உங்க காட்டில் மழை தான்: குஷியின் உச்சியில் Nothing Phone (1) யூஸர்கள்!- விழித்துக் கொள்ளுங்கள்.!

|

Nothing Phone (1) கிளைஃப் லைட்களுடன் மின்னும் வகையிலான புதிய அப்டேட்டை நத்திங் நிறுவனர் கார்ல் பெய் வெளியிட்டுள்ளார். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ்1.5 இன் இரண்டாவது பீட்டா அப்டேட்டை வெளியிடுவதாக நிறுவனர் கார்ல் பெய் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த நத்திங் போன் பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

உங்க காட்டில் மழை தான்: குஷியின் உச்சியில் Nothing Phone (1) யூஸர்கள்!

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

இது பீட்டா பயனர்களுக்கான அப்டேட் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். விரைவில் இது அனைவருக்குமான அப்டேட் ஆக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீட்டா பயனர்களுக்கு தற்போது இந்த அப்டேட் கிடைக்கிறது. இதன் அப்டேட் அளவு 127 எம்பி ஆகும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ்1.5 இன் இரண்டாவது அப்டேட் இதுவாகும்.

Nothing Phone (1) மூலம் கிடைக்கும் நன்மைகள்

  • புதிய கிளிஃப் ரிங்டோன் மற்றும் வித்தியாசமான நோட்டிப்பிகேஷன் சவுண்ட்பேக் ஆதரவு.
  • டிஸ்ப்ளேயில் உள்ள மெனுவிற்கான புதிய வால்பேப்பர்கள் தொகுப்பு கிடைக்கிறது.
  • மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் மூலம் டூயல் சிம் கார்ட் பயன்படுத்தும் போது இரண்டு சிம் கார்டுக்கும் இடையே டேட்டா பயன்பாடு எளிதாக மாறிக் கொள்ளும்.
  • டிஸ்ப்ளே ஆன் மற்றும் ஆஃப் செய்யும் போது மென்மையான அனிமேஷன் தோற்றம் காட்டப்படும்.
  • முழு நத்திங் எக்ஸ் ஆப்ஸ்களும் இப்போது நத்திங் ஓஎஸ் இல் கிடைக்கும்.
  • இதுமட்டுமின்றி பல மேம்பாடுகள் இந்த அப்டேட் மூலம் கிடைக்கும்.

தொடர்ந்து அப்டேட் வெளியிடும் நத்திங்

தற்போதைய இந்த அப்டேட் பீட்டா பயனர்களிடையே சோதிக்கப்பட்டு வருகிறது. பீட்டா சோதனையில் கண்டறியப்படும் பிழைகள் சரிசெய்யப்பட்டு விரைவில் அனைவருக்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் நிறுவனம் தொடர்ந்து தங்களது பயனர்களுக்கான அப்டேட்டை வெளியிட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

Nothing Phone (1) அறிமுகமான தினத்தில் இருந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்களில் ஒருசில குறைபாடுகள் குறிப்பட்டாலும் விலைக்கேற்ற அம்சங்கள் இதில் இருக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது.

உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் நத்திங்

கட்டுப்பாடு தன்மையில் சில சிக்கல்களை சந்தித்து வருவதாக நத்திங் போன் (1) மீது புகார்கள் எழுந்தது. தொடர்ந்து இதை சரி செய்யும் வகையில் நத்திங் போன் (1) தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட நத்திங் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகளில் எந்த குறைபாடும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

உங்க காட்டில் மழை தான்: குஷியின் உச்சியில் Nothing Phone (1) யூஸர்கள்!

பல மேம்பட்ட அம்சங்கள்

ஐபோனுக்கு இணை போட்டியாக இருக்கும் என நத்திங் போன் (1) அறிமுகம் செய்யப்பட்டது. அந்தளவிற்கு போட்டியை ஏற்படுத்தியதா என்றால் அது கேள்விக்குறி தான். இருப்பினும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. டூயல் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் என பல மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

கெபாசிட்டிவ் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

6.5 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

4 வருட அப்டேட் உறுதி

மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 778G+ SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. நத்திங் ஃபோன் 1 ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் உடன் வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதிப்புப்புகளை பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) Gets Android 13 Update Second Time: Now Only Available for these Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X