வந்ததும் ஆப்பு வைத்த Netflix CEO: மொத்த கவனமும் இந்தியர்கள் மீதுதான்.. தொட்டால் கெட்டோம்!

|

Netflix முன்னாள் சிஇஓ ரீட் ஹேஸ்டங்ஸ் கடந்த ஆண்டே பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை குறித்து உறுதி செய்தார். இதையடுத்து தற்போது புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரிகளான (CEO) கிரெக் பீட்டர் மற்றும் டெட் சரண்டோஸ் இதுகுறித்த கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை

பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை

முன்னதாகவே பல நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து நாடுகளிலும் விரிவு செய்யப்பட்டு மார்ச் 2023க்குள் முழுமையாக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் பலரும் இதற்கு தயாராகி வருகின்றனர்.

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், பயனர்கள் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் விளம்பர ஆதரவு சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தது.

வருவாயில் வீழ்ச்சியை சந்தித்த நெட்ஃபிளிக்ஸ்

வருவாயில் வீழ்ச்சியை சந்தித்த நெட்ஃபிளிக்ஸ்

வருவாயில் வீழ்ச்சியை சந்தித்த நெட்ஃபிளிக்ஸ் அதை அதிகரிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

நெட்ஃபிளிக்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ், பாஸ்வேர்ட் பகிர்வு விருப்பம் படிப்படியாக அனைவருக்கும் முடிவுக்கு வரும் என கடந்த ஆண்டே அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சாண்டோஸ் ஆகியோர் ப்ளூபெர்க் இடம் அளித்த ஒரு நேர்காணலில் நெட்ஃபிளிக்ஸ் கடவுச்சொல் பகிர்வு விருப்பம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் முடிவடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

விரைவில் அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை

விரைவில் அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை

எனவே நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்த நண்பர்கள் அல்லது பிறரை நம்பி இருக்கும் இந்தியர்கள், இனி தளத்தை பயன்படுத்த விரைவில் பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Netflix சேவைக்கு பணம் செலுத்தாமல் தளத்தை பயன்படுத்த பிறரை நம்பி இருக்கும் பயனர்கள் விரைவில் பணம் செலுத்தத் தொடங்குவார்கள் என பீட்டர்ஸ் கூறினார். பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கையில் சிஇஓக்கள், இந்தியா போன்ற நாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 15-20 மில்லியன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கின்றனர் என கூறப்படுகிறது.

எண்ணிக்கையை அதிகரிக்க புதிய வழிகள்

எண்ணிக்கையை அதிகரிக்க புதிய வழிகள்

Netflix நிறுவனம் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய வழிகளை முயற்சி செய்து வருகிறது. அதில் ஒன்று தான் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை ஆகும்.

நெட்ஃபிளிக்ஸ் தங்கள் பயனர்கள் கடவுச்சொல்லை பகிர்வதை தடுப்பதற்கு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. தற்போது நிறுவனம் விரைவில் இதை அனைவருக்கும் செயல்படுத்த இருக்கிறது.

தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வரும் நெட்ஃபிளிக்ஸ் இதை முடிவுக்கு கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுக்கத் தொடங்கி இருக்கிறது.

பயனர்கள் இனி உங்கள் பாஸ்வேர்ட்டை பகிர்ந்தால் நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் இனி உங்கள் பாஸ்வேர்ட்டை நண்பர்களுடனோ அல்லது வேறு ஒருவரிடமோ பகிர்ந்தால் அந்த நபர் உங்கள் சுயவிவரத்தை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பாஸ்வேர்ட் பகிர்ந்தால் கட்டணம் எவ்வளவு?

பாஸ்வேர்ட் பகிர்ந்தால் கட்டணம் எவ்வளவு?

பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு குறித்து நிறுவனம் கோஸ்டாரிகா, சிலி, பெரு மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் சோதனை செய்தது. அங்கு பாஸ்வேர்ட் பகிரும் நபர்களிடம் $3 (தோராயமாக ரூ.250) வசூலிக்கிறது. இந்தியாவில் ஒரு பகிர்வுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

IP முகவரிகள், சாதன ஐடிகள் மற்றும் கணக்கு செயல்பாடு மூலம் இந்த பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட இருக்கிறது.

அறிமுகமான புது ரீசார்ஜ் திட்டங்கள்

அறிமுகமான புது ரீசார்ஜ் திட்டங்கள்

மறுபுறம் பயனர்கள் இந்த நடவடிக்கையில் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என விளம்பரத்துடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனம் அறிமுகம் செய்தது. Basic with Ads திட்டங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நான்கு முதல் ஐந்து விளம்பரங்கள் வருவதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு விளம்பரங்களும் 15 முதல் 30 வினாடிகள் நீளம் இருப்பதாக கூறப்படுகிறது. உலகளாவிய விளம்பர திட்டங்களுக்கு என நெட்பிளிக்ஸ் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

720p வீடியோ தரத்தில் ஸ்ட்ரீமிங்

720p வீடியோ தரத்தில் ஸ்ட்ரீமிங்

திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் 720p வீடியோ தரத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் வரையறுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் இந்த திட்டத்தில் அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது.

இந்த திட்டத்தில் நீங்கள் பார்க்க முடியாத நிகழ்ச்சிகள் லாக் (பூட்டு) ஐகான் உடன் காட்டப்படும். அதேபோல் ஆப்பிள் டிவி உள்ளிட்ட சில சாதனங்களில் விளம்பர அடுக்கு திட்டங்கள் வேலை செய்யாது எனவும் கூறப்படுகிறது.

விளம்பர ரீசார்ஜ் திட்ட விலை

விளம்பர ரீசார்ஜ் திட்ட விலை

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டிஸ்னி ப்ளஸ் இன் விளம்பர அடுக்கு ரீசார்ஜ் திட்டம் $7.99 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ரீசார்ஜ் திட்ட விலை $6.99 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நெட்பிளிக்ஸ் திட்டத்தின் விலையை விட டிஸ்னி ப்ளஸ் விலை $1 அதிகம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஒவ்வொரு நாட்டிலும் நெட்ஃபிளிக்ஸ் ரீசார்ஜ் திட்டத்தின் விலை மாறுபடுகிறது. இந்தியாவில் தற்போது இருக்கும் விலைக்கு இணையாக தான் விளம்பர சந்தா திட்டத்தின் விலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Netflix New CEO Confirms: Everyone Want to Pay Extra Who Sharing Username and Password to Others

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X