துணிவு-2 கதை.! டிஜிட்டல் இந்தியாவில் மக்கள் படும் அவதி! ரெடியா மக்களே!

|

நடிகர் அஜீத் நடித்த துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி கோலாகலமாக ஓடிக் கொண்டி இருக்கிறது. முதல் பாகம் விறுவிறுப்பாகவும் இரண்டாவது பாகம் சற்று மெதுவாக செல்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தாலும் அதில் சொல்ல வரும் கருத்துக்களை உற்று நோக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. திவால் ஆகி விட்டது என்ற சொல்லினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இதே போன்ற காட்சி நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்திலும் இடம்பெற்றிருக்கிறது.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

வங்கி பிரச்சனைகள் தொடர்பான கருத்துகள் துணிவு படத்தில் எடுத்துரைந்தாலும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

இதே பாணியில் இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இதுபோன்ற முன்னணி நடிகர் எடுத்துரைத்தால் இது பலரையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக எச்.வினோத் போன்ற இயக்குனர்கள் இயக்கினால் இதன் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு பாகம் 2 இதுபோன்று டிஜிட்டல் இந்தியா தொடர்பாகவும் அதில் நடிகர் அஜித் நடித்தால் பலரும் கவனமாக இருப்பார்கள் என்பதே பலரின் நோக்கமாகும்.

கவனம் அவசியம்

கவனம் அவசியம்

சரி, ஆன்லைன் யுகத்தில் பாதிக்கப்பட்ட பிரச்சனைகள் அப்படி என்ன என்ற கேள்வி வரலாம். ஏராளமான பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இதில் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்படாமலே இருப்பீர்கள் என்பது நிச்சயம் அல்ல. எனவே கவனமாக இருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். அதில் சில விஷயங்களை பார்க்கலாம்.

Digital india (2023)

Digital india (2023)

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கை ஏறத்தாழ வெற்றி அடைந்து விட்டது என்றே கூறலாம். Digital india (2023) இல் வாழ்கிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆசை வார்த்தைகளில் சிக்கி வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம். முதலில் எந்த ஒரு ஆதாரமற்ற தகவலையும் நம்பாமல் இருக்க வேண்டும்.

தொடரும் மோசடி செயல்கள்

தொடரும் மோசடி செயல்கள்

சற்று யோசித்து பாருங்கள் ஒரு விற்பனை தளமோ அல்லது ஏதேனும் ஒரு ஆன்லைன் தளமோ உங்களுக்கு மட்டும் தள்ளுபடியும் சலுகையும் வழங்க காரணம் என்ன? ஒரு தளம் சிறிய தள்ளுபடி வழங்கினாலே அது பெரியளவு செய்தி ஆகி விடுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் மொபைல் நம்பரும், மெயில் ஐடியும் தேர்ந்தெடுத்து அதீத தள்ளுபடி வழங்க காரணம் என்ன? இதில் அவர்களுக்கு லாபம் என்ன? இவை அனைத்தும் மோசடி செயல்கள் சிக்கி வைப்பதன் நோக்கமே ஆகும்.

ஆன்லைன் மோசடிகள்

ஆன்லைன் மோசடிகள்

இதுபோன்ற சிக்கலில் நீங்கள் சிக்காமல் இருப்பதால் இப்படி எல்லாம் நடக்குமா என்ற கேள்வி வரலாம். ஆனால் நடந்திருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஆன்லைன் மோசடியா என்று ஆச்சரியப்பட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது இணையவழி மோசடிகள் என்பது தினசரி செய்தியாக மாறிவிட்டது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் ஆன்லைன் மோசடிகள் செயல்படும் முறை என்பதும் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது என்பது தான்.

எது உண்மை., எது பொய்?

எது உண்மை., எது பொய்?

தனிப்பட்ட தகவலை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் பணம், தனிநபர் விவரங்கள் திருடப்பட்டுவிட்டது என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ஒரு லிங்க்கை தெரியாமல் கிளிக் செய்தாலே போதும் மொத்த பணமும் அபேஸ் ஆகிவிடும் காலம் வந்துவிட்டது. அனைத்து லிங்க்களும் அதிகார்ப்பூர்வ தளம் போன்றே காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக எது உண்மை எது போலி என்று கண்டறிவது மிக சிரமமாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட நபர்

பாதிக்கப்பட்ட நபர்

மும்பை போரிவலி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் வங்கி ஊழியர் தான் 68 வயதான புஷ்பலதா பிரதீப் சிந்தேர்கர் என்பவர். இவர் வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்ததன் மூலம் இணைய மோசடிக்கு உள்ளாகி ரூ.9.15 லட்சத்தை இழந்திருக்கிறார்.

மும்பை சேர்ந்த சிந்தர்கர் என்பவர் தனது தனியார் வங்கி வைப்புத் தொகை கணக்கில் சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்.

