உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க

|

OTT தளங்களில் முன்னணியில் இருக்கும் நெட்ஃபிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்தியாவில்
நெட்ஃபிக்ஸ் தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறுவேண்டும். அமேசான் பிரைம் விட பல சிறப்பான அம்சங்களை வழங்குகிறது
இந்த நெட்ஃபிக்ஸ்.

ஆனாலும் நெட்ஃபிக்ஸ் நிறுவனம் பொருளாதார மந்த நிலை காரணமாக செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தான், நெட்ஃபிக்ஸ் அக்கவுண்ட்டை ஷேர் செய்யும் வசதி முடக்கப்பட்டுள்ளது.

புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங

புதிய தொழில்நுட்பம்?

குறிப்பாக இனி பயனர்கள் தங்கள் நண்பர்களுடன் நெட்ஃபிக்ஸ் கணக்கைப் பகிர்ந்து கொண்டால் அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பயனர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் பல புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது நெட்ஃபிக்ஸ். அதாவது தற்போது நெட்ஃபிக்ஸ் நிறுவனம் ஸ்பாஷியில் (spatial) தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய திட்மிட்டடுள்ளது.

தரமான ஆடியோ வசதி

குறிப்பாக இந்த spatial ஆடியோ என்பது மேம்பட்ட ஆடியோ தொழில்நுட்ப ஆகும். குறிப்பாக இது தனித்துவமான ஆடியோ அனுபவத்தை வழங்கும். இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் 360 டிகிரி கோணத்தில் துல்லியமான ஆடியோவை பயனர்களின் செவிக்கு எட்டச் செய்யும் புதிய தொழில்நுட்பம்
ஆகும். மேலும் இந்த spatial ஆடியோ தொழில்நுட்பத்தைக் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் போன்களில் பயன்படுத்தி உள்ளது.

புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங

அதேபோல் ஸ்பாஷியல் ஆடியோவுடன் கூடிய திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று சமீபத்திய வலைப்பதிவு இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயனர்கள் சிறந்த ஆடியோ வசதியுடன் திரைப்படங்களை பார்க்க முடியும். இந்த ஆடியோ புதிய அனுபவத்தைத் தரும்.

நெட்ஃபிக்ஸ் பிரீமியம் பிளான்

மேலும் தற்போது ரூ.649 என்ற நெட்ஃபிக்ஸ் பிரீமியம் பிளானில் சப்ஸ்கிரைப் செய்துள்ள பயனர்களுக்கான டவுன்லோடு சாதனங்களின் எண்ணிக்கையும்
அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதுகுறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவின் இயக்குநர் அரோரா கூறுகையில், நெட்ஃபிக்ஸ் spatial
ஆடியோ மூலம், பிரீமியம் உறுப்பினர்கள் தங்களுக்கு பிடித்தமான படங்களை, வீடியோவை உயர்தர ஒலி நுட்பத்துடன் கண்டுகளிக்கலாம். பின்பு போன், டிவி, லேப்டாப், டேப்லெட் என எந்த சாதனத்தில் பார்த்தாலும், உயர்தர ஆடியோவை கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய அம்சம்

இந்த spatial ஆடியோ ஆனது 3டி ஆடியோ எஃபெக்ட்ஸ் ஆகும். குறிப்பாக இது 360 டிகிரி கோணத்தில் ஆடியோவை வழங்குகிறது. மேலும் spatial ஆடியோவில் உள்ள அம்சங்களை ஸ்பீக்கர்கள் அல்லது ஹோம் தியேட்டர் உபகரணங்கள் இல்லாமல் சாதாரணமான ஆடியோ டிவவைஸ் மூலம் கூட கேட்கலாம். கண்டிப்பாக இந்த புதிய ஆடியோ வசதிக்குப் பயனர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நெட்ஃபிக்ஸ் தொடங்கப்பட்ட காலத்தில் அதிக வரவேற்பையும் நல்ல வருமானத்தையும் பெற்று வந்தது. குறிப்பாக ஒரே ஓடிடி தளமாக இருந்த போது ராஜா போல் உலா வந்தது. ஆனால் நெட்ஃபிக்ஸ் தளத்திற்குப் போட்டியாக அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற பல தளங்கள் வந்தது. இதனால் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தால் பெரிய பயனர் எண்ணிக்கைகளை அடைய முடியவில்லை.

புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங

ஆனாலும் நெட்ஃபிக்ஸ் நிறுவனம் புதிய திட்டங்கள், சலுகைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. தற்போது இதனால் தான் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல் நெட்ஃபிக்ஸ் சந்தாவை வைத்திருப்பது ஒரு ஆடம்பரமாக இருந்த நாட்கள் மாறி அனைத்து மக்களின் கைகளில் நெட்ஃபிக்ஸ் சரளமாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Netflix adds new spatial audio technology to movies and shows: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X