இனி ஒருத்தரும் தப்பிக்க முடியாது: இன்ஸ்டாகிராம் தொடங்கிய புது பணிகள்!

|

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தில் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி இருக்கிறது. போலி செய்திகளை முழுமையாக மறைப்பதோடு, அந்த செய்திகளில் மேல் போலி என குறிப்பிடவும் தெரிவித்துள்ளது.

 போலி செய்திகளை கண்டறிய முயற்சி

போலி செய்திகளை கண்டறிய முயற்சி

இன்ஸ்டாகிராம் நிறுவனம் போலி செய்திகளை கண்டறியும் முயற்சிகளில், போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுன் இணைந்து பணியாற்ற இருப்பதாக இன்ஸ்டாகிராம் அறிவித்தது. இதையடுத்து இன்ஸ்டாகிராமின் புதிய நடவடிக்கை தெரியவருகிறது. இந்த புதிய கூட்டணியின் மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருக்கும் போலி செய்திகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போலி செய்தி குறியீடு

போலி செய்தி குறியீடு

இதேமாதிரியான அம்சம் ஃபேஸ்புக் தளத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் செயலியும் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் போலி செய்திகளை கண்டறிவதோடு மட்டுமின்றி அதன் மீது தவறான தகவல் அதாவது போலி செய்தி என குறீயிடு வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கும் வகையில் இந்த முறை வழங்கப்படுகிறது.

ஏன் என்ற அம்சம் காண்பிக்கப்படும்

ஏன் என்ற அம்சம் காண்பிக்கப்படும்

குறிப்பாக தவறான தகவல்கள் குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏன் என்பது குறித்து விளக்கம் அதாவது சீ ஒய் என்ற அம்சமும், மேலும் அந்த பதிவுகளை பார்க்கும் வகையில் சீ போஸ்ட் என்ற அம்சமும் வழங்கப்படுகிறது.

அடி தூள்., 84 நாள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் நிறுவனம் புதிய 2 ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்அடி தூள்., 84 நாள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் நிறுவனம் புதிய 2 ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்

போலி செய்திக்கான விளக்கம்

போலி செய்திக்கான விளக்கம்

இந்த அம்சங்களின் மூலம் செய்திகள் ஏன் போலி என்பது குறித்த விளக்கமும், அதேபோல் அந்த பதிவுகளை காண்பிக்கும் வகையிலும் புதிய அம்சங்கள் தொடர்ப்பட்டுள்ளது. இந்த அம்சங்களின் மூலம் செய்திகள் போலி என்பதோடு அதற்கான காரணங்களையும் இன்ஸ்டாகிராம் விளக்கமளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram starts fact checking stories and mention the reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X