HTC Metaverse ஸ்மார்ட்போன்: தரமான கம்பேக் கொடுக்குமா? அல்லது மீண்டும் பல்பு வாங்குமா?

|

எந்த துறையாக இருந்தாலும் சரி, கம்பேக் கொடுப்பது என்பது எப்போதுமே ஒரு கெத்தான விடயம்; அதே சமயம் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு விடயமும் கூட! எடுத்துக்காட்டிற்கு நோக்கியா ஸ்மார்ட்போன்களை கூறலாம்.

ஒரு காலத்தில் கிட்டத்தட்ட நம் எல்லோருடைய கைகளிலும் தவழ்ந்த நோக்கியா மொபைல்கள் தற்போது பல வகையான ஸ்மார்ட்போன்களாக "பரிணாமம்" அடைந்த பிறகும் கூட 'நோக்கியா' என்கிற பிராண்ட் பெயர் மட்டுமே நம் மனதில் நிற்கிறது.

என்னதான் ஆராவாரமாய் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூட நோக்கியா ஸ்மார்ட்போன்கள், பெரும்பாலான மக்களின் மனதை கவரவில்லை என்பதே கசப்பான உண்மை. அப்படியான "அந்த கால" நோக்கியாவிற்கு சற்றும் சளைக்காத ஒரு நிறுவனம் தான் - எச்டிசி.

HTC Metaverse ஸ்மார்ட்போன்: தரமான கம்பேக் கொடுக்குமா? பல்பு வாங்குமா?

ஒரு காலத்தில், மார்க்கெட்டில் வாங்க கிடைத்த பெஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தயாரித்து வந்த எச்டிசி நிறுவனம், ஒருகட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாத அளவிலான போட்டிகளை வழங்கிய மற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் அழுத்தத்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து காணாமல் போனது.

இருப்பினும் கூட, எச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் 'டெக் கம்யூனிட்டி'யினர் மத்தியில் இன்றும் பிரபலம்; ஏனெனில் எச்டிசி நிறுவனம் சில சிறந்த ஹார்ட்வேர் உடன் 'க்ளீன்' ஆன ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குவதை எப்போதும் உறுதிசெய்தது.

ஒரு குறிப்பிட்ட மக்களால் மட்டுமே போற்றப்படுவதும்; கைகொடுக்கப்படுவதும், எச்டிசி நிறுவனத்திற்கு போதுமானதாக இல்லை. எனவே கடந்த 2017 - 2018 இல் எச்டிசி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் செயல்பாடுகளில் பெரும்பகுதியை கூகுள் நிறுவனத்திற்கு விற்றது. இதற்கிடையில் தான், எச்டிசி நிறுவனம் தற்போது ஒரு மாஸ் ஆன 'கம்பேக்கை' கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக வருகிற ஜூன் 28 ஆம் தேதி இந்நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது 'மெட்டாவேர்ஸுக்கு' (Metaverse) அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கும், மேலும் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் வைவர்ஸ் (Viverse) என்று அழைக்கப்படவுள்ளது.

அறிவிப்பு தேதியைத் தவிர, எச்டிசி மெட்டாவேர்ஸ் அல்லது எச்டிசி வைவர்ஸ் ஸ்மார்ட்போன் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் இல்லை. நினைவூட்டும் வண்ணம், எச்டிசி நிறுவனம் தனது வைவர்ஸ் பிராண்ட்-ஐ கடந்த மார்ச் 2022 இல் அறிவித்தது. இதன் கீழ் வெப்3 (web3) மற்றும் மெட்டாவேர்ஸ் கான்செப்ட்களின் அடிப்படையில் பல்வேறு வகையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற வித்தியாசமான 'மேட்டர்களை' முயற்சி செய்து பார்ப்பது, எச்டிசி நிறுவனத்திற்கு ஒன்றும் புதிதல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனம், எச்டிசி எக்ஸோடஸ் மற்றும் எச்டிசி எக்ஸோடஸ் 1எஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல்கள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை (Blockchain technology) ஆதரிக்கும் முதல் ஸ்மார்ட்போன்களில் சில ஆகும் மற்றும் பிட்காயின் (Bitcoin) மற்றும் பிற வகையான கிரிப்டோகரன்சிகளை (cryptocurrency) பயன்படுத்தும் டிஜிட்டல் வேலட் ஆகவும் வடிவமைக்கப்பட்டன. ஆனால் ஒரு புண்ணியமும் இல்லை!

ஏனெனில் பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகள் இப்போது இருப்பதை போலவே, அப்போதும் மிகவும் பிரபலமாக இல்லை. ஆனால் மெட்டாவேர்ஸ் அப்படி இல்லை, பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சிகளை போல் இல்லாமல், மெட்டாவேர்ஸ் மிகப்பெரிய எதிர்காலத்தை கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. எனவே எச்டிசியின் இந்த வைவர்ஸ் முயற்சியானது நிறுவனத்தின் சில உயர்ந்த லட்சியங்களை எட்ட உதவலாம்; மறுகையில், திட்டங்கள் சொதப்பவும் செய்யலாம்.

நினைவூட்டும் வண்ணம், எச்டிசி நிறுவனத்தின் மெட்டாவேர்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அறிமுகமாக இருந்தது, ஆனால் தைவானில் ஏற்பட்ட கோவிட்-19 தொற்று காரணமாக குறிப்பிட்ட வெளியீடு தாமதமானது.

முன்னரே குறிப்பிட்டபடி, எச்டிசி மெட்டாவேர்ஸ் அலல்து வைவர்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து அதிகம் தகவல் இல்லை. ஆனாலும் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 அல்லது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8-சீரீஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை கிட்டத்தட்ட உறுதியாக நம்பலாம். அதே சமயம் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எச்டிசி வைவ் ஏஆர் (HTC Vive AR) மற்றும் விஆர் (VR) ஹெட்செட்களையும் ஆதரிக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

Best Mobiles in India

English summary
HTC is all set for a comeback, going to announce a Metaverse-based smartphone called Viverse on June 28 check full details here

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X