பேங்க் அக்கவுண்ட்.. ஏப்.1 புது ரூல்ஸ்.. ATM, UPI லிமிட் இதுதான்.. 3 அதிரடி மாற்றங்கள் அமல்.. என்னென்ன வருது?
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. இதில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொண்டுவரும் விதிகள் ஏடிஎம், யுபிஐ, ஐஎம்பிஎஸ் மற்றும் மொபைல்/இன்டர்நெட் பேங்கிங்கில் நேரடி மாற்றத்தை கொண்டுவர உள்ளது. மேலும், எஸ்பிஐ (SBI) எச்டிஎப்சி (HDFC) பேங்குகளிலும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது பிஎஸ்பிடி (BSBD) பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (Basic Savings Bank Deposit) அக்கவுண்ட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருகிறது. இந்த அக்கவுண்ட்களுக்கு மினிமம் பேலன்ஸ் கிடையாது, ஏடிஎம் கார்டுக்கு வருடாந்திர பில் கிடையாது. டெபாசிட் லிமிட் கிடையாது.

எந்த பேங்குகளிலும் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து கொள்ளலாம். இதனால், பேங்குகளுக்கு லாபம் கிடைக்காது. இருப்பினும், பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பதை உறுதிப்படுத்த இந்த அக்கவுண்ட்டை வழங்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. இதில் மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் சேவை வழங்கப்பட உள்ளன.
1. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அன்லிமிடெட் டெபாசிட்களை செய்து கொள்ளலாம். யுபிஐ, ஐஎம்பிஎஸ், ஆர்டிஜிஎஸ், நெப்ட் போன்ற எந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வழியாகவும் டெபாசிட் செய்து கொள்ளலாம். நேரடியாக கேஷ் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதற்கு மாதாந்திர லிமிட் கிடையாது.
2. ஏடிஎம் கார்டு அல்லது ஏடிஎம் கம் டெபிட் கார்டுக்கு வருடாந்திர கட்டணம் விதிக்கப்படாது. பேங்குகள் கட்டாயமாக ஏடிஎம் கம் டெபிட் கார்டுகளை பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்களுக்கு வழங்க வேண்டும். ஏடிஎம் கார்டுகளில் 4 பரிவர்த்தனைகளை இலவமாக செய்து கொள்ளலாம்.
3. மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் சேவைகளை பேங்குகள் கொடுக்க வேண்டும். எந்த கட்டணமும் விதிகப்படாமல், இந்த சேவைகள் கொடுக்கப்படும். இந்த பரிவர்த்தனைகளுக்கும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் தொடர்பில்லை. ஆகவே, யுபிஐ, ஐஎம்பிஎஸ் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.
4. இலவச செக் புக் வழங்கப்படும். பேங்களுக்கு ஏற்ப குறைந்தது 25 லீப்கள் கொண்டிருக்கும். இலவச பாஸ்புக் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் கொடுக்கப்படும். இந்த விதிகளின்படி பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் சேவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கிடைக்க உள்ளது.
எச்டிஎப்சி பேங்க் விதிகளில் ஏடிஎம் கட்டணங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாற்றம் வருகிறது. எச்டிஎப்சி பேங்க் ஏடிஎம்களில் டெபிட் கார்டு வழியாகவும் பணத்தை எடுக்கலாம். அதேபோல யுபிஐ பயன்படுத்தியும் பணத்தை எடுக்கலாம். ஆனால், டெபிட் கார்டு வழியாக எடுக்கப்படும் பரிவர்த்தனைகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டு கட்டணம் விதிக்கப்படுகிறது.
இது ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மாற்றப்படுகிறது. யுபிஐ வழியாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்தாலும் டெபிட் கார்டு கட்டணத்தில் அது சேர்க்கப்படும். ஆகவே, டெபிட் கார்டுக்கான கட்டணம் இருக்கும். எச்டிஎப்சி ஏடிஎம்களில் 5 முறை இலவச பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். மற்ற ஏடிஎம்களில் பெருநகரங்களாக இருந்தால், 3 முறை எடுக்கலாம்.
பெருநகரங்கள் அல்லாத பகுதிகளாக இருந்தால் 5 முறை எடுக்கலாம். இதற்கு மேல் எடுத்தால், 1 பரிவர்த்தனைக்கு ரூ.23 செலுத்த வேண்டும். இதில் டெபிட் கார்டு, யுபிஐ என்று தனித்தனியாக கணக்கில் எடுக்கப்படாது. ஏடிஎம்மில் இருந்து எப்படி பணத்தை எடுத்தாலும், அது ஒரே கணக்கில் எடுக்கப்படும். அடுத்த எஸ்பிஐ பேங்கில் புதிய விதிகள் வருகின்றன.
எஸ்பிஐ கார்டுகள் வழியாக ரிவார்ட் பாயிண்ட்களை ரீடெம்ஷன் செய்யும் போது ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து லிமிட் இருக்கும். ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 60,000 ரிவார்ட் பாயிண்ட்களை மட்டுமே ரீடெம்ஷன் செய்ய முடியும். மீதம் இருக்கும் பாயிண்ட்களை அடுத்த மாதம் ரீடெம்ஷன் செய்து கொள்ளலாம். இந்த விதிகளே பேங்குகளில் அமலுக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








