ரூ.15000 பட்ஜெட் பிச்சுக்கிச்சு.. 5ஜி, 18GB ரேம், 6500mAh பேட்டரி, IP64.. தெறிக்கவிடும் புது TECNO போன்!
டெக்னோ (Tecno) நிறுவனமானது, ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆன டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி (Tecno Pop X 5G) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. டெக்னோ நிறுவனம் தனது பாப் சீரிஸை, முதல் முறையாக ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்காக மற்றும் பட்ஜெட் பயனர்களுக்காக ஒதுக்கியுள்ளது என்றே கூறலாம்.
அதாவது டெக்னோ பாப் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது - பேட்டரி லைஃப், பெரிய டிஸ்பிளே மற்றும் எளிதில் அணுகக்கூடிய விலை போன்ற அத்தியாவசிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தும். இதோடு சேர்த்து இம்முறை என்ட்ரி லெவல் 5ஜி பயனர்களையும், டெக்னோ குறிவைத்துள்ளது. சரி வாருங்கள் ரூ.15,000-க்கும் குறைவான விலையில் வருமென்று எதிர்பார்க்கப்படும் டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்று பார்ப்போம்.

டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி இந்திய அறிமுக தேதி: டெக்னோ பாப் எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வழியாக விற்பனை செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிமுக நாளின் போது சரியான விலை, ஆபர் மற்றும் விற்பனை தேதி குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.
டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் "வெயிட்டு": அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 6500mAh பேட்டரி இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண மற்றும் மிதமான பயன்பாட்டிற்கு போதுமானதை விட அதிகமாகும். பெரும்பாலான போட்டியாளர்கள் இப்போது 7000mAh பேட்டரிகளை வழங்குகிறார்கள். ஆனால் 6500mAh திறன் இருந்தாலும் கூட, இந்த டெக்னோ போன் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் திறன் கொண்டதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது 18ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட ரேம் உடன் வரும் என்றும், இதில் விர்ச்சுவல் ரேம் விரிவாக்கமும் அடங்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆப்களை சீராக மாற்றுவதற்கும், பின்னணியில் மல்டி டாஸ்கிங் செய்வதற்கும் உதவும்என்பதிலும் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக கேமர்கள் மற்றும் அதிக பணிகளுக்காக போனைப் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதோடு டெக்னோ, அதன் பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் USRP 3.0 தொழில்நுட்பத்தையும் முன்னிலைப்படுத்துகிறது, இது நெட்வொர்க் செயல்திறனை 8 மடங்கு வரை மேம்படுத்தும் என்று டெக்னோ கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ (AI) மூலம் இயங்கும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வாய்ஸ் கால் அல்லது ஆன்லைன் மீட்டிங்குகளை அதிகம் நம்பியிருக்கும் பயனர்களுக்கு - ஒரு சிறிய ஆனால் அர்த்தமுள்ள அம்சமாக இருக்கும்.
டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் "முரட்டு" டிசைன்: டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விண்வெளி தரத்திலான அலுமினிய கேமரா மாட்யூலுடன் ஒரு நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ளது. கேமரா வடிவமைப்பை பற்றிப் பேசுகையில், இது டெக்னோ போவா ஸ்லிம்மை போன்ற ஒரு மெல்லிய கிடைமட்ட கேமரா பார் ஆகும், ஆனால் இதில் சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு கலர் ஆப்ஷன்களில் வருகிறது; ஒன்று - ப்ளூ, மற்றொன்று சில்வர் மற்றும் க்ரீன் கலர்களின் கலவையுடன் ஒரு பேட்டர்ன் ஃபினிஷை கொண்டுள்ளது. ட்யூரபிலிட்டியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H சான்றிதழுடன் (1.5 மீட்டர் உயரம் வரையிலான வீழ்ச்சிகளுக்கு சோதிக்கப்பட்டது) மற்றும் IP64 ரேட்டிங் (தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பு திறன்) உடன் வருகிறது. இது கலவை பெரும்பாலான பட்ஜெட் போன்களில் நாம் பார்க்க முடியாத கலவையாகும்.
OPINION - டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இதுவரை நமக்கு தெரிந்த விவரங்களின் அடிப்படையில், நீங்கள் ஒரு ஸ்டைலான மற்றும் நீடித்து உழைக்கும் வடிவமைப்பு, நம்பகமான பேட்டரி லைஃப், மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங்கிற்கான செயல்திறன் சார்ந்த அம்சங்களை விரும்பினால், டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும் இதன் சரியான விலை நிர்ணயம் தெரியவந்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும்.


Click it and Unblock the Notifications








