கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் Airtel 5G அறிமுகம்! எந்தெந்த ஏரியாக்களில் கவரேஜ் கிடைக்கும்? இதோ லிஸ்ட்!

|

பார்தி ஏர்டெல் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள 4 நகரங்களில் தனது 5ஜி சேவைகளை (Airtel 5G) அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நகரங்கள் - 5கோயம்புத்தூர் (Coimbatore), ஓசூர் (Hosur), திருச்சி (Trichy) மற்றும் மதுரை (Madurai) ஆகும்!

5ஜி சேவைகளை அறிமுகம் செய்த கையோடு, மேற்கூறிய 4 நகரங்களில் எந்தெந்த பகுதிகளில் / ஏரியாக்களில் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கும் என்கிற பட்டியலையும் ஏர்டெல் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 52.. தமிழ்நாட்டில் மட்டும் 5!

மொத்தம் 52.. தமிழ்நாட்டில் மட்டும் 5!

கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதின் மூலம், தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளானது நாட்டின் 52 நகரங்களில் அணுக கிடைக்கின்றன.

அதேபோல சென்னையையும் சேர்த்து, தமிழகத்தில் உள்ள 5 நகரங்களில் ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் ஓசூரில் வசிப்பவராக இருந்தால், எந்தெந்த பகுதிகளில் / ஏரியாக்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் கவரேஜ் கிடைக்கும் என்கிற பட்டியல் இதோ:

திருச்சி:

திருச்சி:

- தில்லை நகர்
- ராக் ஃபோர்ட்
- கே.கே.நகர்
- கருமண்டபம்
- திருநகர்
- சஞ்சீவி நகர்
- ஸ்ரீரங்கம்,
- வள்ளுவர் சாலை
- செல்வபுரம்
- மேலூர் சாலை
- பி.ஹெச்.இ.எல்.

மதுரை:

மதுரை:

- கே.கே.நகர்
- கோச்சடை
- எல்லீஸ் நகர்
- பசுமலை
- மாட்டுத்தாவணி
- திருப்பரங்குன்றம்
- சோலைஅழகுபுரம்
- மீனாட்சி நகர்
- விரகனூர்
- நேதாஜி தெரு
- அலங்காநல்லூர் சாலை
- திருவள்ளுவர் நகர்
- கடச்சனேந்தல் சாலை
- பழங்காந்தம்

ஓசூர்:

ஓசூர்:

- பாரதிதாசன் நகர்
- மூகொண்டப்பள்ளி
- கணபதி நகர்
- சிப்காட் ஐ லேண்ட்
- பெரியார் நகர்
- அவலப்பள்ளி
- சாந்தி நகர்
- பழைய ஏஎஸ்டிசி ஹட்கோ
- விஓசி நகர்.

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர்:

- 100 அடி சாலை
- டவுன் ஹால்
- காந்திபுரம்
- சாய்பாபா காலனி
- ரத்தினபுரி
- கவுண்டம்பாளையம்
- டாடாபாத்
- சரவணம்பட்டி
- சத்தி சாலை
- உப்பிலிபாளையம்
- சேரன் மா நகர்
- ஆர்.எஸ்.புரம்
- போதனூர்

20x முதல் 30x முறை அதிக வேகம்!

20x முதல் 30x முறை அதிக வேகம்!

ஏர்டெல்லின் கூற்றுப்படி, நிறுவனத்தின் 5ஜி பிளஸ் நெட்வொர்க் ஆனது தற்போதைய 4ஜி நெட்வொர்க்குகளை விட 20x முதல் 30x அதிக வேகத்தை வழங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ அளவிற்கு இல்லையென்றாலும் கூட, ஏர்டெல் முடிந்த வேகத்தில் அதன் 5ஜி பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

மேலும் இந்நிறுவனம், வருகிற மார்ச் 2024 க்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட வேண்டும் என்கிற இலக்கையும் வைத்துள்ளது.

அறியாதோர்களுக்கு, ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் நெட்வொர்க் சேவைகள் அந்த இந்நிறுவனத்தின் 4ஜி நுகர்வோருக்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் "இலவசமாக" கிடைக்கும்!

Best Mobiles in India

English summary
List of Areas Where Airtel 5G Introduced and Coverage Available in Coimbatore Madurai Trichy Hosur

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X