எப்புட்றா.. இதுவரை இல்லாத தள்ளுபடி விலையில் Nothing Phone (1): குடியரசு தின விற்பனை 2023!

|

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை குடியரசு தின விற்பனையை அந்தந்த தளங்களில் நடத்தி வருகின்றன. இந்த விற்பனையில் பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் இரண்டு தளங்களும் போட்டிப்போட்டு தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த தள்ளுபடி தினங்களில் பிளிப்கார்ட்டில் Nothing Phone (1) அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

சிறந்த மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன்

சிறந்த மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன்

சிறந்த மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டால் அதில் நத்தங் போன் 1க்கு பிரதான இடம் இருக்கும். ஐபோனுக்கே போட்டியாக இருக்கும் என இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தளவு போட்டியை ஏற்படுத்தியதா என்றால் அது சந்தேகம் தான். ஆனால் விலைக்கேற்ற ஏணைய அம்சங்கள் மிகச் சிறந்த வகையில் இதில் இருக்கிறது.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை

பிளிப்கார்ட் விற்பனையில் சில ஐபோன் மாடல்கள் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20 வரை நடக்கிறது.

கூடுதலாக வங்கி சலுகை

கூடுதலாக வங்கி சலுகை

நத்திங் போன் 1 அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை இல்லாத குறைந்த விலையில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் தற்போது கிடைக்கிறது. தனித்துவ வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.25,999 என கிடைக்கிறது.

Flipkart குடியரசு தின விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி கார்ட்களை பயன்படுத்தி நத்திங் போன் 1 வாங்கினால் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் இரண்டுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் நத்திங் போன் 1 வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இதுவே சரியான நேரமாகும்.

தள்ளுபடி விவரங்கள்

தள்ளுபடி விவரங்கள்

பிளிப்கார்ட்டில் நத்திங் போன் 1 ஆனது தற்போது பிளாட் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதன்படி, நத்திங் போன் 1 இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.25,999 என கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் ரூ.24,999 என்ற விலையில் வாங்கலாம்.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆனது தள்ளுபடி விலையில் ரூ.27,999 என கிடைக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.35,499 என கிடைக்கிறது. இந்த அனைத்து வேரியண்டும் ரூ.1000 என்ற கூடுதல் தள்ளுபடியை பெறுகிறது.

அமோக வரவேற்பு

அமோக வரவேற்பு

Nothing Phone (1) அறிமுகமான தினத்தில் இருந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்களில் ஒருசில குறைபாடுகள் குறிப்பட்டாலும் விலைக்கேற்ற அம்சங்கள் இதில் இருக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து கிடைக்கும் அப்டேட்கள்

தொடர்ந்து கிடைக்கும் அப்டேட்கள்

கட்டுப்பாடு தன்மையில் சில சிக்கல்களை சந்தித்து வருவதாக நத்திங் போன் (1) மீது புகார்கள் எழுந்தது. தொடர்ந்து இதை சரி செய்யும் வகையில் நத்திங் போன் (1) தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட நத்திங் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகளில் எந்த குறைபாடும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பல மேம்பட்ட அம்சங்கள்

பல மேம்பட்ட அம்சங்கள்

ஐபோனுக்கு இணை போட்டியாக இருக்கும் என நத்திங் போன் (1) அறிமுகம் செய்யப்பட்டது. அந்தளவிற்கு போட்டியை ஏற்படுத்தியதா என்றால் அது கேள்விக்குறி தான். இருப்பினும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. டூயல் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் என பல மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

6.5 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 778G+ SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதிப்புப்புகளை பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) Available at a Never-Before-Seen Discount Price: Flipkart Big Saving Day Sale 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X