Home
News

நச்சுனு போட்ட Airtel.. அடுத்த 60 நாட்கள் இதை மட்டும் பண்ணுங்க.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5ஜிபி டேட்டா!

டெலிகாம் நிறுவனங்களை பொறுத்தவரையில் 2 மாதங்கள் வேலிடிட்டி என்றால் 56 நாட்கள் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன. இருப்பினும், 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டமானது நல்ல சலுகைகளுடன் கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்காது. ஏனென்றால், 4ஜி டேட்டாவுக்கு ஏற்ப மட்டுமே விலையும் இருக்கிறது.

பார்தி ஏர்டெல் 60 நாட்கள் வேலிடிட்டி திட்டம் (Bharti Airtel 60 Days Validity Plan): ரூ.619 விலைக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆகவே, 2 மாதங்கள் முழுவதும் வேலிடிட்டி கிடைக்கும். இந்த 2 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி & ரோமிங் கால்களை (Unlimited Local STD & Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

நச்சுனு போட்ட Airtel.. அடுத்த 60 நாட்கள் இதை மட்டும் பண்ணுங்க!

தினமும் 1.5 ஜிபி டேட்டா ஒதுக்கப்படும். 60 நாட்களுக்கு 90 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த 1.5 ஜிபி டேட்டாவானது, 4ஜி வேகத்தில் மட்டுமே கொடுக்கப்படும். ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்த முடியாது. மேலும், 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு தொடர்ந்து டேட்டா சேவை கொடுக்கப்படும்.

தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ள முடியும். மாதத்துக்கு ரூ.309.5 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது. அதாவது, 60 நாட்களுக்கு ரூ.619 ஆக விலை இருக்கிறது. அதை 30 நாட்களுக்கு கணக்கிட்டால் ரூ.309.5 ஆக இருக்கிறது. இந்த டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு அடுத்து கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

மொத்தம் 4 கூடுதல் சலுகைகளை இந்த ஏர்டெல் திட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளது. முதலாவதாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.4,000ஆக இருக்கிறது. ஏனென்றால், இந்த திட்டத்துக்கு 60 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவானது 12 மாதங்களுக்கு கிடைக்கும்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ப்ரீ கன்டென்ட் (Airtel Xstream Play Free Content) சந்தா கிடைக்கிறது. அதாவது, பிரீமியம் அல்லாத கன்டென்ட்களை கொடுக்கும்படி சோனிலிவ் (SonyLIV), அமேசான் எம்எக்ஸ் பிளேயர் (Amazon MX Player), சன்னா ஜோர் (Chana Jor) மற்றும் ரன் டிவி (Run TV) உள்ளிட்ட ஆப்கள் பயன்படுத்த கிடைக்கிறது. மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கிடைக்கிறது.

ஆனால், 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே டியூனை மாற்றி கொள்ள முடியும். இந்த ஏர்டெல் திட்டத்துக்கு 60 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 2 முறை ஹேலோ டியூனை மாற்றி கொள்ளலாம். இறுதியாக ஸ்பேம் அலெர்ட் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரே திட்டமாக இந்த ஏர்டெல் ரூ. 619 திட்டம் இருக்கிறது. இதற்கு கீழ் 56 நாட்கள் வேலிடிட்டி, 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது. அதேபோல 60 நாட்களுக்கு மேல் சென்றால், 77 நாட்கள் வேலிடிட்டி, 84 நாட்கள் வேலிடிட்டி, 90 நாட்கள் வேலிடிட்டி, 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bharti Airtel 60 Days Validity Prepaid Plan Unlimited Voice Calls 1.5 GB Data Per Day At Rs 619
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X