Home
News

இதுக்கு தானே காத்திருந்தோம்.. Aadhaar வைத்து இருப்பவர்கள் எதிர்பார்த்தது நடந்துருச்சு.. புது App-க்கு நன்றி!

ஆதார் அட்டைய (Aadhaar Card) ஒரு முக்கிய அடையாள அட்டையாக அல்லது அடையாள ஆவணமாக பயன்படுத்தி வந்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ். நீங்கள் பல காலமாக எதிர்பார்த்து, காத்திருந்த ஒரு விஷயம் இப்போது நிஜமாகி விட்டது. இதற்கு நாம் - புதிததாக அறிமுகமான ஆதார் ஆப்பிற்கு (New Aadhaar App) தான் நன்றி கூற வேண்டும்!

ஏனென்றால்.. யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்து கொண்ட சமீபத்திய விளம்பர வீடியோவில், ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்தி பயனர்கள் தங்கள் அடையாளத்தை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க இந்த ஆதார் ஆப் ஆனது எவ்வாறு அனுமதிக்கிறது என்பதை விளக்கியது.

Aadhaar வைத்து இருப்பவர்கள் எதிர்பார்த்தது நடந்துருச்சு!

யுஐடிஏஐ வெளியிட்டுள்ள விளம்பரமானது, ஒரு பயணி தான் தங்குவதற்கான ஒரு ஹோட்டலுக்குள் செல்கிறார். ஆனால் அவர் தனது ஆதார் அட்டையை கொண்டுவர மறந்துவிட்டதை உணர்கிறார். பிஸிக்கல் ஐடி கார்ட்டை (Physical ID Card) வழங்குவதற்கு பதிலாக அல்லது நகல்களை (Xerox) சமர்ப்பிப்பதற்கு பதிலாக, அந்த பயணி பித்யா ஆதார் ஆப்பை பதிவிறக்கம் செய்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி தனக்கான சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கிறார்.

அதாவது பயணிகள் ஒரிஜினல் ஆதார் அட்டையை அல்லது பிஸிக்கல் ஆதார் அடையாள ஆவணத்தை எடுத்து செல்லாமலேயே ஹோட்டல் செக்-இன்களை முடிக்க ஆதார் ஆப் ஒரு புதிய வழியாக இருக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. வீடியோவில் உள்ள செயல்விளக்கமானது, ஹோட்டல்கள் ஆனது ஆதார் ஆப்பில் உருவாக்கப்பட்ட க்யூஆர் கோட் மூலம் விருந்தினரின் அடையாளத்தை உடனடியாக சரிபார்க்க உதவும் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த ஆதார் ஆப் ஹோட்டல் செக்-இன் (Aadhaar app hotel check-in) எவ்வாறு செயல்படுகிறது? ஒரு பயனர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து புதிய ஆதார் ஆப்பை பதிவிறக்குவதன் மூலம், இந்த செயல்முறை தொடங்குகிறது. ஆப்பை இன்ஸ்டால் செய்த பின், பயனர் தங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, முக சரிபார்ப்புக்காக (Face verification) போனின் கேமராவைப் பயன்படுத்தி அடையாள அங்கீகாரத்தை முடிக்க வேண்டும்

முக அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும், ஆதார் ஆப் ஆனது பயனரின் சரிபார்க்கப்பட்ட அடையாள விவரங்களைக் கொண்ட க்யூஆர் கோட்-ஐ உருவாக்குகிறது. ஹோட்டல் வரவேற்பாளர் , வரவேற்பு மேசையில் உள்ள ஒரு டிவைஸை பயன்படுத்தி க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்வார். பின்னர் ஆதார் அமைப்பானது, உடனடியாக பயனரின் அடையாளத்தை சரிபார்க்கும்.

இதன் கீழ் ஹோட்டலுக்கு வரும் ஒரு விருந்தினர் அவருடைய பிஸிக்கல் டாக்குமெண்ட்டை வழங்காமல் செக்-இன் செயல்முறையை முடிக்க முடியும். யுஐடிஏஐ -யின் செயல்விளக்க வீடியோவில் - அடையாள அட்டை ஆவணங்களின் நகல்களுக்கான தேவையை குறைக்கும் நோக்கம் கொண்ட தனியுரிமை பாதுகாக்கப்பட்ட தரவு பகிர்வு (Privacy-protected data sharing) மற்றும் உடனடி சரிபார்ப்பு (Instant verification) போன்ற அம்சங்களையும் எடுத்துக்காட்டுகிறது.

VERDICT: எல்லாமே ஓகே தான். ஆனால் இந்த செயல்முறையின் கீழ் வரும் க்யூஆர் கோட் ஸ்கேனிங் டிவைஸ் ஆனது நாம் செல்லும் எல்லா ஹோட்டல்களிலும் அல்லது தங்கும் விடுதிகளிலும் இருக்கும என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. மற்றபடி யுஐஏடிஐ-இன் இந்த புதிய அடையாள சரிபார்ப்பில் எந்த குறையும் இருப்பது போல் தெரியவில்லை. நிச்சயமாக இது ஒரிஜினல் ஆதார் அட்டையையும் அல்லது ஜெராக்ஸ்களையும் கையோடு தூக்கிக்கொண்டு செல்லும் வேலையை நிச்சயம் குறைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Goodbye to physical ID New Aadhaar App QR Code Verification Now Allows Hotel Check in UIDAI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X