27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?

|

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) தளம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. 'இப்போதான் மூடுறீங்களா? எப்போவோ செய்திருக்க வேண்டிய காரியம் இது' என்று சிலர் கிண்டல் செய்யலாம். ஆனால், இப்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தளம் மூடப்பட்டதற்கு 90s கிட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

அவர்களின் பழைய நண்பனான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தளத்திற்கு உருக்கமான பதிவுகளை டிவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். மைக்ரோசாப்ட் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடும் செய்தி இப்போது பெரிய தலைப்பாகியுள்ளது. 90களின் பயனர்களுக்குப் பெரிதும் பக்கத்துணையாக இருந்த வெப் பிரௌசர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நெட் எக்ஸ்புளோர் அறிமுகம்

இன்டர்நெட் எக்ஸ்புளோர் அறிமுகம்

இன்டர்நெட் எக்ஸ்புளோர் ஆட்-ஆன் தொகுப்பின் ஒரு பகுதியாக 1995 ஆம் ஆண்டில் முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு விண்டோஸ் 95 இயங்குதளத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இணைக்கப்பட்டு, இணைய உலகிற்கு மக்களை அழைத்துச் செல்லும் ஒரு முக்கிய பகுதியாக மாறியது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரௌசரின் பிற்காலப் பதிப்புகள் இலவசப் பதிவிறக்கங்களுக்குக் கிடைத்தது.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

ஒரு காலத்தில் டாப்பில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோர்

ஒரு காலத்தில் டாப்பில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோர்

விண்டோஸ் பயன்பாட்டாளர்களுக்கு இது இன் சர்வீஸ் போக்காகக் கிடைத்தது. Windows 95 இன் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) சேவை வெளியீடுகள் மற்றும் விண்டோஸின் பிந்தைய பதிப்புகளிலும் இது சேர்க்கப்பட்டது. இருப்பினும், 2003 ஆம் ஆண்டில், உலாவி 95 சதவீத பயன்பாட்டுப் பங்கைக் கொண்டு உச்சக்கட்ட புள்ளியை அடைந்தது. ஆனால் பிற நிறுவனங்களிலிருந்து புதிய உலாவிகள் வந்த பிறகு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் விதி தலைகீழாக மாறத்துவங்கியது.

அடிமட்ட வீழ்ச்சியடைந்த இன்டர்நெட் எக்ஸ்புளோர்

அடிமட்ட வீழ்ச்சியடைந்த இன்டர்நெட் எக்ஸ்புளோர்

இது இறுதியில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் பயனர் தளத்தை அடுத்த ஆண்டுகளில் எதிர்பாராத அடிமட்ட வீழ்ச்சியடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் என்ற புதிய உலாவியைக் கொண்டு வந்ததிலிருந்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் சேவை வீழ்ச்சியடையத் துவங்கியது என்பதும் மறுபக்க உண்மையாகும். உண்மையைச் சொல்லப் போனால், 2016 ஆம் ஆண்டு முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான அம்ச மேம்பாடுகள் எதுவும் வெளியிடப்படவே இல்லை.

Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்

ஃபாஸ்ட் பிரௌஸிங் கலாச்சாரத்திற்குள் ஐக்கியமான மக்கள்

ஃபாஸ்ட் பிரௌஸிங் கலாச்சாரத்திற்குள் ஐக்கியமான மக்கள்

ஆம், அப்டேட் என்று எதுவுமே வெளியிடப்படவில்லை. கூகிள் குரோம் இந்த நேரத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்திய ஒட்டுமொத்த பயனர் எண்ணிக்கையை தன் வசம் ஈர்த்திருந்தது. மக்களும், ஆமை வேகத்தில் நகரும் அப்டேட் செய்யப்படாத இன்டர்நெட் எஸ்ப்ளோரர் பிரௌசரை நிராகரித்து, ஃபாஸ்ட் பிரௌஸிங் கலாச்சாரத்திற்குள் ஐக்கியமாகிவிட்டார்கள். இதனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மெல்ல மெல்ல மக்களின் கவனத்தில் இருந்து வெளியேறத் துவங்கியது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மறைமுகமாக இன்னும் செயல்பாட்டில் உள்ளதா?

