அசுர வளர்ச்சியில் ரியல்மி: மொபைல் விலையில் 7000mAh பேட்டரி உடன் Realme Pad Slim!

|

Realme நிறுவனம் விரைவில் Realme 10 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மி 10 ஸ்மார்ட்போன்கள் உடன் இணைந்து இதுவரை அறிவிக்கப்படாத ரியல்மி டேப்லெட் அறிமுகம் செய்ய இருப்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.

Realme Pad Slim

Realme Pad Slim

Realme நிறுவனத்தின் Realme Pad Slim டேப்லெட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Realme Pad Slim என பெயரிடப்பட்ட டேப்லெட் பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஆதரவு டேப்லெட் ஆக இது இருக்கும் எனவும் கேமிங் ஆதரவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த டேப்லெட் ஆக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Realme Pad Slim அம்சங்கள்

Realme Pad Slim அம்சங்கள்

சமீபகாலமாக ரியல்மி நிறுவனத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. ரியல்மி ஸ்மார்ட்போனுக்கான வாடிக்கையாளர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மியின் வளர்ச்சி இந்தியாவில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஜனவரி 9, 2023 அன்று ரியல்மி 10 போனை அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மி ஏற்கனவே இந்தியாவில் Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro+ 5G ஆகிய போனை அறிமுகம் செய்திருக்கிறது.

நான்காவது டேப்லெட் ஆக Realme Pad Slim

நான்காவது டேப்லெட் ஆக Realme Pad Slim

ஸ்மார்ட்போன் மட்டுமின்றி TWS இயர்போன்கள், வயர்லெஸ் அக்சஸரீஸ், பிசி மானிட்டர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு டேப்லெட்கள் உள்ளிட்ட பல பிரிவில் ரியல்மி நுழைந்திருக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் Realme Pad, Realme Pad Mini மற்றும் Realme Pad X ஆகியவை தற்போதே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வரிசையில் நான்காவது டேப்லெட் ஆக Realme Pad Slim இணைய இருக்கிறது.

Realme Pad Slimக்கான இரண்டு பிரத்யேக பட்டியல்கள் Flipkartல் வழங்கப்பட்டுள்ளது. அதில் ரியல்மி பேட் ஸ்லிம் விலை ரூ.32,999 என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Realme Pad ஸ்லிம் சிறப்பம்சங்கள்

Realme Pad ஸ்லிம் சிறப்பம்சங்கள்

Realme Pad ஸ்லிம் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், பிளிப்கார்ட் பட்டியலில் ரியல்மி பேட் ஸ்லிம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது இதை பயன்படுத்தி 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

7000 எம்ஏஎச் பேட்டரி

7000 எம்ஏஎச் பேட்டரி

Realme Pad Slim டேப்லெட் ஆனது 7000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டேப்லெட் 2000 x 1200 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 224PPI பிக்சல் அடர்த்தி உடன் கூடிய 10.4-இன்ச் முழு HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

சிறந்த கேமிங் டேப்லெட்

சிறந்த கேமிங் டேப்லெட்

இந்த டேப்லெட் இல் டூயல் கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. அவை இரண்டும் 8 எம்பி கேமராவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் டூயல் சிம் ஆதரவு இருக்கும் எனவும் குரல் அழைப்பு ஆதரவை இது வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 4G LTE/GSM நெட்வொர்க் ஆதரவு இதில் இருக்கும் என்றும் பொழுதுபோக்கு மற்றும் கேமிங்கிற்கு இது ஏற்றதாக இருக்கும் எனவும் ரியல்மி சுட்டிக்காட்டி இருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி

Realme Pad Slim ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். Realme நிறுவனம் பிளிப்கார்ட்டில் Realme Pad Slimஐ பிரத்யேகமாக விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரியல்மி நிறுவனம் Realme Pad Slim தொடர்பான எந்த டீஸரையும் இதுவரை பகிரவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பிரதான பயன்பாடாக டேப்லெட்

பிரதான பயன்பாடாக டேப்லெட்

ஆன்லைன் வகுப்பு, கேமிங் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு டேப்வெட் என்பது பிரதானமாகிவிட்டது. சிறந்த டேப்லெட் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Realme Pad Slim Launching Soon in India With 7000mAh Battery at Mid Range Price: Listed on Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X