நீங்களும் ஆகலாம் Bill Gates: இந்த 4 விஷயம் மட்டும் கடைபிடிச்சா போதும்!

|

பிரச்சனை என்னவென்றால், நம்பிக்கையும் தைரியமும் அவசியமான குணங்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், அவற்றை செயல்படுத்துவது சில நேரங்களில் மிகவும் கடினமான விஷயமாக இருப்பதே ஆகும். உங்களுக்குள் இருக்கும் சுய சந்தேகத்தில் இருந்து எப்படி வெளியேறுவது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் அது மிகவும் தவறான விஷயம் ஆகும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

CNBC Make It இல் தெரிவித்துள்ள தகவலின்படி, பில் கேட்ஸ் ஹார்வர்ட் மாணவர்களுடன் உரையாடல் நடத்தினார். அதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வாழ்க்கையில் வெற்றிப் பெற உதவும் வகையிலான சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

திறன்கள் மற்றும் யோசனைகளை நம்ப வேண்டும்

திறன்கள் மற்றும் யோசனைகளை நம்ப வேண்டும்

பில் கேட்ஸ் உரையாடலில், தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடங்கிய போது, தனக்கு சந்தேகம் இருந்தது தனது வணிகம் தோல்வியடையும் என அஞ்சினேன். இறுதியாக இந்த கவனச்சிதறல்களை சரி செய்ய ஒரு வழியை கண்டுபிடித்தேன். அதாவது தனது திறன்கள் மற்றும் யோசனைகளை நம்ப கற்றுக் கொண்டேன் என கூறினார்.

வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு பில் கேட்ஸ் இடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 4 வழிகளை சிஎன்பிசி தெரிவித்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

1. சவால்களில் இருந்து ஓடாதீர்கள்

1. சவால்களில் இருந்து ஓடாதீர்கள்

ஆரம்ப நாட்களில் இருந்தேமைக்ரோசாப்ட் இன் சில விஷயங்கள் ஆபத்தானவை என்பதை கேட்ஸ் அறிந்து கொண்டார்.

சவால்களை எதிர்கொள்ளவும் இலக்கை அடையவும் அவர் மனதையும் திறமையையும் பயன்படுத்துவதற்கான ஒரு வழியை பில் கேட்ஸ் கண்டுபிடித்தார்.

சாதிக்க முடியாது என்ற பயத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், வெற்றிக்கு என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.

2. உங்கள் தவறுகளில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளுங்கள், தோல்விக்கு பயப்படாதீர்கள்

2. உங்கள் தவறுகளில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளுங்கள், தோல்விக்கு பயப்படாதீர்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் மில்லியன் டாலர்கள் இழந்த ஒரு நிகழ்வு குறித்து பில் கேட்ஸ் தெளிவுப்படுத்தினார். ஸ்மார்ட்போன்கள் தான் எதிர்காலம் என்பதை அறிந்த பில் கேட்ஸ், அதை உலகிற்கு கொண்டு வரும் நோக்கில் செயல்படத் தொடங்கினார். ஆனால் அதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார். இந்த இடைவெளியில் முதல் ஆண்ட்ராய்டு போன் வெளியாகிவிட்டது.

தவறுகள் உலகின் முடிவு அல்ல

அந்த தோல்வியில் பில் கேட்ஸ் துவண்டு போகவில்லை, இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள முடிவு செய்தார். நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற முக்கியத்துவத்தை அவர் இந்த தோல்வியில் கற்றுக் கொண்டார்.

தவறுகள் உலகின் முடிவு அல்ல, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள். அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

3. ஒப்பிட்டு விரக்தி அடைய வேண்டாம்

3. ஒப்பிட்டு விரக்தி அடைய வேண்டாம்

ஒவ்வொருவருக்கும் அவரவர் வேகம் மற்றும் பாதைகள் உள்ளது. சிலரின் பாதை நீளமாகவும் மெதுவாகவும் இருக்கும். பிறருடன் ஒப்பிட்டு உங்கள் பாதையில் சென்றடையும் இலக்கை தவறவிட வேண்டாம். உங்களை மற்றவருடன் ஒப்பிடுவது என்பது உங்களை விரக்தியடைய வைக்கும். இது நீங்கள் வேலை செய்யும் முறையையும், வளரும் விதத்தையும் பாதிக்கும்.

யாருடனும் ஒப்பிடாதீர்கள்

INC.com படி, பில் கேட்ஸ் இதுகுறித்து கூறுகையில், "உங்களை இந்த உலகில் யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் அப்படி செய்தால் உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்" என கூறினார்.

4. வேறொருவரின் கனவுகளைப் பின்பற்ற உங்கள் கனவுகளை விட்டுவிடாதீர்கள்

4. வேறொருவரின் கனவுகளைப் பின்பற்ற உங்கள் கனவுகளை விட்டுவிடாதீர்கள்

வேறொருவரின் கனவைப் பின்தொடர்வது என்பது மிக எளிதாகத் தோன்றாலம். அதற்கு ஏற்கனவே பாதை வழிவகுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவை உங்களை ஊக்கமளிக்காததாக உணர வைக்கும்.

நீங்கள் விரும்பும் உங்கள் கனவுக்கு போராடத் தொடங்குங்கள். அது வெற்றி பெறுவதற்கு உங்களை ஊக்கமளிக்கும். சற்று கடினமாகத் தோன்றினாலும் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் அதற்காக போராடுவது முக்கியம்.

கேட்ஸ் தனது நிறுவனத்தை தொடங்குவது கடினம் வேறு யாராவது செய்வதை நாமும் செய்யலாம் என்று யோசித்து இருந்தால், பில் கேட்ஸ் இப்போது இருக்கும் இடத்தில் இருந்திருக்க மாட்டார். உங்கள் கனவை நீங்கள் காணுங்கள் அதை செயல்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
Here are 4 simple steps to grow like Bill Gates: Grow up and become a successful person

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X