Xiaomi செஞ்சிட்டாப்ல.. Leica கேமரா, 6330mAh பேட்டரி, 100W சார்ஜிங், 16GB ரேம் உடன் புது போன் அறிமுகம்!
ஷாவ்மீ நிறுவனமானது சொன்னபடியே அதன் ஷாவ்மீ 17 (Xiaomi 17) ஸ்மார்ட்போனை இன்று (மார்ச் 11) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) மாடலுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் CrystalRes OLED டிஸ்பிளே
- 2656 x 1220 ரெசல்யூஷன்
- 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 300Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- 3500 நிட்ஸ் வரை பீக் பிரைட்னஸ்
- DCI-P3 கலர் கவரேஜ்
- 12-பிட் கலர் டெப்த்

- HDR10+ மற்றும் Dolby Vision ஆதரவு
- லோ ப்ளூ லைட், ஃப்ளிக்கர் இல்லாத செயல்பாடு மற்றும் சர்க்காடியன்-பிரெண்ட்லி வியூக்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ்கள்
- 3என்எம் ஸ்னாப்டிராகன்8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரேனோ ஜிபியு மற்றும் குவால்காம் ஏஐ எஞ்சின்
- 16GB வரை LPDDR5x ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 3D ஐஸ்லூப் கூலிங் சிஸ்டம்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஷாவ்மீ ஹைப்பர் ஓஎஸ் 3
- ஷாவ்மீயின் புதிய HyperAI தொகுப்பின் கீழ் கிடைக்கும் ஏஐ அம்சங்கள்
- Summilux லென்ஸ்களுடன் கூடிய Leica-வால் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1/1.31-இன்ச் லைட் ஃப்யூஷன் 950 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 60mm ஃபோகல் லென்த் மற்றும் OIS கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 102-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் செல்பீ கேமரா
- 30fps இல் 8K வீடியோ ரெக்கார்ட், 60fps இல் 4K ரெக்கார்ட் ஆதரவு
- டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- AI அடிப்படையிலான ஃபேஸ் அன்லாக் ஆதரவு
- 6330mAh பேட்டரி
- 100W வயர்டு ஹைப்பர்சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் ஹைப்பர்சார்ஜ் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
இந்தியாவில் ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் சலுகைகள்: இந்தியாவில் ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 512GB ஆப்ஷன் ரூ.99,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது
விற்பனை மற்றும் சலுகைகளை பொறுத்தவரை இது பிளாக், ஐஸ் ப்ளூ மற்றும் வென்ச்சர் கிரீன் ஆகிய 3 கலர்களில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி முதல் அமேசான் (Amazon), ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) வலைத்தளம் மற்றும் ஷாவ்மீ ரீடெயில் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.
ஷாவ்மீ நிறுவனத்தின் 'Never Run Out' வெளியீட்டு சலுகையின் ஒரு பகுதியாக, வாங்குபவர்கள் 256GB மாடலின் விலையில் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷனை பெறலாம். மார்ச் 13 முதல் மார்ச் 17 வரையிலான Early Bird காலத்தில், வாடிக்கையாளர்கள் ரூ.9,999 மதிப்புள்ள இலவச போன் டேமேஜ் ப்ரொடெக்ஷன் திட்டத்தையும் பெறலாம். இதோடு நான்கு மாதங்களுக்கான Spotify Premium, மூன்று மாதங்கள் Google AI Pro, மூன்று மாதங்கள் YouTube Premium மற்றும் ரூ.31,500 மதிப்புள்ள Jio சலுகைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








