வந்துச்சா.. வந்துச்சா.! WhatsApp-க்கு வரும் 4 புதிய வசதிகள்.. அப்டேட் வந்துச்சானு செக் பண்ணுங்க!

|

கடந்த 2022 ஆம் ஆண்டை போலவே, இந்த 2023 ஆம் ஆண்டிலும், வாட்ஸ்அப்பிற்கு (WhatsApp) பல வகையான புதிய அம்சங்கள் (New Features) அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அவைகளில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய 4 அம்சங்கள் உள்ளன. அதென்ன அம்சங்கள்? அதனால் வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கவுள்ள வசதிகள் என்னென்ன? இதோ விவரங்கள்:

04. கம்பானியன் மோட் (Companion Mode)

04. கம்பானியன் மோட் (Companion Mode)

கம்பானியன் மோட் (Companion Mode) என்பது வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் ப்ரைமரி அக்கவுண்ட்டில் (Primary Account) இருந்து லாக்-அவுட் செய்யாமலேயே - பல டிவைஸ்களின் வழியாக - ஒரே மொபைல் நம்பரின் கீழ் உள்ள அக்கவுண்ட்களில் லாக்-இன் செய்ய உதவும்.

தற்போது வரை சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ள கம்பானியன் மோட், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட போன்களை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒருவேளை உங்களிடம் ஒரு ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு ஐபோன் (iPhone) இருந்தாலும் கூட, அந்த இரண்டிலும் ஒரே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப் ஃப்ரொபைலை (WhatsApp Profile) பயன்படுத்த முடியும்.

ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!

03. வியூ ஒன்ஸ் டெக்ஸ்ட் (View Once Text)

03. வியூ ஒன்ஸ் டெக்ஸ்ட் (View Once Text)

உங்களில் பலருக்கும், வாட்ஸ்அப்பில் ஏற்கனவே அணுக கிடைக்கும் வியூ ஒன்ஸ் (View Once) அம்சம் பற்றிய அறிமுகமே தேவைப்படாது. போட்டோ, வீடியோ போன்ற மீடியா ஃபைல்களை (Media Files) ஷேர் செய்யும் போது, பெறுநர்கள் அதை ஒரே ஒருமுறை மட்டுமே பார்க்க அனுமதிக்கும் அம்சம் தான் வியூ ஒன்ஸ்.

தற்போது இந்த அம்சம் டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கும் (Text Messages) வரவுள்ளது. அதாவது வியூ ஒன்ஸ் டெக்ஸ்ட் (View Once Text) என்கிற அம்சத்தின் கீழ் அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசேஜ் ஆனது பெறுநரால் ஒருமுறை பார்த்த உடனேயே சாட்டில் இருந்து மறைந்துவிடும்.

இது குறிப்பிட்ட இரண்டு நபர்களுக்கு இடையேயான வாட்ஸ்அப் உரையாடலை ப்ரைவேட் ஆகவும், பாதுகாப்பானதாகவும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

02. சேர்ச் பை டேட் (Search by date)

02. சேர்ச் பை டேட் (Search by date)

வாட்ஸ்அப்பில் பலவகையான சேர்ச் (Search) அம்சங்கள் அணுக கிடைக்கிறது. சாட் விண்டோவில் (Chat Window) குறிப்பிட்ட சாட்-ஐ கண்டுபிடிப்பது தொடங்கி குறிப்பிட்ட வார்த்தைகளை கொண்ட மெசேஜ்கள் முதல், வாட்ஸ்அப்பில் பலவகையான சேர்ச் விருப்பங்கள் உள்ளன.

அந்த பட்டியலை சேர்ச் பை டேட்டும் (Search by date) இணைய உள்ளது. இது தேதி வாரியாக வாட்ஸ்அப் மெசேஜ்களை தேட அனுமதிக்கும் ஒரு சுவாரசியமா அம்சம் ஆகும்.

ஒருவேளை என்ன வார்த்தையை (Word) பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மெசேஜை தேடுவது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், சேர்ச் பை டேட் அம்சத்தின் கீழ் தேதி வாரியாக பழைய மெசேஜ்களை தேடலாம்.

இந்த அம்சத்தின் காலெண்டர் (Calendar) ஒன்றும் சேர்க்கப்படும், அதை கொண்டு குறிப்பிட்ட தேதியில் நிகழ்த்திய சாட்டிற்கு நேரடியாக செல்ல முடியும்.

கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!

01. டெஸ்க்டாப்பில் கால் டேப் (Desktop Call Tab)

01. டெஸ்க்டாப்பில் கால் டேப் (Desktop Call Tab)

இந்த 2023 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்பின் டெஸ்க்டாப் வெர்ஷனில் (Desktop Version) ஒரு பிரத்யேகமான கால் டேப் (Call Tab) அறிமுகம் செய்யப்படும். அதாவது லேப்டாப் வழியாகவும் கூட வாட்ஸ்அப் கால் (WhatsApp Call) செய்யும் ஆதரவு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த அம்சத்தின் கீழ், வாட்ஸ்அப் பயனர்களால் தங்களுடைய வாட்ஸ்அப் கால் தொடர்பான தகவல்களை மொபைல் மற்றும் டெக்ஸ்டாப் வெர்ஷன் என இரண்டிலுமே கண்காணிக்க முடியும். தற்போதைய நிலவரப்படி, இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டாவை (WhatsApp Beta) பயன்படுத்தும் சில விண்டோஸ் (Windows) பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது.

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் அம்சம், ஐபோன்களில் வீடியோ கால் செய்யும் போது பிஐபி (PIP) மோட்; அதாவது பிக்சர்-இன்-பிக்சர் மோட் மற்றும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் டைக்டரி (WhatsApp business directory) என இந்த 2023 ஆம் ஆண்டில் பல புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அவ்வப்போது, உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், ஆப்பிள் ஐபோன் மற்றும் டெக்ஸ்டாப்களுக்கு லேட்டஸ்ட் வாட்ஸ்அப் அப்டேட் (Update) வந்துள்ளதாக என்பதை செக் செய்து கொண்டே இருக்கவும்!

Best Mobiles in India

English summary
Keep Checking For Latest Update Because These 4 New Features are Coming to WhatsApp in 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X