விண்டோஸ் 8.1 கொண்ட காம்பாக்ட் கம்ப்யூட்ரை இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது

Written By:

உலகின் முன்னணி மின்சாதன விற்பனையாளராக விளங்கும் மைக்ரோசாப்ட் மற்றும் இன்டெல் நிறுவனம் இணைந்து அல்ட்ரா காம்பாக்ட் கம்ப்யூட்டர் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. நியுபிசி என்று அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டர் விண்டோஸ் 8.1 மூலம் இயங்குகின்றது.

இன்டெல் செலரான் பிராசஸர் 2ஜிபி ரேம், 500 ஜிபி ஹார்டு டிஸ்க் ஈத்தர்நெட் போர்ட், 1 யுஎஸ்பி 3.0 போர்ட், 2 யுஎஸ்பி 2.0 போர்ட் கொண்ட மாடல் ரூ.18,999 மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.21,999 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 8.1 கொண்ட காம்பாக்ட் கம்ப்யூட்ர் வெளியாகியுள்ளது

இன்டெல் கோர் ஐ3 பிராசஸர் 2ஜிபி ரேம், 500 ஜிபி ஸ்டோரேஜ், ஜிகாபைட் ஈத்தர்நெட், 4 யுஎஸ்பி 3.0 போர்ட், 2 யுஎஸ்பி 2.0 போர்ட் மாடலின் விலை ரூ.29,999 மற்றும் ரூ.3,000 கூடுதலாக செலுத்தினால் 4ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுபிசி 19V 3.42A DC அடாப்டர் மூலம் சக்தியூட்டப்படுவதோடு ஹெச்டிஎம்ஐ போர்ட் மற்றும் மைக், ஹெட்போன்களுக்காக 3.5 எம்எம் ஜாக் வழங்கப்பட்டுள்ளது. கீபோர்டு, மவுஸ் மற்றும் மானிட்டர் இல்லாத விலை தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

English summary
Intel-Powered NuPC Ultra Compact PC With Windows 8.1 Launched at Rs. 18,999
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot