Instagram பெண்களின் புகைப்படங்களை அனுமதி இல்லாமல் தவறாகப் பயன்படுத்தியவர் கைது!

|

பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் தவறாகப் பயன்படுத்திய 19 வயது இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் போலீசாருக்கு இளம் பெண் புகார் அளித்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் வெறும் மூன்றே நாட்களில் சைபர் கிரைம் போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பயனரை எப்படி போலீசார் கைது செய்தனர் என்று தெரியுமா?

கேரளாவில் பட்டையைக்கிளப்பிய சைபர்டோம்

கேரளாவில் பட்டையைக்கிளப்பிய சைபர்டோம்

கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் இளம் பெண்கள் 15 பேரின் புகைப்படங்களை, முகம் தெரியாத இன்ஸ்டாகிராம் நபர் தவறுதலாகப் பயன்படுத்தியதாக இளம் பெண் தொடுத்த புகாரின் பெயரில், போலி இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் உரிமையாளரை சைபர் கிரைம் போலீசார் தேடி வந்தனர். சைபர்டோம் பாஸ்ட் ட்ராக்கிங் முறையைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அந்த போலி இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் உரிமையாளரை சைபர்டோம் தேடியுள்ளது.

விபச்சாரம் செய்வதாக பெண்களின் புகைப்படங்கள்

விபச்சாரம் செய்வதாக பெண்களின் புகைப்படங்கள்

கோழிக்கோடு பகுதியில் உள்ள 15 பெண்களின் புகைப்படங்களை இழிவுபடுத்தும் படி, இவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்று முகம் தெரியாத அந்த நபர் செய்த காரியம் கரணம் இல்லாததாக இருந்துள்ளது. கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மன்ஜாஸ் என்ற இளைஞர் கேரளா மாவட்ட காவல்துறை வெறும் மூன்றே நாட்களில் கைது செய்தது. இவர் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் சுமார் 5 போலி அக்கௌன்ட் வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!

போலி அக்கௌன்ட் வைத்தவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது

போலி அக்கௌன்ட் வைத்தவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது

கேரளா சைபர்டோம் உதவியுடன் அந்த இளைஞரின் அக்கௌன்ட் விபரங்களை வைத்துத் தேடியுள்ளது. புகாரைப் பெற்ற மூன்று நாட்களில் கணக்கு வைத்திருப்பவர் அடையாளம் காணப்பட்டதாக வட்ட ஆய்வாளர் மற்றும் சைபர்டோமின் பொறுப்பான நோடல் அதிகாரி கூறினார். நாடகாவு வட்ட ஆய்வாளர் அஷ்ரப் தலைமையிலான குழுவினர் மஜ்னாஸை கைது செய்தனர்.

மூன்று வழக்குகள் பதிவு

மூன்று வழக்குகள் பதிவு

மஜ்னாஸ் மீது கோழிக்கோடு மாவட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் ஒன்று நாடக்காவு நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, மற்ற இரண்டு வழக்குகள் பாலுசேரி மற்றும் பெரம்ப்ரா நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!

ஏன் இப்படி செய்தார்?

ஏன் இப்படி செய்தார்?

இந்த இளைஞர் மீது ஐ.டி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், காவல்துறையினரின் கூற்றுப்படி படங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

அதிகரிக்கும் ஆன்லைன் சித்திரவதை மற்றும் ஆன்லைன் மிரட்டல்

அதிகரிக்கும் ஆன்லைன் சித்திரவதை மற்றும் ஆன்லைன் மிரட்டல்

பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர் ஒருவர் கூறியதாவது, இன்ஸ்டாகிராம் இல் போலி கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்களுக்கு ஆன்லைன் சித்திரவதை மற்றும் ஆன்லைன் மிரட்டல்களை விடுத்தது வருகின்றனர், இதை காவல்துறை கட்டுக்குள் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் மன வேதனையையும் அவமானமும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Instagram Fake User Man Arrested For Misusing Girl's Photos : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X