Home
Mobile

ஆஃபரை அள்ளி வீசுது அமேசான்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. Realme 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

அமேசான் தளத்தில் தற்போது mega deal days எனும் சிறப்பு விற்பனையில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் அட்டகாசமான ரியல்மி 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 6 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆஃபரை அள்ளி வீசுது அமேசான்.. Realme 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 90X 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm)சிப்செட் உடன் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி 2 ஜிபியு (ARM Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுவும் 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

ஆஃபரை அள்ளி வீசுது அமேசான்.. Realme 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

இந்த ரியல்மி போன் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட ராணுவ தர சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த ரியல்மி போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவு இந்த ரியல்மி போனில் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் எடை 212 கிராம் ஆகும்.

மேலும் 7000mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 90X 5G available 6 percent discount At Amazon Mega Deal Days sale: check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X