ஏப்.7 முதல் SALE.. ரூ.4000 டிஸ்கவுண்டில் புது Redmi 5ஜி போன்.. 5800mAh பேட்டரி, 12GB ரேம், IP66.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆகவும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனாகவும் - ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி (Redmi Note 15 SE 5G) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி முக்கிய அம்சங்கள்: இந்த புதிய ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம், 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 5800எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கூறலாம்.

ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி அசல் விலை, ஆபர் விலை: இந்தியாவில் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இருப்பினும், ஷாவ்மீ நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி, ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு ரூ.2,000 சலுகையை வழங்குகிறது. மேலும், நிறுவனம் ரூ.4,000 "ஸ்பெஷல்" அறிமுக தள்ளுபடியையும் வழங்குகிறது. ரெட்மியின் இந்த புதிய போன், ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் சியோமி ஆன்லைன் ஸ்டோர் வழியாக கார்பன் பிளாக், கிரிம்சன் ரிசர்வ் (ரெட்) மற்றும் ஃப்ராஸ்டட் ஒயிட் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.
ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.77-இன்ச் (1080x2392 பிக்சல்ஸ்) கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்
- 3200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ்
- DCI-P3 கலர் கேமட்
- TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட்
- சர்க்கேடியன் ஃப்ரெண்ட்லி மற்றும் ஃப்ளிக்கர் ஃப்ரீ சான்றிதழ்கள்
- குவால்காமின் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட்
- அட்ரினோ ஜிபியு
- 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம்
- 256ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை மெமரி விரிவாக்கம்
- இன்டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் AI ஃபேஸ் அன்லாக்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2.88-இன்ச் லைட் ஹண்டர் 400 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 1/4-இன்ச் சென்சார் கொண்ட 20-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 4K/30 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800mAh பேட்டரி
- 5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஒரு USB டைப்-C போர்ட், GPS, GLONASS, BDS மற்றும் கலிலியோ
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2 ஓஎஸ்
- டூயல் சிம் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 + IP66 ரேட்டிங்
- அளவீட்டில் 164x75.42x7.35மிமீ
- எடை சுமார் 178 கிராம்


Click it and Unblock the Notifications








