Apple-அ நம்பி ஏமாந்துட்டோம் கதறும் iPhone 14 Pro பயனர்கள்.! என்னாச்சு தெரியுமா?

|

ஆப்பிள் (Apple) என்றாலே ஒரு தனி கெத்து தான்.! - என்று 'ஸீன்' போட்ட ஆப்பிள் பயனர்கள் அனைவரும் இப்போது, தலை குனிந்து; சிரிப்பதற்கு முடியாமல் திணறி வருகின்றனர். காரணம், லட்ச ரூபாய் செலவு செய்து புது ஐபோன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு, ஆப்பிள் நிறுவனம் வைத்த செக் மேட் அவ்வளவு மோசமானது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களில் பிழைகள் உள்ளது என்பதை நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. உலக அளவில் பெரிதும் பேசப்பட்ட புதிய ஐபோன் சீரிஸ் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Apple-அ நம்பி ஏமாந்துட்டோம் கதறும் iPhone 14 Pro பயனர்கள்.! என்னாச்சு?

அதிலும் உலக அளவில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களும் இதுவாகும் என்பது கவனிக்கத்தக்கது. இப்படி விலை உயர்ந்த ஃபோன்களில், ஆப்பிள் நிறுவனம் எப்படி? இப்படி? ஒரு பிழையை கவனிக்காமல் தவறவிட்டது என்று தெரியவில்லை.! இதற்கான முக்கிய காரணம், ஐபோன் 14 மாடல்களை சரியான நேரத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நிறுவனத்தின் அவசரமே காரணமாகக் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் கவனிக்கத் தவறிய சிறிய பிழைகளால் இப்பொழுது, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் தொடர்ந்து ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த போன்களை வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கடுப்பாகி, ஆப்பிள் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இடுகையில் தொடர்ந்த புகார் அளித்து வருகின்றனர்.

குறிப்பிடும் வகையில், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் தொடர்ந்து பல கோளாறுகள் எழுந்து வருகிறது. இந்த கோளாறுகளை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐஓஎஸ் 16 (iOS 16) வெர்ஷன் அப்டேட்டில் முடிந்தவரைப் பழுது பார்த்தது. இருப்பினும், இன்னும் ஏராளமான ஐபோன் மாடல்களை தொடர்ந்து வெவ்வேறு கோளாறுகள் பதித்து வருவதனால் வாடிக்கையாளர்கள் கடுப்பில் உள்ளனர்.

Apple-அ நம்பி ஏமாந்துட்டோம் கதறும் iPhone 14 Pro பயனர்கள்.! என்னாச்சு?

குறிப்பாக, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டிஸ்ப்ளேவில் பச்சை மற்றும் மஞ்சள் நிற கோடுகள் போன்ற கோளாறுகள் பெரிதும் காணப்படுகிறது. அதிலும், ஐபோனை அன்லாக் செய்யும் பொழுது தான்; இந்த பச்சை மற்றும் மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றுவதாக ஐபோன் பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த சிக்கல் இருப்பதை ஆப்பிள் நிறுவனம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கான தீர்வை விரைவில் சரி செய்யும் என்றும், இந்த கோளாறுகள் அனைத்தும் சாஃப்ட்வேர் இஸ்யூ காரணமாக எழுந்தவை என்றும், போனில் ஹார்ட்வேர் தொடர்பான கோளாறுகள் எதுவும் இல்லை என்பதையும் நிறுவனம் விலக்கி உள்ளது.

அடுத்தபடியாக, ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருக்கும் ஐஓஎஸ் 16.3 வெர்ஷனில் இதற்கான தீர்வுகள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த அப்டேட் வெளியிடுவதற்கு இன்னும் சில கால மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. காரணம் இந்த ஐஓஎஸ் 16.3 வெர்ஷன் இப்போது பீட்டா கட்டத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஃபோன்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் பயனர்கள் அடுத்த அப்டேட் வரும் வரை பொறுமையாகக் காத்திருக்கும் படி நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone 14 Pro and iPhone 14 Pro Max Again Gets Software Issues What Apple's Plan To Solve

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X