எதிர்பார்க்காத நேரத்தில் எகிறி அடித்த Motorola: குஷியின் உச்சியில் இந்திய மோட்டோ பயனர்கள்!

|

ஏறத்தாழ பெரும்பாலான மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஜியோ 5ஜி ஆதரவு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. பல்வேறு முக்கிய பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பயனர்களே 5ஜி அப்டேட்டுக்கு காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் Motorola எதிர்பார்க்காத விதமாக பெரும்பாலான 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி அணுகல் ஆதரவை அறிவித்துள்ளது.

எதிர்பார்க்காத நேரத்தில் எகிறி அடித்த Motorola: மோட்டோ பயனர்கள் குஷி

முதல் நிறுவனமாக மோட்டோரோலா

5G திறன் உடனான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய உலகின் முதல் பிராண்டுகளில் மோட்டோரோலாவும் ஒன்றாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி சேவைகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 5ஜி கிடைக்கும் பகுதிகளில் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டிருப்பவர்கள் அனைவராலும் 5ஜி சேவையை பயன்படுத்த முடியாது. காரணம், ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் ஆன அப்டேட்டை அந்தந்த நிறுவனங்கள் வெளியிட வேண்டும். அதன்படி தற்போது மோட்டோரோலா நிறுவனம் அப்டேட் வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி

மோட்டோரோலா நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து அதன் True 5G சேவைகளை அனுபவிக்க பயனர்களை அனுமதிக்கிறது. தற்போது, ரிலையன்ஸ் ஜியோவின் 5G சேவைகள் இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களில் கிடைக்கின்றன, ஜியோ வாடிக்கையாளர்கள் அதன் அதிவேக 5ஜி இணையத்தை இலவசமாக அனுபவிக்க முடியும். இதற்கென ஜியோ ஒரு "வெல்கம் ஆஃபரை" வழங்குகிறது.

மோட்டோரோலா 5ஜி ஆதரவு

Lenovo-க்கு சொந்த நிறுவனமான மோட்டோரோலா 5ஜி ஆதரவுடனான பல ஸ்மார்ட்போன்களை வெவ்வேறு விலைப் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் பெரும்பாலான மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஜியோ 5ஜி சேவையை அனுபவிக்கலாம். ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் பட்டியல் குறித்து பார்க்கையில், அது Motorola Edge 30 Ultra, Motorola Edge 30 Fusion, Moto G62 5G, Motorola Edge 30, Moto G82 5G, Motorola Edge 30 Pro, Moto G71 5G, Moto G51 5G மற்றும் Motorola Edge 20 ஆகியவை அடங்கும்.

ஏர்டெல் 5ஜி சேவையும் உண்டு

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஏர்டெல் 5ஜி ப்ளஸ் சேவையும் கிடைக்கிறது. டெல்லி, இந்தூர், மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி, பானிபட், குருகிராம், குவஹாத்தி, பாட்னா, லக்னோ, சிம்லா, இம்பால், அகமதாபாத், விசாகப்பட்டினம் மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள மோட்டோரோலா பயனர்கள் தங்கள் போனில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

எதிர்பார்க்காத நேரத்தில் எகிறி அடித்த Motorola: மோட்டோ பயனர்கள் குஷி

Jio 5G சேவை

Jio 5G சேவைகள் கிடைக்கும் பகுதிகள் குறித்து பார்க்கையில் டெல்லி, மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, நாத்வாரா, புனே, குருகிராம், நொய்டா, காஜிதாபாத், ஃபரிதாபாத் மற்றும் குஜராத்தின் அனைத்து 33 மாவட்ட தலைமையகங்களிலும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

5ஜி சேவை இயக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

எந்த ஒரு ஸ்மார்ட்போன் பயனர்களும் ஜியோ அல்லது ஏர்டெல் 5ஜி சேவையை இயக்குவதற்கு சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் ஐஓஎஸ் இல் இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போனில் ஓஎஸ் அப்டேட் செய்வது மிக அவசியம். செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சாஃப்ட்வேர் என்ற தேர்வுக்குள் சென்று உங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஓஎஸ் அப்டேட் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இலவசமாக தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவில்லை. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 2 மாதங்களுக்குள் 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஏர்டெல் 5ஜி சேவை

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இலவசமாக தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவில்லை. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 2 மாதங்களுக்குள் 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

எதிர்பார்க்காத நேரத்தில் எகிறி அடித்த Motorola: மோட்டோ பயனர்கள் குஷி

தயாராக இருப்பது நல்லது

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைப்பை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து இரண்டு நிறுவனங்களும் முணைப்போடு செயல்பட்டு வேகமாக 5ஜி சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே 5ஜி சேவைக்கு அனைவரும் தயாராக இருப்பது நல்லது.

Best Mobiles in India

English summary
Motorola 5G Smartphone Users Now Can Use Jio and Airtel 5G Service: Here the Smartphone List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X