ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?

|

Apple iPhone 14 இன் 128ஜிபி வேரியண்ட் விலை பிளிப்கார்ட்டில் ரூ.66,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் ஐபோன் 14 மாடலை அதீத தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ரூ.12,901 தள்ளுபடியுடன் Apple iPhone 14

ஐபோன் 14 சீரிஸ் இல் இடம்பெற்றுள்ள ஐபோன் 14 128ஜிபி வேரியண்ட் விலை ரூ.79,900 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் 16 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ஐபோன் மாடலுக்கு ரூ.12,901 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் ஐபோன் 14 மாடல் ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.66,999 என பட்டியலிடப்பட்டுள்ளது.

ரூ.12,901 பாஸ்.. iPhone14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?

ரூ.45,590 என்ற விலையில் ஐபோன் 14 வாங்கலாமா?

Flipkart Axis Bank கார்ட் மூலம் இந்த ஐபோன் 14 மாடலை வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. நீங்கள் ஐபோன் 14 மாடலை இன்னும் கம்மி விலையில் வாங்க வழிமுறைகள் இருக்கிறது. அது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து ஆப்பிள் ஐபோன் 14 வாங்கினால் ரூ.21,400 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 14 மாடலை ரூ.45,590 என பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.

ஐபோன் 13 விலையில் ஐபோன் 14 வாங்கலாம்

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் ஐபோன் 14 இன் முந்தைய மாடலான ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.62,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ஆகும். இதே நேரத்தில் ஐபோன் 14 இன் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.66,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு போன்களுக்கும் உள்ள வித்தியாசம் ரூ.4000 மட்டுமே ஆகும். இதுவரை இல்லாத அளவில் சிறப்பான தள்ளுபடி உடன் ஐபோன் 14 பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஐபோன் 14 சிறப்பம்சங்கள்

ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 ப்ளஸ் இல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது. ப்ளஸ் மாடலில் 26 மணிநேரம் வரை வீடியோவை நீங்கள் பார்க்கலாம், ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது.

அவசரகால SOS மற்றும் விபத்து கண்டறிதல் அம்சம்

iPhone 14 மற்றும் iPhone 14 Plus ஆகிய மாடல்களில் பழைய ஏ15 பயோனிக் சிப்செட் பொருத்தப்பட்டிருந்தாலும், கேமரா தொகுதியை மேம்படுத்தி ஆப்பிள் வழங்கி இருக்கிறது. மேலும் விபத்து கண்டறிதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் இந்த ஐபோன் மாடல்கள் கொண்டிருக்கிறது. இந்த மாடல்களில் செயற்கைக்கோள் இணைப்பு இருக்கிறது. இதன்மூலம் அவசரகால SOS ஐக் ஆப்பிள் கொண்டுவருகிறது.

ரூ.12,901 பாஸ்.. iPhone14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?

செயற்கைக்கோள் தொடர்பு அம்சம்

செயற்கைக்கோள் அம்சத்திற்கு என தனிப்பயன் வன்பொருள் மற்றும் பெஸ்போக் மென்பொருளை ஆப்பிள் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் பெரிய ஆண்டெனாக்கள் எதுவும் இல்லாமல், செயற்கைக்கோளை அணுக முடியும். இது இருவழி தகவல்தொடர்புகளை ஆதரிக்கிறது. சிக்னல் கிடைக்காத நேரங்களில் இது பேருதவியாக இருக்கும்.

ஐபோன் 14 கேமரா எப்படி?

கேமரா அம்சங்களை பொறுத்தவரை இரண்டு மாடல்களிலும் f/1.5 துளையுடன் கூடிய புதிய 12MP பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த ஒளி பதிவு மற்றும் ஃபாஸ்ட் நைட்மோட் செயல்திறனில் முந்தைய மாடல்களை விட 49% முன்னேற்றம் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என புதிய ஐபோன்களின் முன்புறத்தில் 12 எம்பி ட்ரூடெப்த் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
If You Do this You can Buy Apple iPhone 14 at Rs.45,590 in Flipkart.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X