வெறும் ரூ.249-க்கு இவ்ளோ நன்மைகளா? பலருக்கும் தெரியாத BSNL-ன் சீக்ரெட் ரீசார்ஜ்!

|

பல பிஎஸ்என்எல் (BSNL) பயனர்களுக்கே கூட தெரியாத ஒரு சீக்ரெட் ரீசார்ஜ் திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

அதென்ன திட்டம்? அதை சீக்ரெட் ரீசார்ஜ் என்று கூற என்ன காரணம்? குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ரூ.249 திட்டம் - ஏன் ஒரு சீக்ரெட் திட்டமாக உள்ளது?

ரூ.249 திட்டம் - ஏன் ஒரு சீக்ரெட் திட்டமாக உள்ளது?

ஏனென்றால், இப்படி ஒரு ரீசார்ஜ் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அதற்கு 2 முக்கியமான காரணங்களும் உள்ளன.

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது பெரிய அளவில் விளம்பரம் செய்யாத ஒரு நிறுவனம் ஆகும். ஆகையால் நல்ல திட்டமாகவே இருந்தாலும் கூட, அது பெரும்பாலான பயனர்களை சென்றடைவது இல்லை!

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் பல வகையான பட்ஜெட்டின் கீழ், பல வகையான திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஆகையால் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கண்களில் ரூ.249 சிக்காமல் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

இதுவும் போச்சா.. பலரும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய திட்டத்தை சத்தம் போடாமல் நீக்கிய BSNL! இனிமேல்?இதுவும் போச்சா.. பலரும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய திட்டத்தை சத்தம் போடாமல் நீக்கிய BSNL! இனிமேல்?

ரூ.249 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரூ.249 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரூ.249 திட்டமானது மொத்தம் 9 வெவ்வேறு ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகலை வழங்கும் ஒரு ஓடிடி பண்டில் (OTT Bundle) ரீசார்ஜ் ஆகும். அதாவது ஓடிடி நன்மைகளை மட்டுமே வழங்கும் ஒரு எக்ஸ்ட்ரா பிராட்பேண்ட் ரீசார்ஜ் (Broadband Recharge) ஆகும்.

இன்னும் தெளிவாக சொல்ல உங்களுடைய பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் எந்தவிதமான ஓடிடி நன்மையும் இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ரூ.249 மதிப்பிலான ஓடிடி பண்டிலை ரீசார்ஜ் செய்தால் போதும், உங்களுக்கு 9 வெவ்வேறு ஓடிடி ஆப்களுக்கான இலவச அணுகல் கிடைக்கும்!

இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன ஓடிடி நன்மைகள் கிடைக்கும்?

இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன ஓடிடி நன்மைகள் கிடைக்கும்?

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பிஎஸ்என்எல்-ன் ரூ.249 திட்டமானது ஒன்பது ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகலை வழங்கும்.

அவைகள் ஜீ5 (ZEE5), சோனிலைவ் (SonyLIV), வூட் செலெக்ட் (Voot Select), யப் டிவி (Yupp TV), ஆஹா (aHa), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஹங்காமா (Hungama), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஆகும்.

அடிச்சது அதிர்ஷ்டம்! திருப்பூரில் உள்ள Jio யூசர்களுக்கு இலவச 5G டேட்டா.. பெறுவது எப்படி?அடிச்சது அதிர்ஷ்டம்! திருப்பூரில் உள்ள Jio யூசர்களுக்கு இலவச 5G டேட்டா.. பெறுவது எப்படி?

ரூ.249 திட்டத்தில் மேலும் 2 முக்கியமான வசதிகளும் உள்ளன!

ரூ.249 திட்டத்தில் மேலும் 2 முக்கியமான வசதிகளும் உள்ளன!

ரூ.249-ஐ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களால், ஒரே லாக்-இன் (Login) வழியாக பல தளங்களில் உள்ள கன்டென்ட்களை (Content) பார்க்க முடியும். அதாவது நீங்கள் அனைத்து ஓடிடி தளங்களுக்கும் தனித்தனியாக பணம் செலுத்தி, தனித்தனியாக லாக்இன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை!

அதுமட்டுமின்றி டிவி (TV), ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்லெட் (Tablet) அல்லது லேப்டாப் (Laptop) என பல வகையான டிவைஸ்களில் இருந்து ஓடிடி கன்டென்ட்களை பார்த்து ரசிக்கலாம்!

இந்த திட்டம் யாருக்கெல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

இந்த திட்டம் யாருக்கெல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

நீங்கள் மிகவும் மலிவான, அதாவது ஓடிடி நன்மைகளுடன் தொகுக்கப்படாத பிராட்பேண்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்து இருந்தால். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பிஎஸ்என்எல்-ன் ரூ.399, ரூ.449, ரூ.499 போன்ற திட்டங்களை ரீசார்ஜ் செய்து இருந்தால்..

அதே சமயம் மேற்கண்ட ஓடிடி நன்மைகளையும் அணுக விரும்பினால், ரூ.249 ரீசார்ஜ் ஆனது முழுக்க முழுக்க உங்களுக்கான ஒரு திட்டமாகும். இது ஒரு மாதாந்திர சந்தா கட்டணம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்!

சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!

ரூ.329-க்கு குட்-பை சொன்ன பிஎஸ்என்எல்!

ரூ.329-க்கு குட்-பை சொன்ன பிஎஸ்என்எல்!

அறியாதோரகளுக்கு, தற்போது ரூ.399 திட்டம் தான் பிஎஸ்என்எல்-ன் என்ட்ரி-லெவல் பிராட்பேண்ட் திட்டமாகும். ஏனென்றால் அதை விட மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த ரூ.329 திட்டம், பிராட்பேண்ட் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ரூ.329 திட்டமானது 1டிபி டேட்டாவை 20எம்பிபிஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் வழங்கியது. ரூ.399 ஆனது அதே 1டிபி டேட்டாவை 30 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் வழங்குகிறது!

Best Mobiles in India

English summary
Most of the BSNL Users Does Not Know This Secret Recharge Which Offers 9 OTT Apps Access For Rs 249

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X