கேஸ் காலி.. சிலிண்டர் வரலயா.. 6 ஆப்ஷன் இருக்கு.. இண்டக்ஷன் ஸ்டவ் உட்பட வேறு எதை எல்லாம் வைத்து சமைக்கலாம்?
LPG Cylinder Shortage Alternative Options: எல்பிஜி சிலிண்டர்களின் மீதான திடீர் பற்றாக்குறைஆனது பெரும்பாலான மக்களை பதற்றத்திற்கும், குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளது. அவர்களில் பலரும் - அடுத்தடுத்து வரும் நாட்களை அல்லது வாரங்களை எஅப்டி சமாளிக்க என்ன செய்யலாம் என்கிற திட்டங்களில் இறங்கி விட்டனர்.
அந்த திட்டங்களில் - எல்பிஜி சிலிண்டர்களுக்கான மாற்று விருப்பங்களும் அடங்கும். அதாவது கேஸ் சிலிண்டருக்கு பதிலாக வேறு எதையெல்லாம் பயன்படுத்தி சமைக்கலாமோ.. அதைதெல்லாம் மக்கள் வாங்கி வருகின்றனர்; வாங்க முனைகின்றனர். அப்படியாக கேஸ் சிலிண்டர் மாற்றாக 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 5 மாற்று ஆப்ஷன்கள் உள்ளன.

1. இண்டக்ஷன் குக்டாப்ஸ் (Induction Cooktop) அல்லது இண்டக்ஷன் ஸ்டவ் (Induction Stove): இண்டக்ஷன் குக்டாப்ஸ் ஆனது பாரம்பரிய எல்பிஜி சமையலுக்கான வேகமான, அதிக ஆற்றல் திறன் கொண்ட மற்றும் பாதுகாப்பான மாற்று ஆகும். இது மின்சாரத்தில் இயங்குகின்றன மற்றும் சமையல் பாத்திரங்களை நேரடியாக சூடாக்க மின்காந்த ஆற்றலை பயன்படுத்துகின்றன. கடந்த சில நாட்களாக இது ஏற்கனவே செம்ம டிமாண்டில் உள்ளது; பல ஆன்லைன் தளங்களில் அவுட் ஆப் ஸ்டாக் ஆக உள்ளன.
2. எலெக்ட்ரிக் பிரஷர் குக்கர் (Electric pressure cooker): சீல் செய்யப்பட்ட அழுத்தம் மற்றும் மின்சார வெப்பமாக்கலின் உதவியுடன் உணவை விரைவாக சமைக்கப்படுவதால், எலெக்ட்ரிக் பிரஷர் குக்கர்களும் எல்பிஜி சமையலுக்கான ஒரு சிறந்த மாற்று ஆகும். இதுவும் பாதுகாப்பானவை மற்றும் சமைக்க வசதியானவை. இதைக்கொண்டு அரிசி, சூப்கள் மற்றும் குழம்புகள் உட்பட பலவற்றை சமைக்கலாம்.
3. ஏர்ஃபிரையர் (Airfryer): எல்பிஜி நெருக்கடி குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஏர்ஃபிரையர்கள் மற்றொரு சிறந்த தேர்வாகும். எண்ணெய் இல்லாத சமையலை விரும்புபவர்களிடையே ஏர்ஃபிரையர்கள் ஒரு பிரபலமான தேர்வாகும். இது பெரும்பாலும் டீப் ஃப்ரை செய்யவும், உணவுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. பொரியல், காய்கறிகள், கோழி மற்றும் பிற சிற்றுண்டிகள் போன்ற உணவு பொருட்களை இதில் வசதியாக சமைக்கலாம்.
4. சோலார் குக்கர் (Solar Cooker): சோலார் குக்கர் என்பது சூரிய ஒளியை முதன்மை ஆற்றல் மூலமாக நம்பியிருக்கும் சமையல் சாதனம் ஆகும். இதற்கு எந்த எரிபொருளும் அல்லது மின்சாரமும் தேவை இல்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த சோலார் குக்கர்களும் பயன்படுத்த பாதுகாப்பானது. இது ல வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களில் வருகின்றன. மேலும் இன்டோர் சோலார் குக்கிங் சிஸ்டம் கூட இப்போதெல்லாம் கிடைக்கின்றன.
5 மற்றும் 6. மேற்கண்ட 4 முக்கியமான விருப்பங்கள் மட்டுமின்றி மைக்ரோவேவ், பயோகேஸ் போன்ற பிற விருப்பங்களும் எல்பிஜி பற்றாக்குறை தொடர்பான சிக்கலில் நம்மை பாதுகாக்கும்; இவைகளும் கூட நிரூபிக்கப்பட்ட எல்பிஜி சமையலுக்கான பயனுள்ள மாற்றாக பார்க்கப்படுகின்றன. சரி மேற்கண்ட 6 ஆப்ஷன்களில் எதை நீங்கள் தேர்வு செய்யப் போகிறீர்கள் அல்லது எது உங்கள் வீட்டில் ஏற்கனவே உள்ளது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக உறுதியளித்து வருகிறது. மேலும் முன்பதிவு செய்த சுமார் 2.5 நாட்களுக்குள் எல்பிஜி சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர், ஆனாலும் மக்கள் மத்தியில் நிலவும் மற்றும் பீதி குறைந்தபாடில்லை. அதன் விளைவாகவே, முன்னரே குறிப்பிட்டபடி அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய முக்கிய இகாமர்ஸ் தளங்களில் உள்ள பெரும்பாலான இண்டக்ஷன் ஸ்டவ்கள் கையிருப்பில் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








