பிச்சிக்குது விற்பனை.. ரூ.10,499 க்கு 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரூ.10,000 பட்ஜெட்டில் பக்கா ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) சரியான தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 15 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.10,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.550 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.10,499 விலைக்கு இந்த விவோ டி4 லைட் 5ஜி மாடலை வாங்கி கொள்ளலாம்.

விவோ டி4 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T4 Lite 5G Specifications): ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட்டை இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஸ் (Android 15 OS) மற்றும் 2 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைத்து உள்ளன. 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.
எச்டிபிளஸ் (HD+) ரெசொலுஷன், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி சென்சார் (Sony Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 2 எம்பி பொக்கெ சென்சார் கிடைத்து உள்ளது. மெயின் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. மேலும், 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கொடுத்து உள்ளது.
நைட் மோட், போர்ட்ராய்டு மோட், லைவ் போட்டோ போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்கு 5 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. நைட்போட்டோகிராபி என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க சூப்பர் நைட் மோட் (Super Night Mode) கிடைக்கிறது. மேலும், ஏஐ பீச்சர்கள் உள்ளன.
ஏஐ எரைஸ், ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மெண்ட், அல்டா எச்டி டாகுமெண்ட் உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (Al Screen Translation) கொடுக்கப்பட்டு உள்ளது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்ட IP64 ரேட்டிங் கிடைத்து உள்ளது. MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுத்து உள்ளது.
15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைத்து உள்ளது. 8.19 எம்எம் தடிமன் மற்றும் 202 கிராம் எடை கொடுத்து உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சிங்கிள் போர்டெட் ஸ்பீக்கர் கிடைக்கிறது. ப்ரிசம் ப்ளூ (Prism Blue), டைட்டானியம் கோல்டு (Titanium Gold) கலர்களில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








