புது ரியல்மி 4K ஸ்மார்ட் டிவி ஸ்டிக், கேமிங் டிரிக்கர் சாதனங்களுக்கு சலுகை.. சிறப்பு விற்பனை எப்போது?

|

ரியல்மி நிறுவனம் புதிய மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வை நடத்தியது, அங்கு நிறுவனம் புதிய பிரீமியம் இடைப்பட்ட ஜிடி ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. இத்துடன் புதிய 4 கே ஸ்மார்ட் டிவி கூகுள் ஸ்டிக், ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் கேமிங் பாகங்கள் உள்ளிட்ட சில புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய சாதனங்கள் பற்றிய விலை மாற்று விற்பனை விபரங்களைப் பார்க்கலாம்.

Realme 4K ஸ்மார்ட் டிவி கூகுள் ஸ்டிக்

Realme 4K ஸ்மார்ட் டிவி கூகுள் ஸ்டிக்

Realme இந்தியாவின் முதல் கூகுள் ஸ்டிக்கை அறிமுகப்படுத்தியது. ரியல்மி 4 கே ஸ்மார்ட் டிவி கூகுள் ஸ்டிக் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஸ்மார்ட் ஸ்டிக் உள்ளமைக்கப்பட்ட பொழுதுபோக்கு பயன்பாடுகள், பல இணைப்புகள் மற்றும் கூகுள் டிவியால் இயக்கப்படுகிறது. இது 60fps மற்றும் HDR10+ இல் 4K ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது. கூகுள் ஸ்ட்ரீமிங் ஸ்டிக்கின் விலை ரூ. 3,999 ஆக இருக்கிறது.

சலுகை விலையில் வாங்க கிடைக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்?

சலுகை விலையில் வாங்க கிடைக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்?

இருப்பினும், இதை நீங்கள் வெறும் ரூ.2,999 விலையில் ரியல்மி பெஸ்டிவல் விற்பனையின் போது வாங்கலாம். சாதனத்தின் முதல் விற்பனை தேதியை ரியல்மி இன்னும் அறிவிக்கவில்லை. இந்த டிவி ஸ்டிக் உங்கள் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றக்கூடியது.

பால்வெளி மையத்திலிருந்து வெளிவந்த ரேடியோ சிக்னல்.. மர்மத்தை கட்டவிழ்க்க போராடும் வானியலாளர்கள்..பால்வெளி மையத்திலிருந்து வெளிவந்த ரேடியோ சிக்னல்.. மர்மத்தை கட்டவிழ்க்க போராடும் வானியலாளர்கள்..

ரியல்மி ப்ரிக் ப்ளூடூத் ஸ்பீக்கர்

ரியல்மி ப்ரிக் ப்ளூடூத் ஸ்பீக்கர்

ஸ்பீக்கர் டைனமிக் பாஸ் பூஸ்ட் டிரைவர்கள், ஸ்டீரியோ இணைத்தல், சமநிலை முன்னமைவுகள், பாஸ் ரேடியேட்டர்களுடன் வருகிறது. ஸ்பீக்கருக்கு சமீபத்திய ப்ளூடூத் இணைப்பு விருப்பங்கள் கிடைப்பதாக ரியல்மி கூறுகிறது. Realme ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை ரூ. 2,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை நீங்கள் இன்னும் கம்மியான விலையில் வாங்க முடியும், Realme பெஸ்டிவல் டே சேல்ஸ் விற்பனை போது இதை ரூ. 2, 499 விலையில் வாங்கலாம். இதன் முதல் விற்பனை அக்டோபர் 18 மதியம் 12 மணிக்கு நடைபெறும்.

ரியல்மி பட்ஸ் ஏர் 2

ரியல்மி பட்ஸ் ஏர் 2

ரியல்மி பட்ஸ் ஏர் 2 ஆக்டிவ் நாய்ஸ் கான்சலேஷன் (ANC) உடன் வருகிறது. இது 25 மணிநேர பின்னணி நேரம் பிளேபேக், 88 எம்எஸ் சூப்பர் லோ லேடென்சி மற்றும் 10 மிமீ டயமண்ட்-கிளாஸ் ஹை-ஃபை டிரைவர் உடன் வருவதாக நிறுவனம் கூறியுள்ளது. ரியல்மி பட்ஸ் ஏர் 2 சாதனத்தின் விலை ரூ. 3,299 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை நீங்கள் குறைவான விலையில் வாங்க வாய்ப்புள்ளது. Realme பண்டிகை நாட்கள் விற்பனையின் போது இதை வெறும் ரூ. 2,599 விலையில் வாங்கலாம். முதல் விற்பனை அக்டோபர் 18 மதியம் 12 மணிக்கு நடக்கும்.

ரெட்மி நோட் 10 சீரிஸ் போன்கள் வாங்க அருமையான வாய்ப்பு.. சிறந்த சலுகையைத் தவறவிடாதீர்கள்..ரெட்மி நோட் 10 சீரிஸ் போன்கள் வாங்க அருமையான வாய்ப்பு.. சிறந்த சலுகையைத் தவறவிடாதீர்கள்..

ஸ்மார்ட்போன் கேமிங் பாகங்கள்

ஸ்மார்ட்போன் கேமிங் பாகங்கள்

ரியல்மே கூலிங் பேக் கிளிப் நியோ, டைப்-சி சூப்பர் டார்ட் கேம் கேபிள் மற்றும் மொபைல் கேம் டிரிகரை அறிமுகப்படுத்தியுள்ளது. Realme கூலிங் பேக் கிளிப் நியோ விரைவான குளிர்ச்சி அம்சத்துடன் வருகிறது. இது வெறும் ரூ. 999 என்ற விலையில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Realme டைப் சி SuperDart கேமிங் கேபிள் சார்ஜ்

Realme டைப் சி SuperDart கேமிங் கேபிள் சார்ஜ்

Realme டைப் சி SuperDart கேமிங் கேபிள் சார்ஜ், இந்த சாதனம் கேமிங் செய்துகொண்ட பயனர்களை சார்ஜிங் செய்துகொள்ள அனுமதிக்கிறியாது. கேமிங் அனுபவத்தை எளிதாக அணுக வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை விலை வெறும் ரூ. 599 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் அக்டோபர் 18 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.

Realme மொபைல் கேம் டிரிக்கர்

Realme மொபைல் கேம் டிரிக்கர்

Realme மொபைல் கேம் டிரிக்கர் சாதனம் சிறந்த விளையாட்டு அனுபவத்தை வழங்க கேமிங் பட்டன்கள் மற்றும் கேமிங் மவுஸ் தொழில் நுட்ப அனுபவத்துடன் வருகிறது. இந்த ரியல்மி கேமிங் டிரிக்கர் விலை ரூ. 699 மட்டுமே. இதன் முதல் விற்பனை அக்டோபர் 18 மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ரியல்மி நிறுவனம் நடத்தும் ரியல்மி பெஸ்டிவல் டே சேல்ஸ் விற்பனையின் போது பயனர்களுக்கு ஏராளமான சலுகை கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme launches Smart TV Google Stick Bluetooth speaker and gaming accessories Check price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X