Home
How to

EPFO மெம்பர்கள் செய்ய வேண்டிய கட்டாய இ-நாமினேஷன்.. ஏப்ரல் 1-க்கு முன் செய்வது நல்லது.. ஏனென்றால்?

ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய வருமான வரி விதிகள், புதிய சம்பள விதிகள் என வரி, நிதி, பணம் தொடர்பான பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையிலும் கூட நீங்கள் உங்களுடைய இபிஎப்ஓ இ-நாமினேஷனை ஃபைல் (EPFO e-nomination filing) செய்யவில்லை என்றால் அதை உடனே செய்யவும்.

ஏன்? எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் குடும்பத்தினர், உங்கள் வருங்கால வைப்பு நிதி (Provident Fund), ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பலன்களை (Pension and insurance benefits) பெறுவதை உறுதிசெய்ய, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இ -நாமினேஷனை பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.

EPFO மெம்பர்கள் செய்ய வேண்டிய கட்டாய இ-நாமினேஷன்!

க்ளைம் செட்டில்மென்ட் சிக்கல் ஆகிவிடும்: இ-நாமினேஷனை பதிவு செய்யும் செயல்முறை எளிமையானது மட்டுமின்றி மிகவும் முக்கியமான ஒரு படியும் கூட. இதை பெரும்பாலும் பல சம்பளதாரர்கள் கவனிக்க தவறிவிடுகிறார்கள். இதன் விளைவாக க்ளைம் செட்டில்மென்ட் சிக்கலானதாகவும், அதிக நேரம் எடுப்பதாகவும் ஆகிவிடுகிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த செயல்முறை முற்றிலும் டிஜிட்டல் மயமானது மற்றும் சில நிமிடங்களில் இதை செய்து விடலாம்

எப்படி? பயனர்கள் யுஏஎன் (UAN) என்கிற தங்களின் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை பயன்படுத்தி இபிஎப்ஓ ​​போர்டல் (EPFO Portal) மூலம் இ-நாமினேஷனை பதிவு செய்யலாம். உங்கள் இ-நாமினேஷன ஃபைலிங்கை எந்த சிரமமும் இல்லாமல் எப்படி முடிப்பது என்பது குறித்த எளிமையான, படிப்படியான வழிமுறைகள் இதோ:

1: இபிஎப்ஓ மெம்பர் இணையதளத்திற்கு (EPFO member portal) சென்று உங்கள் யுஏஎன் நம்பரை பயன்படுத்தி லாக்இன் (Login) செய்யவும்.
2: உங்கள் ப்ரொபைல் அல்லது மேனேஜ் பிரிவின் (Profile or Manage Section) கீழ் உள்ள இ-நாமினேஷன் (E-Nomination) விருப்பத்தை கிளிக் செய்து திறக்கவும்.

3: உங்கள் பரிந்துரைக்கப்பட்டவரின் (Nominee) விவரங்கள், உறவுமுறை மற்றும் பங்கு சதவீதத்தை சேர்க்கவும்.
4: ஒடிபி (OTP) அல்லது தேவையான அங்கீகார படிநிலையை பயன்படுத்தி நாமினேஷனை சரிபார்க்கவும்.
5: இறுதி சமர்ப்பிப்பை (Final submission) சேமித்து, பூர்த்தி செய்யப்பட்ட நாமினேஷனுக்கான ரெகார்ட்டை வைத்திருக்கவும்.

இபிஎப்ஓ நன்மைகளை பெறும் பலரும் இந்த செயல்முறையை செய்ய - காலம் கடந்துவிடும் வரை தாமதப்படுத்துகிறார்கள். விடுபட்ட அல்லது காலாவதியான நியமன விவரங்கள் ஆனது உங்களுடையய குடும்ப உறுப்பினர்களின் உரிமைகோரல்களை மெதுவாக்குவதோடு, மேலும் கடினமாக்கும் என்பதை மனதில் கொண்டு, முடிந்த வேகத்தில் இ-நாமினேஷன ஃபைல் செய்யவும். முன்னரே குறிப்பிட்டபடி ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாற்றங்களை சந்திக்க உள்ளன,குறிப்பாக சம்பள விதிகள்!

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகளானது, நிறுவனத்திற்கான உங்களுடைய சிடிசி-ஐ மாற்றாது; ஆனால் உங்கள் சம்பளம் கட்டமைக்கப்படும் விதத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது புதிய விதிகளானது வரி விகிதங்களை அதிகரிக்காது, ஆனால் சம்பள சலுகைகள் மற்றும் அலோவன்ஸ்கள் எவ்வாறு மதிப்பிடப்பட வேண்டும் என்பதை வரையறுக்கும்

இதன் மூலம் உங்கள் சேலரி பேக்கேஜின் ஒரு பெரிய பகுதி இப்போது வரி விதிக்கக்கூடிய வருமானமாக கருதப்படலாம். சலுகைகள், திருப்பி செலுத்துதல்கள் மற்றும் எம்பிளாயர் வழங்கும் நன்மைகள் தொடர்பான விதிகளை அரசாங்கம் கடுமையாக்குவதால், நிறுவனங்கள் புதிய கட்டமைப்புடன் ஊதிய கட்டமைப்புகளை சீரமைக்க தொடங்கும் - இதனால் ​​ஊழியர்கள் தங்கள் டேக் ஹோம் சேலரி, வரிப்பொறுப்பு அல்லது சம்பள பிரிவுகளில் மாற்றங்களை சந்திக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
File mandatory EPFO e nomination Before Its too Late and ensure your family access PF Pension benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X