அலெக்ஸாவைப் பயன்படுத்தி ரூ.40,000மதிப்புள்ள பொம்மைகளை வாங்கிய சிறுவர்கள்: வைரலாகும் வீடியோ.!

|

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக்கி விடுகிறது, வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் ஆப் மூலம் பல்வேறு உணவுகள், பொருட்கள், காய்கள் உள்ளிட்ட அனைத்தையும் எளிமையாக வாங்க முடியும். குறிப்பாக கிராமம் முதல் நகரம் வரை அதிகளவு மக்கள் ஆப் பயன்படுத்தி தான் பொருட்களை வாங்குகின்றனர்.

ரூ.40,000-மதிப்பில்..

ரூ.40,000-மதிப்பில்..

அதன்படி மிச்சிகன் (Michigan) மாகாணத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் கிறிஸ்மஸ் பொம்மைகளை ரூ.40,000-மதிப்பில்வாங்க மெய்நிகர் உதவியாளர் அலெக்ஸாவைப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக இவர்கள் அலெக்ஸாவைப் பயன்படுத்திஆன்லைனில் ஆர்டர் செய்தது அவர்களுடைய அம்மாவுக்கு தெரியாது.

பார்பி ட்ரீம்ஹவுஸ்

பார்பி ட்ரீம்ஹவுஸ்

பார்பி ட்ரீம்ஹவுஸ், பொம்மைகள் மற்றும் பி.ஜே. மாஸ்க் சிலைகள் உள்ளிட்ட சில பொம்மைகளை தான் இந்த குழந்தைகள் அலெக்ஸாவைப் பயன்படுத்தி வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக் நிறுவனத்தின் மற்றுமொரு அட்டகாசமான செயலி: ரெஸ்சோ.!டிக்டாக் நிறுவனத்தின் மற்றுமொரு அட்டகாசமான செயலி: ரெஸ்சோ.!

சிறுவர்களின் அம்மா

சிறுவர்களின் அம்மா

மேலும் அந்த சிறுவர்களின் அம்மா வீட்டுக்கு வந்த அந்த பொம்மைகளைப் பார்த்து யாரோ உறவினர்கள் தான் கிறிஸ்மஸ்-க்கு பரிசாக அனுப்பியுள்ளனர் என்று நினைத்துள்ளார். பின்பு தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தான் குழந்தைகள் பொம்மைகளை வாங்கியுள்ளனர் என்பது பிறகு தான் அந்த அம்மாவுக்கு தெரியவந்துள்ளது.

அடேங்கப்பா! அம்மாடியோ! இவ்வளவா! என்று உயர்ந்தது சுந்தர் பிச்சையின் ஊதியம்!அடேங்கப்பா! அம்மாடியோ! இவ்வளவா! என்று உயர்ந்தது சுந்தர் பிச்சையின் ஊதியம்!

அந்த வீடியோ

நடந்த இந்த சம்பவத்தை அந்த சிறுவர்களின் அம்மா, அவருடைய பேஸ்புக்கில் வீடியோவாக பதிவிட்டுள்ளார், அந்த வீடியோ வைரலாகி சுமார் 5மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

 நீங்கள் எவ்வளவு  செலவழித்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் எவ்வளவு செலவழித்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக அந்த வீடியோவில் நீங்கள் எவ்வளவு செலவழித்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று6 வயது மகள் அரிஸ்ஸாவையும், மற்றும அவளது தம்பி 4 வயது மகன் கேமையும் கேட்டார, அதற்கு முதலில்அந்த குழந்தைகள் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டனர், பிறகு ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து முடிந்து விட்டது.

உஷார்: இதில் ஏதாவது உங்கள் பாஸ்வேர்டா?- உடனடியாக மாற்றிவிடுங்கள்உஷார்: இதில் ஏதாவது உங்கள் பாஸ்வேர்டா?- உடனடியாக மாற்றிவிடுங்கள்

மேலும் அந்த சிறுவர்களின் அம்மா வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, அதேசமயம் அந்த சிறுவர்களின் நடவடிக்கையை பார்த்தால் சிரிப்பு தான் அதிகம் வர வைக்கிறது, இந்த வீடியோவை
கட்டுரையில் இணைந்துள்ளேன் நீங்களும் பாருங்கள்.

Best Mobiles in India

English summary
Michigan Kids used alexa to Bought Rs.40,000 worth toys with Mom's Credit Card: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X