ஐபோன் 13 மீது நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர்! வாங்கலாமா? இல்ல ஐபோன் 14 க்கு வெயிட் பண்ணலாமா?

|

ஒரு லேட்டஸ்ட் ஐபோன் மாடலை வாங்குவதென்பது, கடந்த பல ஆண்டுகளாக பட்ஜெட் வாசிகளுக்கு ஒரு கனவாகவே உள்ளது. இருந்தாலும் கூட எபப்டியாவது ஒரு லேட்டஸ்ட் ஐபோனை வாங்கிவிட வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் நீங்கள் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்துள்ளீர்கள் என்றால், உடனே அமேசான் அல்லது பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு செல்லவும். ஏனெனில் ஐபோன் 13 மடல் மீது நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 13 மீது நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர்! வாங்கலாமா? வேண்டாமா?

பிரபல இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 மாடல் மீது எக்ஸ்சேஞ்ச் ஆபர் மட்டுமல்ல சில வங்கி சலுகைகளும் கிடைக்கிறது என்பது சிலருக்கு கூடுதல் அதிர்ஷ்டத்தை கொடுக்கலாம்!

அமேசான் தளத்தை பொறுத்தவரை ஆப்பிள் ஐபோன் 13 ஆனது அதன் ஸ்டிக்கர் விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.72,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை எக்ஸ்சேன்ஜ் ஆபர் மற்றும் வங்கி சலுகைகளை தவிர்த்து கிடைக்கும் விலை ஆகும். ஒருவரால் இந்த விலையை இன்னும் குறைக்க முடியும். அதெப்படி?

அமேசான் தளமானது, ஐபோன் 13 மீது 9% தள்ளுபடியை வழங்குகிறது, இது குறிப்பிட்ட மாடலின் விலையை ரூ.72,990 ஆக குறைக்கிறது. ஒருவேளை நீங்கள் எச்டிஎப்சி வங்கி கார்டுகள் அல்லது இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் ஐபோன் 13 மாடலை வாங்கினால், கூடுதலாக ரூ.4,000 என்கிற தள்ளுபடியையும் பெறலாம்.

இதன் கீழ் ஐபோன் 13 மாடலின் விலையை உங்களால் ரூ.68,990 ஆக குறைக்க முடியும். பிறகு அமேசான் அறிவித்துள்ள ரூ.12,550 வரை என்கிற எக்ஸ்சேன்ஜ் ஆபரை (முழுமையாக) பயன்படுத்தும் பட்சத்தில் ஐபோன் 13 மாடலின் பேஸிக் 128ஜிபி வேரியண்ட்டின் விலையை ரூ.56,490 ஆக குறைக்கலாம்.

மறுகையில் உள்ள பிளிப்கார்ட் தளத்திலும் ஐபோன் 13 மாடலானது ரூ.72,999 என்கிற விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உடன் ரூ.15,500 வரை என்கிற எக்ஸ்சேஞ்ச் ஆபரும் அணுக கிடைக்கிறது. ஆக பிளிப்கார்ட் வழியாகவும் உங்களால் ஐபோன் 13 மாடலின் பேஸிக் வேரியண்ட்டின் விலையை ரூ.57,499 ஆக குறைக்க முடியும்.

வழக்கமாக புதிய ஐபோன் சீரிஸ் அறிமுகமாகும் சில நாட்களுக்கு முன்னர் அல்லது அறிமுகம் ஆன பின்னரே முந்தைய மாடல்களின் மீது "தாறுமாறான" ஆபர்கள் அறிவிக்கப்படும். ஆனால் அடுத்த ஐபோன் 14 சீரீஸ் அறிமுகமாக இன்னும் பல மாதங்கள் உள்ள நிலைப்பாட்டில், ஐபோன் 13 மீதான இந்த ஆபர், சற்றே கவனிக்கத்தக்கதாக உள்ளது.

ஒருவேளை உங்களுக்கு அமேசான் அல்லது பிளிப்கார்ட் வழியாக ஐபோன்களை வாங்க இஷ்டமில்லை என்றால் ஆப்பிள் ரீசெல்லர் ஆன இந்தியா ஐஸ்டோரிலும் ஐபோன் 13 மீதான சில சலுகைகள் அணுக கிடைக்கிறது.

இந்தியா ஐஸ்டோரில் ஐபோன் 13 மீது ரூ.5,000 என்கிற தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.74,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.4,000 என்கிற கேஷ்பேக்கும் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் ஐபோன் 13 மாடலின் விலையை ரூ.70,900 ஆக குறைக்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் ஆபரை பொறுத்தவரை ரூ.18,000 வரை என்கிற தள்ளுபடி அணுக கிடைக்கிறது. இதை முழுவதுமாக பயன்படுத்தும் பட்சத்தில், உங்களால் ஐபோன் 13 மாடலை வெறும் ரூ.52,900 க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும்.

வரவிருக்கும் ஐபோன் 14 சீரிஸை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி அதிகாரப்பூர்வமான அறிமுகத்திற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. இருப்பினும் இப்போதே சில லீக்ஸ் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

வழக்கம் போல இம்முறையும் ஐபோன் 14 சீரிஸில் - ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என்கிற 4 மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் ஐபோன் 14 மினி மாடலுக்காக காத்திருந்தால், மன்னிக்கவும்; ஐபோன் 4 மினி மாடல் வெளியாகாது என்பது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டு விட்டது.

ஐஅப்டேட் (iUpdate) வழியாக கிடைத்த ஒரு லீக்ஸ் தகவலின்படி, தற்போது வாங்க கிடைக்கும் ஐபோன் 13 மாடலுக்கும், வரவிருக்கும் ஐபோன் 14 மாடலுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது என்பது போல் தெரிகிறது. எனவே ஐபோன் 14 அறிமுகம் ஆனதும் அதை வாங்கலாம் என்று காத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. எனவே ஐபோன் 13 மீதான இந்த சலுகைகளை இப்போதே பயன்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம்!

Best Mobiles in India

English summary
Flipkart and Amazon announced huge offers on iPhone 13 basic 128GB variant. Check full details here

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X