180 நாள் SIM ஆக்டிவ் பிளானை இறக்கிய Vodafone Idea.. அன்லிமிடெட் 4G, 5G டேட்டா, வாய்ஸ், SMS-னு எல்லாம் உண்டு!
வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய 4ஜி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. சுவாரசியமாக இந்த 2 திட்டங்களும் அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகின்றன. என்ன திட்டங்கள்? என்ன விலை? என்னென்ன நன்மைகள்? இதோ விவரங்கள்:
வோடபோன் ஐடியா அறிமுகம் செய்து உள்ள 2 புதிய திட்டங்களின் விலைகள் - முறையே ரூ.1050 மற்றும் ரூ.2180 ஆகும். இந்த திட்டங்கள் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா ஆகிய இரண்டையும் வழங்குகின்றன. ஆனால் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5ஜி வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ.1050 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் புதிய ரூ.1050 திட்டமானது 84 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகள் கிடைக்கும்
ரூ.1050 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டாவானது 28 நாட்களுக்கு 300ஜிபி என வரம்பிடப்பட்டு உள்ளதும் இங்கே குறிப்பிடத்தகது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் கீழ் வி பயனர்களுக்கு 4ஜி மற்றும் 5ஜி டேட்டா ஆகிய இரண்டும் வழங்கப்படுகிறது, ஆனால் டேட்டா பயன்பாட்டு வரம்பு ஒரே மாதிரியாக இருக்கும்.
வோடபோன் ஐடியா ரூ. 2180 ப்ரீபெய்ட் திட்டம்: வோடஃபோன் ஐடியா ரூ. 2180 ப்ரீபெய்ட் திட்டம் 180 நாட்கள் சேவை செல்லுபடியுடன் வருகிறது. இதன் மூலம் பயனர்கள் வரம்பற்ற டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றைப் பெறுகிறார்கள். வரம்பற்ற டேட்டா 28 நாட்களுக்கு 300GB என வரம்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டமும் பயனர்களுக்கு 4G மற்றும் 5G டேட்டா இரண்டையும் வழங்குகிறது, மேலும், டேட்டா பயன்பாட்டு வரம்பு ஒரே மாதிரியாக உள்ளது.
வோடபோன் ஐடியா ரூ.2180 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் புதிய ரூ.2180 திட்டமானது 180 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இதுவும் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது.
மேலும் ரூ.1050 திட்டத்தை போலவே இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டாவும் கூட 28 நாட்களுக்கு 300ஜிபி என வரம்பிடப்பட்டு உள்ளது மற்றும் இந்த திட்டத்தின் கீழ் வி பயனர்களுக்கு 4ஜி மற்றும் 5ஜி டேட்டா ஆகிய இரண்டுமே வழங்கப்படும்; ஆனால் டேட்டா பயன்பாட்டு வரம்பு (28 நாட்களுக்கு 300ஜிபி லிமிட்) ஒரே மாதிரியாக இருக்கும்.
தினசரி மற்றும் மாதாந்திர செலவை பொறுத்தவரை, இந்த இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியாகவே உள்ளன. எனவே நீங்கள் ரூ.1050 அல்லது ரூ.2180 திட்டமீன் எதை தேர்ந்தெடுத்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான செலவு ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கும். அதாவது தினசரி செலவு 12 ரூபாய் 50 பைசா ஆக இருக்கும்; மாதாந்திர செலவு முறையே ரூ.375 மற்றும் ரூ.363 ஆக இருக்கும்.
வி நிறுவனத்தின் புதிய ரூ.1050 மற்றும் ரூ.2180 ஆகிய 2 திட்டங்களும் தற்போது சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைப்பதாக டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது இந்த திட்டங்கள் வேறு சில பகுதிகளில் கிடைக்காமல் இருக்கலாம் என்று அர்த்தம்.
OPINION: அதிக விலை நிர்ணயத்தை கொண்டிருந்தாலும் கூட இவ்விரு பிளான்களுமே, நுகர்வோருக்கு ஓடிடி (OTT) என்கிற ஓவர் தி டாப் (Over-the-top) நன்மைகள் எதையும் வழங்கவில்லை. ஆக இவ்வளவு பணம் செலவழிக்கும் ஒரு வாடிக்கையாளருக்கு ஓடிடி இல்லாதது நிச்சயம் ஒரு குறையாக தோன்றும்.
ஒருவேளை அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறதே, உண்மையிலேயே இது ஒரு அருமையான விஷயம் என்று நீங்கள் நினைத்தால், அதிலும் லிமிட் உள்ளது. இவ்விரு திட்டங்களிலுமே அன்லிமிடெட் டேட்டாவானது 28 நாட்களுக்கு 300ஜிபி என வரம்பிடப்பட்டுள்ளது. இது போதுமானதாக இருந்தாலும், வரம்பற்ற டேட்டா என்ற சொல்லுக்கு இது தகுதி பெறவில்லை. எல்லாவற்றை விட முக்கியமான சென்னை சார்க்கிளில் மட்டுமே (இப்போதைக்கு) ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