இதையடுத்து வங்கியின் குறை தீர்க்கும் தளத்தின் மூலம் ஆன்லைனில் புகார் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் ஆன்லைன் புகார் பதிவு செய்யும் போது குறைதீர்ப்பு பிரிவு தளத்தில் சில பிழைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

அதிகாரப்பூர்வ தளம் போல் காட்சி அளித்த போலி தளம்

அதிகாரப்பூர்வ தளம் போல் காட்சி அளித்த போலி தளம்

இதையடுத்து சிந்தர்கர் இன் வாட்ஸ்அப் எண்ணிற்கு இணைப்பு ஒன்று வந்திருக்கிறது. இதில் சிந்தர்கர் தனது மொபைல் எண்ணை இணைத்ததாக கூறப்படுகிறது.

சிந்தர்கர் பதிவிட்ட மொபைல் எண்ணுக்கு இரண்டு அழைப்புகள் வந்திருக்கிறது. அதில் தங்களுக்கு வாட்ஸ்அப் இணைப்பு அனுப்பி உள்ளதாகவும் அதில் தங்களது புகார்கள் பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

சிந்தர்கர் சந்தேகத்துடன் பல கேள்விகளை கேட்டிருக்கிறார். இருப்பினும் மறுபுறம் பேசிய நபர், இதுதான் புகார் பதிவு செய்யும் முறை உடனே தங்களது புகார்களை பதிவு செய்யும்படி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனக்கு வந்த லிங்க்கை சிந்தர்கர் சந்தேகத்துடன் ஓபன் செய்து பார்த்திருக்கிறார். அந்த தளம் அதிகாரப்பூர்வ பதிவுத் தளம் போல் காட்டப்பட்டிருக்கிறது.

இதையடுத்து அந்த தளத்தில் அவர் வங்கி இணைப்பையும் கடவுச்சொல்லையும் பதிவிட்டு உள்நுழைந்திருக்கிறார்.

லிங்க்கை கிளிக் செய்ததன் மூலம் பணம் இழப்பு

லிங்க்கை கிளிக் செய்ததன் மூலம் பணம் இழப்பு

இந்த முறை நடந்துக் கொண்டிருக்கும் போது அவரது கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆனதாக மெசேஜ் வந்திருக்கிறது. இதை பார்த்த அந்த நபர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.

இன்டெர்நெட் பேங்கிங் ஐடி, பாஸ்வேர்ட் உள்ளிட்டவைகளை பதிவு செய்த பிறகு ஒரு செயலியை தான் பதிவிறக்கம் செய்தேன் இவை அனைத்தும் நடந்துவிட்டது என பாதிக்கப்பட்ட சிந்தர்கர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் சிந்தர்கர் தனது ஸ்மார்ட்போனை அணைத்துவிட்டு, மற்றொரு மொபைல் மூலம் தனியார் வங்கியின் வாடிக்கையாளர் உதவி எண்ணை அழைத்து நடந்ததை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மின் கட்டணம் பேரில் நடக்கும் மோசடிகள்

மின் கட்டணம் பேரில் நடக்கும் மோசடிகள்

அதேபோல் மின்சார கட்டணம் பாக்கி இருப்பதாக கூறி அந்த பணத்தை செலுத்தும்படி அவர்களை நம்ப வைத்து மோசடி செய்யும் செயல்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. மின் விநியோக நிறுவனத்திடம் இருந்து வருவது போல் போலியான மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை தவிர்க்க இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதில் மின்வாரிய அதிகாரி என்று போலியாக ஒரு தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்தால் கட்டணம் பாக்கி இருக்கிறது என குறிப்பிட்டு அதை செலுத்தும்படி வலியுறுத்தப்படுகின்றனர். இதை தொடர்பு கொள்வதன் மூலம் மோசடி செயல்கள் நடைபெறத் தொடங்குகிறது.

கேஒய்சி அப்டேட்

கேஒய்சி அப்டேட்

கேஒய்சி அப்டேட் செய்யும்படி வங்கி மெசேஜ் போன்று ஒரு லிங்கை அனுப்புகின்றனர். இதில் சந்தேகத்திற்கு இடமான லிங்க் ஒன்றை அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட் போன்றே வடிவமைத்து அனுப்புகின்றனர்.

மேலும் பயனர்களுக்கு இதுபோன்று வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. எந்த வங்கியும் இதுபோன்று கேட்பதில்லை என்பது குறிப்படித்தக்க ஒன்று.

இதுபோன்ற மோசடியாளர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி தொடர்ந்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்

இதேபோல் கவரச்சிகரமான இலவச பரிசுகள் மற்றும் பலவற்றை வழங்குவதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். இந்த தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற தகவல்களை நம்பவும் வேண்டாம் பகிரவும் வேண்டாம். இதுபோன்ற மெசேஜ்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல் வித்தியாச வித்தியாசமாக பல மோசடிகள் நடந்து வருகிறது. டிஜிட்டல் யுகத்தில் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
Is this the story of Thunivu 2? Online Scams in Digital India! Beware From this Scam!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X