மொபைல் போன்களுக்குள் "வரும்" இரிடியம்.. அதனால் என்ன நடக்க போகுதுன்னு சொன்னா நம்புவீங்களா?

|

இரிடியம் (Iridium) என்றதுமே, தீங்கு விளைவிக்கும் ஒரு இராசயன பொருள் (Chemical Element) ஆனது, எதோ ஒரு வடிவத்தில் மொபைல் போன்களுக்குள் சேர்க்கப்பட உள்ளது என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்!

உண்மையில், இரிடியம் என்கிற கெமிக்கல் எலிமெண்ட் ஆனது மொபைல் போன்களுக்குள் வரப்போவதில்லை; மாறாக இரிடியம் "வழியாக" ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்மை கிடைக்கவுள்ளது! அதென்ன நன்மை? இதற்காக இரிடியம் தேர்வு செய்யபப்ட்ட என்ன காரணம்? இதோ விவரங்கள்:

முதலில் SOS என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள  வேண்டும்!

முதலில் SOS என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும்!

இரிடியம் வழியாக நமக்கு (அதாவது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு) என்ன கிடைக்க போகிறது என்பதை பற்றி பேசும் முன், எஸ்ஓஎஸ் (SOS) என்கிற எமர்ஜென்சி அம்சத்தை (Emergency Feature) பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் இரிடியம் வழியாக நமக்கு கிடைக்கவுள்ள நன்மையை பற்றி நீங்கள் புரிந்துகொள்ள முடியும்!

அறியாதோர்களுக்கு, எஸ்ஓஎஸ் என்பது செல்லுலார் நெட்வொர்க் (Cellulaar Network) இல்லாத இடங்களில் கூட செயற்கைக்கோள் இணைப்பின் (Satellite Connectivity) உதவியுடன் மெசேஜ்களை அனுப்ப உதவும் ஒரு அவசரகால அம்சம் ஆகும்.

அலெர்ட்! உங்க போனை 300-வது முறை சார்ஜ் செய்யும் போது.. வல்லுநர்கள் சொல்லும் ஷாக்கிங் தகவல்!அலெர்ட்! உங்க போனை 300-வது முறை சார்ஜ் செய்யும் போது.. வல்லுநர்கள் சொல்லும் ஷாக்கிங் தகவல்!

அவசரத்திற்கு கைகொடுக்க போகும் இரிடியம்!

அவசரத்திற்கு கைகொடுக்க போகும் இரிடியம்!

தற்போது வரையிலாக இந்த எஸ்இஎஸ் அம்சமானது, ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன்களில் (ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில்) மட்டுமே அணுக கிடைக்கிறது.

இதற்கிடையில் தான் பிரபல சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் (Qualcomm), அதன் ஸ்னாப்டிராகன் சாட்டிலைட்-ஐ (Snapdragon Satellite) வெளிப்படுத்தி உள்ளது.

இதன் கீழ், எமெர்ஜென்சி அம்சம் ஆன எஸ்ஓஎஸ், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சத்தின் பின்னணியில் இரிடியத்தின் ஆதரவு இருக்கும் என்பதையும் குவால்காம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இரிடியம் தேர்வு செய்யப்பட என்ன காரணம்?

இரிடியம் தேர்வு செய்யப்பட என்ன காரணம்?

குவால்காம் நிறுவனத்தின் கூற்றுப்படி, எஸ்ஓஎஸ் அம்சம் ஆனது ஸ்னாப்டிராகன் 5ஜி மோடம்-ஆர்எஃப் சிஸ்டம்ஸ் மூலம் இயக்கப்படும் மற்றும் இரிடியம் ஆப்ரேட்டட் சாட்டிலைட் கான்ஸ்டெல்லேஷன் ( Iridium operated satellite constellation) மூலம் ஆதரிக்கப்படும்.

இதற்காக இரிடியம் தேர்வு செய்யப்பட முக்கிய காரணம் - இரிடியமானது வெதர் ரெசிஸ்டென்ட் எல்-பேண்ட் ஸ்பெக்ட்ரமில் (Weather-resilient L-band spectrum) வேலை செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம், ஆண்ட்ராய்டு போன் தயாரிப்பாளர்களால் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலுமே தன் பயனர்களுக்கு கனெக்டிவிட்டியை (Connectivity) வழங்க முடியும்.

எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!

இந்த அம்சம், ஆண்ட்ராய்டு போன்களுக்கு எப்போது வந்து சேரும்?

இந்த அம்சம், ஆண்ட்ராய்டு போன்களுக்கு எப்போது வந்து சேரும்?

ஸ்னாப்டிராகன் சாட்டிலைட் வழியிலான எமர்ஜென்சி மெசேஜிங் அம்சம் ஆனது, அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் அணுக கிடைக்கும் என்று குவால்காம் தெரிவித்துள்ளது.

அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) ப்ராசஸர் மூலம் இயங்கும் போன்களில் மட்டுமே இந்த அம்சம் செயல்படும்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் - ஆண்ட்ராய்டுக்கான எஸ்ஓஎஸ் அம்சம் அறிமுகம் செய்யப்படும்.

இருப்பினும் தற்போது வரையிலாக எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் மற்றும் எந்தெந்த பகுதிகளில் இந்த அம்சம் கிடைக்கும் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும் எஸ்ஓஎஸ் அம்சமானது, மற்ற டிவைஸ்களிலும் வேலை செய்யுமா?

ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும் எஸ்ஓஎஸ் அம்சமானது, மற்ற டிவைஸ்களிலும் வேலை செய்யுமா?

ஆம், நிச்சயமாக வேலை செய்யும். இந்த ஸ்னாப்டிராகன் சாட்டிலைட் (Snapdragon Satellite) அம்சமானது - லேப்டாப்கள், டேப்லெட்டுகள், வாகனங்கள் மற்றும் ஐஓடி (IoT) உள்ளிட்ட பிற டிவைஸ்களுக்கும் விரிவாக்கப்படலாம் என்று குவால்காம் தெரிவித்துள்ளது.

"ஸ்னாப்டிராகன் சாட்டிலைட் ஈகோசிஸ்டம் (Snapdragon Satellite ecosystem) ஆனது வளர்ச்சி அடையும் போது, அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (Original equipment manufacturer - ​​OEM) மற்றும் ஆப் டெவலப்பர்கள், எங்கள் செயற்கைக்கோள் இணைப்பை பயன்படுத்தி தனித்துவமான பிராண்டட் சேவைகளை வேறுபடுத்தி வழங்க முடியும்" என்று குவால்காம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Qualcomm To Bring SOS Emergency Feature in Android Using Iridium Operated Satellite Constellation

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X