Redmi அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8550mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே90 மேக்ஸ் (Redmi K90 Max) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய ரெட்மி போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி கே90 மேக்ஸ் அம்சங்கள் (Redmi K90 Max specifications): 6.83-இன்ச் 1.5கே-பிட் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளியாகி உள்ளது புதிய ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 3500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், டிசி டிம்மிங், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa-Core Dimensity 9500 3nm) சிப்செட் உடன் புதிய ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஏஆர்எம் மாலி-ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali-G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி உடன் ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் Xiaomi HyperOS 3 மூலம் இந்த ரெட்மி போன் இயங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
50எம்பி Light Fusion 800 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல் கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் இந்த ரெட்மி போன் வெளியாகி உள்ளது. மேலும் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 1115எக்ஸ் டூயல் ஸ்பீக்கர்கள் போன்ற வசதிகளுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏடி, புளூடூத் 5.4, க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

8550mAh பேட்டரி உடன் ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 227 கிராம் ஆகும். ஸ்பேஸ் சில்வர், ஷேடோ பிளாக் மற்றும் ஸ்கை ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ரெட்மி கே90 மேக்ஸ் விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 மேக்ஸ் மாடலின் விலை 3499 yuan (இந்திய மதிப்பில் ரூ.47,985)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 மேக்ஸ் மாடலின் விலை 3799 yuan (இந்திய மதிப்பில் ரூ.52,100)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 மேக்ஸ் மாடலின் விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.54,840)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 மேக்ஸ் மாடலின் விலை 4299 yuan (இந்திய மதிப்பில் ரூ.58,960)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ரெட்மி கே90 மேக்ஸ் மாடலின் விலை 4999 yuan(இந்திய மதிப்பில் ரூ.65,560)
தற்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








