Home
Mobile

வியக்கவைக்கும் விலை.. 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Xiaomi 5ஜி போன்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 17டி (Xiaomi 17T) ஸ்மார்ட்போனை வரும் மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் சியோமி 17டி போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சியோமி 17டி அம்சங்கள் (Xiaomi 17T Specifications): இந்த புதிய சியோமி 17டி ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

வியக்கவைக்கும் விலை..இந்தியாவுக்கு வரும் புது Xiaomi 5ஜி போன்..

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சிப்செட் (MediaTek Dimensity 8500 chipset) உடன் இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி செகண்டரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி 17டி போன் வெளியாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

வியக்கவைக்கும் விலை..இந்தியாவுக்கு வரும் புது Xiaomi 5ஜி போன்..

இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி 17டி போனில் உள்ளன. தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.55,000 அல்லது ரூ.60000 பட்ஜெட்டில் இந்த புதிய சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

photos credits: 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17T India price and specifications revealed: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X