Just In
- 12 hrs ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 21 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 1 day ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- News
சென்னை உஸ்மான் சாலை பாலம்.. அடுத்த 280 நாட்களுக்கு ஹெவி டிராபிக்! போக்குவரத்து போலீஸ் அட்வைஸ்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Movies
இரண்டே நாளில் 200 கோடி வசூலை நெருங்கும் பதான்... தெறித்து ஓடிய ஷாருக்கான் ஹேட்டர்ஸ்
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இனி கேஸ் விலை அதிகமானால் வருத்தப்பட வேண்டாம்.! வந்தாச்சு IndianOil சோலார் அடுப்பு.!
தற்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சில புதிய தொழில்நுட்பங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு செலவையும் குறைக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் இந்தியன் ஆயில் காரப்பரேஷன் லிமிடெட் ஒரு அசத்தலான சூரிய அடுப்பை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டில் அனைவருக்கும் தெரியும் நாளுக்கு நாள் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு மக்கள் இண்டக்ஷன் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனாலும் இண்டக்ஷன் அடுப்பை அதிக நேரம் பயன்படுத்தினாலும் மின்சார கட்டணம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வருகிறது. அதாவது இந்த இண்டக்ஷன் அடுப்பை அதிக நேரம் பயன்படுத்தினால் மின்சார கட்டணத்திற்கு அதிகப் பணம் செலவாகிறது.

எனவே சமையல் எரிவாயு மற்றும் இண்டக்ஷன் அடுப்பு போன்றவை தவிர்க்கவும், உங்களது பணத்தை மிச்சப்படுத்தவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒரு புதிய முயற்சியைச் செயல்படுத்தி உள்ளது. அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சூர்யா நூதன் (Surya Nutan) என்ற சூரிய அடுப்பை அறிமுகம் செய்துள்ளது.

பழைய சோலார் அடுப்புகள் போல் இல்லாமல் இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. குறிப்பாக சூர்யா நூதன் அடுப்பை மேற்கூரையில் அல்லது வெயிலில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் சூர்யா நூதன் அடுப்பை சமையல் அறையில் எளிமையாகப் பொருத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இது பார்ப்பதற்கு ஒரு சாதாரண அடுப்பு போல இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த அடுப்பில் இரண்டு அலகுகள் கிடைக்கிறது. ஒரு யூனிட் சமையலறையிலும் மற்றொன்று வெளியில் வெயிலிலும் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு சூர்ய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் தெர்மல் பேட்டரியும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனால் இரவு நேரத்திலும் இதை அருமையாகப் பயன்படுத்த முடியும் என்பது தான் சிறப்பு.

அதேபோல் இதில் பகலில் ஆற்றலைச் சேமித்து வைத்து இரவில் சீராக இயக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு சூர்யா நூதன் சோலார் ஸ்டவ் இரண்டு வகைகளில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் குறைந்த பட்ச விலை ரூ.12,000 எனவும், டாப் வேரியண்டின் விலை ரூ.23000 எனவும் கூறப்படுகிறது.

தற்போது வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) இந்த சூர்யா நூதன் சோலார் சூரிய அடுப்பை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யவில்லை. ஆனால் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது சந்தைக்கு வரும்பட்சத்தில் இந்தியன் ஆயில் கேஸ்ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பம்ப் ஆகிய இடங்களில் இருந்து வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த அடுப்பை ரூ.12000 கொடுத்து வாங்குவதன் மூலம் பல நன்மைகள் இருக்கிறது. அதாவது ஒரு பக்கம் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மறுபக்கம் மின்சார கட்டணம் உயர்வு போன்றவற்றில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் உங்களது பணத்தை மிச்சப்படுத்தவும், இலவசமாக உணவுப் பொருட்களைச் சமைக்கவும் முடியும். கண்டிப்பாக இந்த சூர்யா நூதன் அடுப்பு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470