சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!

|

சூரியனைப் பற்றி ஆராய்ச்சி செய்வது விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கனவு திட்டம் என்றே கூறலாம். அந்த வகையில், வளர்ந்த உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் இஸ்ரோ (ISRO) விண்வெளி ஆராய்ச்சி மையம், சூரியனை ஆராய்ச்சி செய்யும் விண்கலத்தை இந்த ஆண்டு வானில் ஏவவுள்ளது.

ஆதித்யா எல்1 (Aditya L1) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விண்கலம் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் (Polar Satellite Launch Vehicle) என்று கூறப்படும் PSLV மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ஆதித்யா எல்1 வெற்றி கரமாக விண்ணில் நிறுவப்படும் பட்சத்தில், சூரியன் மற்றும் அதன் சுற்றுச்சூழலைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்து பெரிய ரூட் போட்ட ISRO!

சூரியனை முழுசா ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ போட்ட மாஸ்டர் பிளான்.!

மேலும், இந்த ஆதித்யா எல்1 மிஷன் மூலம், சூரியனின் கொரோனல் ஹீட்டிங் (Coronal Heating), கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (Coronal Mass Ejection), ப்ரீ சோலார் ஃப்ளேர் (Pre Solar Flare), சோலார் ஃப்ளேர் (Solar Flare) போன்ற செயல்பாடுகளை இந்தியா கண்காணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விண்வெளியின் காலநிலையை மாற்றங்களைப் பற்றியும், சோலார் துகள்களின் (Solar Particles) செயல்பாடுகள் பற்றிய அறிந்துகொள்ளவும் இந்த ஆராய்ச்சி திட்டம் பயன்படும் என்று கூறப்படுகிறது.

ஆதித்யா எல்1 விண்கலத்தின் ஏவுதலை உறுதி செய்த இஸ்ரோ ஆராய்ச்சி மையம், இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் (Space craft) ஹாலோ ஆர்பிட்டில் (Halo Orbit) நிலைநிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இது சூரியன் மற்றும் பூமியின் லக்ரேன்ஜ் புள்ளி 1ல் (Lagrange Point 1) நிறுவப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளி பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்து பெரிய ரூட் போட்ட ISRO!

1 இல்ல.. 2 இல்ல.. மொத்தம் 7 பேலோட்கள் சூரியனை கண்காணிக்க அனுப்படுகிறதா?

இந்தப் புள்ளியில் ஸ்பேஸ் கிராஃப்டை நிறுவுவது மிகவும் சாதகமானதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணம் என்னவென்றால், இந்த புள்ளியில் ஸ்பேஸ் கிராஃப்டை நிறுவும்போது சூரியனை எந்தவிதமான இடையூறும் இன்றி தொடர்ச்சியாக கண்காணிக்க முடியுமாம். குறிப்பாக எந்த கிரகணத்தின் குறுக்கீடும் இந்த ஆராய்ச்சிக்கு தடையாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆதித்யா எல்1 ஸ்பேஸ் கிராஃப்டில் ஏழு பேலோடுகள் (Payload) சூரியனின் செயல்பாடு கண்காணிக்கப் பொருத்தப்பட்டுள்ளது. அவை,

1. விசிபிள் எமிஷன் லைன் கொரோனாகிராப் (Visible Emission Line Coronagraph, VELC)
2. சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (Solar Ultraviolet Imaging Telescope, SUIT)
3. சோலார் லோ-எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (Solar Low Energy X-ray Spectrometer, SoLEXS)
4. ஹை-எனர்ஜி எல்1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (High Energy L1 Orbiting X-Ray Spectrometer, HEL1OS)
5. ஆதித்யா சோலார் விண்ட் பார்ட்டிகள் எக்ஸ்பிரிமெண்ட் (Aditya Solar Winf Particle Experiment, ASPEX)
6. பிளாஸ்மா அனலைசர் பேக்கேஜ் ஃபார் ஆதித்யா (Plasma Analyser Package for Aditya, PAPA) மற்றும்
7. அட்வான்ஸ் ட்ரை-ஆக்சியல் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல் மேக்னடோமீட்டர் (Advanced Tri-axial High Resolution Digital Magnetometer)

சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்து பெரிய ரூட் போட்ட ISRO!

Aditya L1 மிஷன் எப்போது விண்ணில் பாயும்?

இந்த ஏழு பேலோடுகளில் VELC தான் ஆதித்யா எல்1 ஸ்பேஸ் கிராஃப்ட் எடுத்துச் செல்லும் பேலோடுகளில் மிகவும் பெரியதாகும். ஜனவரி 26 ஆம் தேதி தேதி நடந்த விசிபிள் லைன் எமிஷன் கொரோனாகிராப் அறிமுக விழாவில் இஸ்ரோவின் தலைவர் S. சோமநாத் பேசும் பொழுது ஆதித்யா எல்1 ஸ்பேஸ் கிராஃப்ட் இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார். எனினும் ஆதித்யா எல்1 விண்ணில் ஏவப்படும் சரியான தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை.

இந்த திட்டம் வெற்றி அடைந்த பிறகு, சூரியனின் செயல்பாடுகளை இந்தியா தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனை நெருங்கியது மட்டுமின்றி, இனி சூரியனை முழு நேர சர்வைலென்சிற்குள் இந்தியா கொண்டு வரப்போகிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

Best Mobiles in India

English summary
ISRO's Aditya L1 Mission To Study Sun By Launching 7 Payloads Through PSLV Rocket This Year 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X