காளை களம் இறங்கிருச்சு.! உயிர்த்தெழும் Vodafone idea (Vi) பயனர்கள்.. திருப்பி கொடுக்க வேண்டிய நேரம்!

|

Vi இந்தியாவில் 5G சேவைகளை வெளியிடத் தொடங்கி உள்ளது. வோடபோன் ஐடியாவின் வாடிக்கையாளர் ஆதரவு குழு ட்விட்டரில் Vi 5G சேவை கிடைக்கத் தொடங்கி இருப்பதை உறுதி செய்திருக்கிறது. ஜியோ 5ஜி சேவை 78 நகரங்களில் ஏற்கனவே கிடைக்கத் தொடங்கி உள்ள நிலையில் தற்போது தான் விஐ 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

காளை களம் இறங்கிருச்சு.! உயிர்த்தெழும் Vodafone idea (Vi) பயனர்கள்..

Vodafone Idea (Vi)

Vodafone Idea (Vi) இறுதியாக இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கத் தொடங்கி இருக்கிறது. Vi 5G தற்போது டெல்லியில் கிடைக்கிறது என நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆதரவு குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது. விஐ 5ஜி அணுகக்கூடிய ஒரே இந்திய நகரம் இதுதான். 5ஜி இன் வணிக வெளியீடு தொடர்பான எந்த அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை.

Vi 5G சேவை

டெல்லியில் Vi 5G சேவைக் கிடைக்கத் தொடங்கி உள்ளது. ஆனால் டெல்லியில் விஐ 5ஜி கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்திய ட்வீட்டை நிறுவனம் நீக்கி இருக்கிறது. ஆனால் இந்தியா டுடே தொழில்நுட்பத் தளத்தில் இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் கிடைக்கவில்லை என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இது நடக்கும்

தற்போதைய நிலவரப்படி விஐ 5ஜி சேவை குறித்த எந்த தகவலையும் நிறுவனம் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தவில்லை. விரைவில் இது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஐ அதன் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை விரிவுப்படுத்தும் நோக்கில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது என்பது மட்டும் உறுதி ஆகும்.

ஜியோ மற்றும் ஏர்டெல்

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் கடந்த ஆண்டு தங்கள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியது. அறிமுகமான நாளில் இருந்து 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது. அதன்படி 78 இந்திய நகரங்களில் Jio 5G சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5ஜி கிடைக்கும் பகுதிகள் குறித்தும், 5ஜி சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்தும் பார்க்கலாம்.

காளை களம் இறங்கிருச்சு.! உயிர்த்தெழும் Vodafone idea (Vi) பயனர்கள்..

78 இந்திய நகரங்களில் ஜியோ 5ஜி

2023 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என ஜியோ மற்றும் ஏர்டெல் உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் தங்கள் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் இதுவரை 78 இந்திய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள்

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைப்பை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து இரண்டு நிறுவனங்களும் முணைப்போடு செயல்பட்டு வேகமாக 5ஜி சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஜியோ ட்ரூ 5ஜி சேவை

ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை ஜியோ ட்ரூ 5ஜி என அழைக்கப்படுகிறது. ஜியோ ட்ரூ 5ஜி சேவையை நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களின் தலைநகரங்களில் ஜியோ 5ஜி சேவைக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. அதாவது ஏறத்தாழ ஜியோ 5ஜி சேவை இந்தியாவின் 78 நகரங்களுக்கு மேல் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இந்த பகுதியில் உள்ளவர்கள் ஜியோ ட்ரூ 5ஜி சேவையை இலவசமாகவே பயன்படுத்தலாம்.

4ஜி சிம் மூலமாகவே 5ஜி சேவை

ஜியோ 5ஜி சேவையை பயனர்கள் இலவசமாகவே அனுபவிக்கலாம். இதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருக்கிறது. அது ஜியோ பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் இருக்க வேண்டும் என்பது தான். தற்போது பயன்படுத்தும் 4ஜி சிம் மூலமாகவே 5ஜி சேவையை பயனர்கள் பயன்படுத்தலாம். கூடுதலாக ரீசார்ஜ் செய்யக் கூட தேவையில்லை, 5ஜி ஸ்மார்ட்போனும் 5ஜி கிடைக்கும் பகுதியிலும் மட்டும் இருந்தால் போதும்.

Best Mobiles in India

English summary
Has Vodafone Idea (Vi) 5G service started? What is the truth? How to activate?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X