிறந்த மதிப்புள்ள 5ஜி திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்திற்கான ஒரு நாளைக்கான செலவு ரூ.9.98 ஆகும்.
முன்னரே குறிப்பிட்டபடி பல டெலிகாம் சரக்கிள்களில், வோடபோன் ஐடியாவின் மலிவான 5ஜி திட்டம் ஆக தற்போது ரூ.349 ரீசார்ஜ் உள்ளது. இந்த ரூ.349 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 1.5ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வோடபோன் ஐடியா இந்த திட்டத்தின் மூலமும் நுகர்வோருக்கு அதே அளவு 5ஜி டேட்டாவை வழங்குகிறது (அதாவது 28 நாட்களுக்கு 300ஜிபி டேட்டா என்கிற லிமிட்).
சமீபத்தில் (இம்மாத தொடக்கத்தில்) வோடபோன் ஐடியா 2 புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து இருந்தது: அவைகள் ரூ.1050 மற்றும் ரூ.2180 ஆகும். இந்த திட்டங்கள் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா ஆகிய இரண்டையும் வழங்குகின்றன. ஆனால் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5ஜி வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா ரூ.1050 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் புதிய ரூ.1050 திட்டமானது 84 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகள் கிடைக்கும் ரூ.1050 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டாவானது 28 நாட்களுக்கு 300ஜிபி என வரம்பிடப்பட்டு உள்ளதும் இங்கே குறிப்பிடத்தகது.
வோடபோன் ஐடியா ரூ.2180 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் புதிய ரூ.2180 திட்டமானது 180 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இதுவும் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது. இதுவும் 28 நாட்களுக்கு 300ஜிபி என வரம்பிடப்பட்ட 5ஜி டேட்டாவை வழங்குகிறது


Click it and Unblock the Notifications








