ஆரம்பமே சூப்பர் ஆஃபர்.. நாளை விற்பனைக்கு வரும் புது Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme Narzo 100 Lite 5G) ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் நாளை (ஏப்ரல் 21) முதல் முறையாக அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி விலை: 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது. மேலும் இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,499 விலையிலும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.16,499 விலையிலும் வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடியும் உள்ளது.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 100 Lite 5G specifications): 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 180Hz டச் சாம்பிளிங் ரேட், 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா உடன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 1080P வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதுவும் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted fingerprint sensor) வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவும் உள்ளது. இதுதவிர MIL-STD-810H புரொடெக்சன் ஆதரவும் இதில் உள்ளது.

குறிப்பாக 7000mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
realme UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ (Galileo) யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








