கம்மி விலையில் பழைய iPhone வாங்கலாம்னு போட்ட பிளானில் மண் அள்ளி போட்டாங்க.. 2 மாடல்களின் விலை உயர்வு!
நீங்கள் ஐபோன் 15 (iPhone 15) அல்லது ஐபோன் 16 (iPhone 16) ஆகிய 2 மாடல்களில் ஒன்றை வாங்குவதை தள்ளிப்போட்டு கொண்டிருந்தால், உடனே செயல்பட இதுவே சரியான நேரமாக இருக்கலாம். ஏனென்றால் பழைய ஐபோன்களின் விலை உயர போகிற. ஆனால் இதற்கு காரணம் - உலகளாவிய மெமரி சிப் பற்றாக்குறையால் அல்ல!
மணிகண்ட்ரோலின் (Moneycontrol) சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான தனது டிஜி சப்போர்ட் (DG Support) என்கிற டிமாண்ட் ஜெனரேஷன் (Demand generation) ஆதரவை விலக்கி கொள்கிறது. இந்த நடவடிக்கை, பழைய ஐபோன் மாடல்களின் உண்மையான விலையை சுமார் ரூ. 5,000 வரை உயர்த்தக்கூடும்.

டிஜி சப்போர்ட் என்றால் என்ன (What is DG Support), அது ஏன் முக்கியமானது? டிஜி ஆதரவு என்பது, அதிகாரப்பூர்வ எம்ஆர்பி-ஐ மாற்றாமல் தள்ளுபடிகளை வழங்க சில்லறை விற்பனையாளர்களுக்கு உதவுவதற்காக பிராண்டுகள் பயன்படுத்தும் ஒரு மறைமுக ஊக்கத்தொகை (backend incentive) ஆகும்.
ஆப்பிளை பொறுத்தவரை, இது ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 போன்ற மாடல்களின் விலைகளை, அவற்றின் அசல் விலையை விட குறைவான, போட்டித்தன்மை மிக்க விலைக்கு வைத்திருந்தது. அந்த ஆதரவு திரும்ப பெறப்பட்டவுடன், அந்த அதிகாரப்பூர்வமற்ற விலை நன்மைகள் மறைந்துவிடும், மேலும் அந்த வித்தியாசத்திற்கான கட்டணத்தை வாங்குபவர்களே செலுத்த வேண்டியிருக்கும்.
ஐபோன் 17 விலையும் உயர்த்தப்படுமா? இந்த விலை ஏற்றம் பழைய மற்றும் தொடர்ந்து விற்பனையாகும் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். ஐபோன் 17 சீரிஸை பாதிக்காது. இந்த மாடல்களில் எம்ஆர்பி-கள் மாறவில்லை என்றும், டி.ஜி சரிசெய்தல்கள் எப்போதும் ஆப்பிளின் விருப்பத்திற்கேற்பவே இருக்கும் என்றும், தொழில்துறை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் மணிகண்ட்ரோலிடம் கூறியுள்ளராம்.
மேலும் அவர், போட்டியாளர்களை போலல்லாமல், ஆப்பிள் தனது பிளாக்ஷிப் மாடல்களின் விலைகளை உயர்த்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இடத்தில் - ஆப்பிள் ஏற்கனவே கேஷ்பேக் சலுகைகளை ரூ.6,000 இலிருந்து ரூ.1,000 ஆக குறைத்து விட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக வரவிருக்கும் ரூ.5000 வரையிலான விலை ஏற்றம் ஆனது - மிகவும் வெளிப்படையான விலை ஏற்றமாக இருக்கும்
OPINION - ஆப்பிளின் இந்த நடவடிக்கை, வெவ்வேறு காரணங்களுக்காக இருந்தாலும், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு நிச்சயமாக இது ஆச்சரியமளிக்காது, ஏனெனில் இது ஆப்பிள் மட்டுமே பின்பற்றும் ஒரு தனிப்பட்ட போக்கு அல்ல. ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள பெரும்பாலான ஆண்ட்ராய்டு மொபைல் தயாரிப்பாளர்களும் - கடந்த பல வாரங்களாகவே தத்தம் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன.
சாம்சங் மற்றும் ஷாவ்மீ முதல் மோட்டோரோலா மற்றும் நத்திங் வரை, ஏறக்குறைய ஒவ்வொரு நிறுவனமும் பரந்த அளவிலான மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. மேலும் இந்த விலை உயர்வுகள் மார்ச் மாதத்திலும் தொடர்கின்றன. மெமரி மற்றும் ஸ்டோரேஜ் பாகங்களின் விலை உயர்வே இதற்கான முதன்மை காரணம் என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த போக்கு இப்போதைக்கு மாற வாய்ப்பில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். பழைய ஐபோன்களை பொறுத்தவரை, இந்த டிவைஸ்களின் அதிகாரப்பூர்வ எம்ஆர்பி மாறாது, ஆனால் சந்தையில் விற்கப்படும் விலை மாறும். எனவே நீங்கள் ஐபோன் 16 அல்லது ஐபோன் 15 வாங்கத் திட்டமிட்டிருந்தால், இப்போதே.. உடனே அதை செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








