Home
Mobile

இது செம்ம Vivo ப்ரோ.. 7200mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. LCD டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் விவோ ஒய்51 ப்ரோ 5ஜி (Vivo Y51 Pro 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 7200mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ஓர்ஜின் பீச்சர்களான ஓர்ஜின் ஐலேண்ட், ஏஐ கிரியேஷன் உள்ளிட்ட பீச்சர்களையும் கொண்டுள்ளது. இந்த விவோ ஒய்51 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ ஒய் சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் விலையில் கிடைப்பதால், தனி வரவேற்பு பெற்று வருகிறது. இதில் விவோ ஒய்51 ப்ரோ 5ஜி ஸ்மூத் ஓர்ஜின் ஓஎஸ் மற்றும் ஸ்மார்ட் ஏஐ பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விலை மற்றும் பீச்சர்களை பார்ப்பதற்கு முன்னதாக ஓர்ஜின் ஓஎஸ் பீச்சர்கள் மற்றும் டிசைனை பார்க்கலாம்.

இது செம்ம Vivo ப்ரோ.. 7200mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. LCD டிஸ்பிளே!

ஓர்ஜின் ஓஎஸ் பீச்சர்கள்

ஓர்ஜின் ஐலேண்ட் (Origin Island) கிடைக்கிறது. ப்ளோட்டிங் விண்டோ கிடைக்கும். நோட்டிபிகேஷன்கள் மற்றும் ரியல் டைம் அப்டேட்களுக்காக இது கிடைக்கிறது. ஐபோன்களின் கிடைக்கும் டைனாமிக் ஐலேண்ட் போல கிடைக்கிறது. போட்டோக்கள், நியூஸ், லிங்குகளை நேரடியாக ஓர்ஜின் ஐலேண்ட்டில் டிராக் செய்து கொள்ளலாம்.

பர்சனல் டிஜிட்டல் சேஃப் (Personal Digital Safe) போல பிரைவேட் ஸ்பேஸ் (Private Space) கிடைக்கிறது. ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்டன்ட் (AI Transcript Assistant), ஏஐ கிரியேஷன் (AI Creation), ஏஐ சூப்பர் லிங்க் (AI SuperLink) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. கேமராவில் ஏஐ எரைஸ் (AI Erase) உள்ளிட்ட பீச்சர் கிடைக்கிறது.

டிசைன் எப்படி?

மெட்டாலிக் கேமரா மாடியூல் (Metallic Camera Module) ரியர் கேமரா டிசைன் உள்ளது. ஒன்-பீஸ்-லைக் ஃபிரேம் (One-Piece-Like Frame) மற்றும் குவாட் கர்வ்ட் 3டி பேக் கன்பைன் (Quad Curved 3D Back Combine) கிடைக்கிறது. ஃபிரேம் மற்றும் பேக் பேனல் டூயல் ஷேட் லுக் கொடுத்து உள்ளது. பெஸ்டிவ் ரெட் (Festive Red), நோபல் கோல்டு (Noble Gold) கலர்களில் கிடைக்கிறது.

பீச்சர்கள் எப்படி?

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட்டை இந்த விவோ ஒய்51 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுத்து உள்ளது. 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் கிடைக்கிறது.

8 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டு உள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 219 கிராம் எடை உள்ளது. 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி பொக்கெ கேமரா கிடைக்கிறது.

8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த விவோ ஒய்51 ப்ரோ 5ஜி கொடுத்துள்ளது. 400 சதவீத வால்யூம் பூஸ்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speaker) கொடுக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும் இருக்கிறது.

மார்ச் 11ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flpikart) மற்றும் விவோ தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அறிமுக சலுகையில் ரூ.2,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட உள்ளது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த விவோ ஒய்51 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y51 Pro 5G With 7200mAh Battery 50MP Camera Launched in India Sale From March 11 via Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X