மார்க்கெட்டே அதிர போகுது.. 7000mAh பேட்டரி.. 108MP கேமரா.. வருகிறது புது Honor 5ஜி போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்80ஐ (Honor X80i) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு உலக நாடுகளில் இந்த போன் அறிமுகமாகும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஹானர் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்80ஐ அம்சங்கள் (Honor X80i Specifications): 6.6-இன்ச் பிளாட் ஒஎல்இடி (flat OLED) டிஸ்பிளே உடன் இந்த ஹானர் எக்ஸ்80ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (6,500 nits peak brightness) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7100 (MediaTek Dimensity 7100) சிப்செட் உடன் இந்த ஹானர் எக்ஸ்80ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு 16 (android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் எக்ஸ்80ஐ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளது.
108எம்பி மெயின் கேமரா + 5எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்80ஐ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவு இந்த ஹானர் எக்ஸ்80ஐ ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய ஹானர் போனில் உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் இந்த ஹானர் போனில் உள்ளது. மேலும் ஏஐ ஷார்ட்கட் பட்டன் ஒன்றும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்80ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. மேலும் இந்த ஹானர் எக்ஸ்80ஐ போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
photos credits: gizmochina, weibo


Click it and Unblock the Notifications








