கூகுள் Messages-ல் சத்தமின்றி அறிமுகமானது புதிய வசதி.. பயன்படுத்துவது எப்படி? இதோ வழிமுறைகள்..
கூகுள் நிறுவனம் தனது Messages செயலியில் லைவ் லொகேஷன் (நேரடி இருப்பிடப் பகிர்வு) வசதியை வெளியிடத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் ரியல் டைம் லைவ் லொகேஷனை பகிர்வதற்கு இனி வேறு எந்த தளத்தையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதாவது உங்கள் மெசேஜ் செயலி மூலம் மிகவும் எளிமையாக லொகேஷனை பகிர முடியும்.
Find Hub மூலம் இந்த ரியல் டைம் லைவ் லொகேஷன் அம்சம் இயங்குகிறது. அதுவும் மெசேஜ் செயலியில் பயனர்கள் சாட் செய்யும்போது இந்த லைவ் லொகேஷனை பயன்படுத்தி உங்கள் இருப்பிடத்தை அனுப்பலாம். நீங்கள் அனுப்பிய லொகேஷனை பெறுபவர்கள் அந்த சாட்-க்கு உள்ளேயே மேப்பை நேரடியாகப் பார்க்க அனுமதிக்கிறது. மேலும் நீங்கள் உங்கள் லொகேஷனை எவ்வளவு நேரம் பகிர வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம். மேலும் எந்த நேரத்திலும் லொகேஷன் பகிர்வதை நிறுத்தவும் முடியும் என்பது இதில் உள்ள சிறப்பு அம்சம் ஆகும்.

சரி இப்போது, Google Messages செயலியில் உங்கள் ரியல் டைம் லைவ் லொகேஷனை (நேரடி இருப்பிடத்தை) எப்படிப் பகிர்வது என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.
வழிமுறை-2: உங்கள் லைவ் லொகேஷனை பகிர விரும்பும் நபருடனான பெர்சனல் சாட்-ஐ திறக்கவும்.
வழிமுறை-3: அடுத்து பிளஸ் (+) ஐகானை கிளிக் செய்த பின்னர் ரியல் டைம் லைவ் லொகேஷன் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
வழிமுறை-4: அதன்பின்னர் கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து கால அளவைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது 1 மணிநேரம், இன்று மட்டும், Custom duration போன்ற எதாவது ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
வழிமுறை-5: இப்போது அந்த சாட்டில் ரியல் டைம் லைவ் லொகேஷனை பகிரத் தொடங்க Send பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் உங்கள் சில நொடிகளில் லைவ் லொகேஷன் சென்றுவிடும்.
ஒருவேளை நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பிய லைவ் லொகேஷனை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அதாவது நீங்கள் லொகேஷனை அனுப்பிய சாட்-இன் மேலே Location sharing until என்பதை கிளிக் செய்து Stop என்பதை கிளிக் செய்தால் போதும் உடனே லைவ் லொகேஷனை பகிர்வதை நிறுத்திவிட முடியும்.
கூகுள் மேப்ஸ்
சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் ஜெமினி (Gemini) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ஆஸ்க் மேப்ஸ் (Ask Maps) எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி மூலம் மேப்ஸ் செயலி வெறும் வழிகாட்டியாக மட்டுமின்றி பயனர்களுடன் உரையாடும் ஒரு ஏஐ (AI) உதவியாளராக மாறியுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களைப் பற்றி சாதாரண மொழியில் கேள்விகளைக் கேட்கலாம். உதாரணமாக அருகில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட கஃபே எங்கு உள்ளது? குறைவான கூட்ட நெரிசல் கொண்ட உணவகங்கள் எவை? என்று கேட்டால் போதும் ஜெமினி மூலம் துல்லியமான பதில்களைக் கூகுள் மேப்ஸ் எளிதாக வழங்கிவிடும்.
Ask Maps பட்டனை தட்டினால் போதும், உரையாடல் முறையில் உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கும். மேலும் இதில் விடுமுறை நாட்களுக்கான முழுமையான பயணத் திட்டத்தை வகுத்துத் தரும்படி பயனர்கள் கேட்கலாம். குறிப்பாக இதில் 30 கோடிக்கும் அதிகமான இடங்கள் மற்றும் 50 கோடிக்கும் மேலான பயனர்களின் மதிப்புரைகள் அடிப்படையில் பரிந்துரைகள் வழங்கப்படும்.
photos credits: smarthouse


Click it and Unblock the Notifications








