உங்கள் Mobile-ல் விளம்பரங்கள் தொல்லை செய்கிறதா? அப்போ இதை செய்யுங்க.! இனி No Ads.!

|

உங்கள் ஸ்மார்ட்போனில் (Smartphone) தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத இடங்களில் மொபைல் ஆட்ஸ் (Mobile Ads) வருகிறதா? விளம்பரங்கள் (Ads) என்றாலே அதை யாரும் விரும்ப மாட்டார்கள்.! அதிலும், குறிப்பாக, அவை ஒரு அளவிற்கு இருந்தால் மட்டுமே அதையும் சகித்துக் கொள்ள முடியும். அளவுக்கு மீறும் பொழுது, விளம்பரங்கள் நம்முடைய பொறுமையைச் சோதிக்கிறது.

இப்படி விளம்பரங்களால் உங்களுக்கும் தொல்லை இருக்கிறது என்றால், கட்டாயம் உங்கள் போனில் இந்த ட்ரிக்கை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் விளம்பரங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

உங்கள் Mobile-ல் விளம்பரங்கள் தொல்லை செய்கிறதா? அப்போ இதை செய்யுங்க.!

பொதுவாக, உங்கள் ஃபோனில் அமேசான் (Amazon) அல்லது பிலிப்கார்ட் (Flipkart) அல்லது வேறு ஏதேனும் ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping) தளங்களுக்கான மொபைல் ஆப்ஸ்களை (Mobile Apps) நீங்கள் பயன்படுத்தினால் - அதில் ஏதாவது ஒரு பொருளை சர்ச் செய்து இருப்பீர்கள். அப்படி, நீங்கள் சர்ச் செய்த பொருள் மீண்டும்-மீண்டும் பல தளங்களில் விளம்பரங்களாகக் காண்பிக்கப்படும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு ஷூ மாடல் சர்ச் செய்து உள்ளீர்கள் என்றால் - பேஸ்புக்கில், இன்ஸ்டாகிராம், போன்ற மற்ற தலங்களிலும் ஷூ தொடர்பான விளம்பரங்கள் தான் அடிக்கடி உங்களுக்கு காண்பிக்கப்படும். இதுபோல், இன்னும் பல விளம்பரங்களும் சேர்த்து காண்பிக்கப்படும். இத்தகைய விளம்பரங்களை ஸ்டாப் செய்யக்கூடிய ட்ரிக்கை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- முதலில், உங்களுடைய போனின் செட்டிங் சென்று Google என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு அதில் காண்பிக்கப்படும் Opt out of Ads Personalisation என்ற விருப்பத்தை ஆன் செய்யவும்.
- இதை நீங்கள் ON-ல் வைத்தல் வேண்டும்.
- இப்படி செய்தால் அமேசான் பிளிப்கார்ட் போன்ற ஷாப்பிங் தளங்களில் நீங்கள் தேடிய ப்ராடக்ட்களின் விளம்பரங்கள் உங்கள் போனில் காண்பிக்கப்பட மாட்டாது.

- இதே போல் அடுத்த படியாக உங்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் (Settings) சென்று லொகேஷன் (Location) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு அதில் வைஃபை ஸ்கேனிங் (WiFi scanning) மற்றும் ப்ளூடூத் ஸ்கேனிங் (Bluetooth Scanning) இரண்டையும் ஆப் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக, கூகுள் லொகேஷன் ஹிஸ்டரி (Location History) என்பதையும் நீங்கள் ஆப் செய்ய வேண்டும்.

உங்கள் Mobile-ல் விளம்பரங்கள் தொல்லை செய்கிறதா? அப்போ இதை செய்யுங்க.!

- பொதுவாக Google உங்களுடைய லொகேஷன் ஹிஸ்டரிகளை சேவ் செய்கிறது.
- இந்த அம்சத்தினால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலோ அல்லது சம்பந்தப்பட்ட விளம்பரங்களைத் தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருக்கும்.
- இதை OFF செய்தால் உங்களுக்கு விளம்பரங்கள் குறைக்கப்படும்.

கட்டாயமாக உங்களுக்கு யூடியூபில் (YouTube) வருகின்ற விளம்பரங்கள் கடுப்பை ஏற்றி இருக்கும். சில நேரங்களில் ஸ்கிப் செய்ய முடியாத விளம்பரங்களால் நீங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கும். யூட்யூபில் வரும் விளம்பரங்களை (YouTube Ads) குறைப்பதற்கான விருப்பமும் நம்மிடம் உள்ளது.

- யூட்யூபில் வரும் விளம்பரங்களை ஸ்டாப் செய்ய (how to stop youtube ads) அந்த வீடியோவை ஓபன் செய்து கீழே ' i ' என்ற சிம்பல் காண்பிக்கப்படும்.
- அதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு அதில் காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து Stop seeing this ad என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு அதில் Yes கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு Repetitive என்ற விருப்பத்தை கிளிக் செய்து இறுதியாக send என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அவ்வளவுதான் வேலை முடிந்தது.

இப்படி செய்வதன் மூலம் உங்களுடைய போனில் வரும் விளம்பரங்களை உங்களால் குறைக்க முடியும்.

Best Mobiles in India

English summary
How to stop unwanted mobile ads on smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X