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மறைமுகமாக இன்னும் செயல்பாட்டில் உள்ளதா?

நாளடைவில் இந்த வெளியேற்றம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் படி செய்தது. ஒரு வகையில் நிறுவனத்தின் திட்டம் கூட மெதுவாகத் தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் நிரல் மேலாளர் சீன் லிண்டர்சே கூறுகையில், "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் எதிர்காலம் விண்டோஸ் 10 இல் மைக்ரோசாஃப்ட் எட்ஜில் உள்ளது" என்றார். "மைக்ரோசாஃப்ட் எட்ஜ் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட வேகமானது, பாதுகாப்பானது மற்றும்

ரூ.149 விலை முதல் தினசரி டேட்டா, வாய்ஸ் கால், SMS வேண்டுமா? அப்போ இந்த Jio திட்டங்களை பாருங்க..ரூ.149 விலை முதல் தினசரி டேட்டா, வாய்ஸ் கால், SMS வேண்டுமா? அப்போ இந்த Jio திட்டங்களை பாருங்க..

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் தளத்தில் இருக்கும் IE Mode பற்றி உங்களுக்குத் தெரியுமா?

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் தளத்தில் இருக்கும் IE Mode பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நவீன உலாவல் அனுபவமாக இருப்பது மட்டுமல்லாமல், பழைய, பாரம்பரிய இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான இணக்கத்தன்மையைக் கொண்டுள்ளது'' என்று அவர் கூறியுள்ளார். தெரியாதவர்களுக்கு, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்முறையில் IE Mode என்ற ஒரு பில்ட் இன் அம்சம் உள்ளமைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜில் இருந்து அந்த மரபு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அடிப்படையிலான இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளை நேரடியாக அணுக முடியும் என்கிறார் சீன் லிண்டர்சே.

ஜூன் 15, 2022 முதல் Internet Explorer முடக்கம்

ஜூன் 15, 2022 முதல் Internet Explorer முடக்கம்

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் இந்த பொறுப்பை ஏற்கும் திறன் கொண்டது மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 டெஸ்க்டாப் விண்டோஸ் 10 இன் சில பதிப்புகளில் இருந்து ஜூன் 15, 2022 முதல் ஓய்வு பெறும்".என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் 17, 2021 அன்று, Microsoft 356 Internet Explorer தளத்திற்கான ஆதரவை நிறுவனம் நிறுத்தியது. அதேபோல், மைக்ரோசாப்ட் குழு உலாவிக்கான ஆதரவை நவம்பர் 30, 2020 அன்று நிறுத்தியது. அறிக்கைகளின்படி, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) ஆனது ஜூன் 15, 2022 முதல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

மிக்ஸ்டு பீலிங்ஸில் இணையம்

மிக்ஸ்டு பீலிங்ஸில் இணையம்

இணையத்தில் உள்ளவர்கள், குறிப்பாக 90களின் பயனர்கள், IE இன் சமீபத்திய வளர்ச்சியைப் பற்றி அறிந்த பிறகு மிகுந்த ஏக்கத்தை உணர்கிறோம் என்று சென்டிமெண்டாக கமெண்ட் செய்துள்ளனர். நிச்சயமாக, இது எவ்வளவு மெதுவாக உள்ளது என்பதைப் பற்றியும் நிறைய நகைச்சுவை பதிவுகளும் பதிவிடப்பட்டுள்ளது. 90s கிட்ஸ்களின் ஏக்கம் ஒரு பக்கம், 2K கிட்களின் கேலி ஒரு பக்கம் என்று இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் முடக்கம் பற்றிப் பல கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளது. Internet Explorer பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Microsoft Is Shutting Down Internet Explorer After 27 Years and 90s Users Went Nostalgic : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X