Home
How to

இண்டேன் கேஸ் கஸ்டமரா நீங்கள்? தொடர்ந்து சிலிண்டர் பெற கண்டிப்பாக இதை செய்யணும்.. 16 இலக்க நம்பர், 2 வழிகள்!

தங்கள் விவரங்களை இன்னும் புதுப்பிக்காத இன்டேன் எல்பிஜி கேஸ் வாடிக்கையாளர்கள் (Indane Gas Customers), சிலிண்டர் விநியோகத்தில் தடைகளையும், நேரடி பணப்பரிமாற்ற மானியங்களையும் தொடர்ந்து பெறுவதில் சிக்கலையும் சந்திக்கலாம். எல்பிஜி கேஸ் சிலிண்டர் கனெக்ஷன் உடன் தங்கள் ஆதார் நம்பரை இன்னும் இணைக்காத இண்டேன் வாடிக்கையாளர்ளுக்கு தான் இந்த பிரச்சனைகள் வரும்.

நல்ல விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை (Registered Mobile Number) பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ இன்டேன் தளங்கள் மூலம் இந்த இகேஒய்சி செயல்முறையை ஆன்லைனிலேயே முடிக்க முடியும். அதாவது விநியோகஸ்தரை நேரில் சந்திக்காமலேயே இந்த அப்டேட் செயல்முறையை வீட்டில் இருந்தபடி நீங்களே எளிதாக செய்யலாம். இதை செய்ய உங்களுக்கு 2 எளிமையான வழிகள் உள்ளன.

இண்டேன் கேஸ்: தொடர்ந்து சிலிண்டர் பெற கண்டிப்பாக இதை செய்யணும்!

ஏற்கனவே இகேஒய்சி-ஐ முடித்தவர்களுக்கு மீண்டும் இகேஒய்சி செய்ய தேவையில்லை என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக நீங்கள் ஏற்கனவே உங்கள் ஆதார் விவரங்களை உங்கள் இண்டேன் கேஸ் கனெக்ஷன் உடன் இணைத்து இருந்தால்.. மீண்டும் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை.

இண்டேன் எல்பிஜி கேஸ் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வழியாக இகேஒய்சி செயல்முறையை முடிப்பது எப்படி? இண்டேன் கேஸ் (இந்தியன்ஆயில் ஒன்) வழங்குநரின் மொபைல் ஆப் (IndianOil One app) அல்லது உமாங் வலைத்தளத்தை (UMAANG Website) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இந்த இகேஒய்சி செயல்முறையை முடிக்கலாம். நுகர்வோர்கள் தங்கள் எல்பிஜி இணைப்புடன் இணைக்கப்பட்ட ஆதார் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு இந்த செயல்முறையை தொடர வேண்டும்.

இந்தியன்ஆயில் ஒன் ஆப் வழியாக இகேஒய்சி செயல்முறையை முடிப்பது எப்படி? இண்டேன் எல்பிஜி சேவைகளுக்கான இந்தியன் ஆயில் ஒன் ஆப் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது), அதை இன்ஸ்டால் செய்யவும். கூடவே பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கான ஆதார்ஆர்டி ஃபேஸ் ஆப்பையும் (AadhaarRD face app) பதிவிறக்கவும்.

- இந்தியன் ஆயில் ஒன் ஆப்பை திறந்து, அதே (ஆதார் உடன் இணைக்கப்பட்ட) மொபைல் நம்பரை பயன்படுத்தி பதிவு செய்யவும்.
- முன்னதாக கேஸ் வாங்கிய பண ரசீதில் உள்ள 16 இலக்க எல்பிஜி ஐடியை (LPG ID ) லிங்க் செய்யவும்
- ஹோம் ஸ்க்ரீனில் 'மை ப்ரொபைல்' (My Profile) என்பதை கிளிக் செய்யவும்.

- எல்பிஜி டீடெய்ல்ஸ் (LPG details) பகுதிக்கு சென்று, பின்னர் இண்டேன் டீடெய்ல்ஸ் (Indane Details) பகுதிக்கு செல்லவும்.
- இகேஒய்சி (eKYC) விருப்பத்தை கிளிக் செய்யவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஸ்க்ரீனில் தோன்றும். அதை கவனமாக படித்து ஒப்புதல் அளிக்கவும்.
- பேஸ் ஸ்கேன் (Face Scan என்பதை கிளிக் செய்து பயோமெட்ரிக் சரிபார்ப்பை (biometric verification) முடிக்கவும்.

பின்னர் இகேஒய்சி கோரிக்கையை (eKYC request) சமர்ப்பிக்கவும் (பொதுவாக 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஒப்புதல் வழங்கப்படும்). மேலும் எம்ஆதார் ஆப் (mAadhaar App) மூலம் உங்கள் பயோமெட்ரிக் லாக் (Biometric Lock) ஆக்டிவ் ஆக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்; இல்லையெனில் இந்த செயல்முறை நிறைவடையாது.

உமாங் வலைத்தளம் வழியாக இகேஒய்சி செயல்முறையை முடிப்பது எப்படி?
- அதிகாரப்பூர்வ உமாங் இணையதளத்தை திறக்கவும்.
- சர்வீசஸ் பிரிவின் கீழ் இந்தியன் ஆயில் சர்வீசஸ் என்பதை கிளிக் செய்யவும்.
- இகேஒய்சி விருப்பத்தை கிளிக் செய்யவும்
- உங்கள் மொபைல் எண் மற்றும் உருவாக்கப்பட்ட எம்பின் (MPIN) மூலம் லாக்-இன் செய்யவும்
- வழிமுறைகளை பின்பற்றி உங்கள் இகேஒய்சி ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

இண்டேன் இகேஒய்சி செயல்முறையை ஆன்லைனில் முடிக்க என்னென்ன தேவைகள்?
1. ஆதார் கார்டு - பயோமெட்ரிக் அல்லது ஒடிபி அங்கீகாரம் மூலம் கேஒய்சி முடிக்க இது கட்டாயமாகும்.
2. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் - உங்கள் தற்போதைய எல்பிஜி கணக்கில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்.
3. எல்பிஜி இணைப்பு தகவல் - உங்கள் வாடிக்கையாளர் ஐடி, நுகர்வோர் எண் அல்லது இணைப்பு எண்.

இதுதவிர்த்து ஆன்லைன் கேஒய்சி செயல்முறைக்கு எந்தவொரு பிஸிக்கல் டாக்குமெண்ட்களும் தேவையில்லை. (பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக) கேமரா ஆதரவு உடனான உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வழியாக, இண்டர்நெட் கனெக்ஷன் உதவியுடன் நீங்கள் இதை வீட்டில் இருந்தபடியே செய்து முடிக்கலாம்.!

More from GizBot

Best Mobiles in India

English summary
Indane Gas Customers Can Easily Complete eKYC Process Online To Avoid Cylinder Delivery Problems How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X