அந்த படம் இங்க இல்ல.. இது Samsung பொங்கல்! இந்தியாவில் ரூ.15,000க்கு ரெண்டு 5ஜி போன்..

|

Samsung கேலக்ஸி ஏ14 மற்றும் ஏ23 ஸ்மார்ட்போன்களை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கேலக்ஸி ஏ14 போனானது ரூ.15,000 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் Samsung Galaxy A14 மற்றும் A23 5G ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் Galaxy A14 மற்றும் A23 5G

சாம்சங் Galaxy A14 மற்றும் A23 5G

சாம்சங் Galaxy A14 மற்றும் A23 5G ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் Dimensity 700 SoC மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதை கவனிக்கத்தக்க ஒன்று.

சாம்சங் இந்தியாவில் இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜனவரி நடுப்பகுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Xiaomi அதன் Redmi Note 12 தொடரின் கீழ் மூன்று நடுத்தர பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் குறித்த இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ23 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ23 5ஜி

செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் அறிக்கைப்படி, சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ23 5ஜி போனை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கின்றன. இந்திய சந்தையில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன்கள் ஏறத்தாழ ஒரே அம்சங்களைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனின் வெளிப்புற தோற்றம் ப்ரீமியம் ரகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த போன் ஆனது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. Galaxy A23 5G இன் பிற அம்சங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் எச்டி+ 720x1,560 பிக்சல்கள் TFT டிஸ்ப்ளே இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் இதில் ஒற்றை 50 எம்பி முதன்மை கேமரா சென்சார் மற்றும் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா இருக்க வாய்ப்பிருக்கிறது. 4G/LTE, புளூடூத் v5.2, ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OneUI மூலம் இயக்கப்படும் எனவும் 4000 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ரூ.15,000 என்ற விலைப்பிரிவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AMOLED மற்றும் OLED டிஸ்ப்ளே

AMOLED மற்றும் OLED டிஸ்ப்ளே

Galaxy A14 5G இன் விலை ரூ.15,000 முதல் தொடங்கும் என அறிக்கை தெரிவிக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் காட்சி தொழில்நுட்பம் மேம்பட்டு இருக்கும். உலகளவில் AMOLED மற்றும் OLED டிஸ்ப்ளே பேனல்களின் முன்னணி தயாரிப்பாளர்களில் சாம்சங் ஒரு நிறுவனமாக இருக்கும் காரணத்தால் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

சாம்சங் Galaxy A14 5G

சாம்சங் Galaxy A14 5G

சாம்சங் Galaxy A14 5G ஸ்மார்ட்போனானது இந்த மாத தொடக்கத்தில் 64 ஜிபி வேரியண்ட் உடன் சுமார் ரூ.16,500 விலையில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் முழு HD+ (1,080x2,408 பிக்சல்கள்) டிஸ்ப்ளே ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் டூயல் 2 எம்பி சென்சார்கள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் Exynos 1330 சிப்செட் வசதியைக் கொண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு அமெரிக்காவில் Dimensity 700 சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

50 எம்பி பிரைமரி கேமரா

50 எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன் 50 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13 எம்பி கேமராவைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
It's Samsung Pongal! Samsung Might launch Two 5G phones for Rs.15,000 Price Range in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X