பழைய டிவி அம்பேல்.. 59 சதவீத டிஸ்கவுண்ட்.. 43 இன்ச் QLED டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
பழைய 32 இன்ச் டிவியை மாற்ற நினைக்கும் கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் விலைக்கு மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி டிவி (MOTOROLA 43 inch QLED TV) கிடைக்கிறது. மலிவான விலைக்கு கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி ஆடியோ கொடுக்கிறது. மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி டிவியின் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா நிறுவனத்தின் 32 இன்ச், 43 இன்ச் கியூஎல்இடி டிவி மாடல்களுக்கு 50 சதவீதத்துக்கும் மேல் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA 43 inch QLED Full HD Smart Google TV) மாடலுக்கு 59 சதவீத டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த தள்ளுபடியுடன் ரூ.16,999 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,499 விலைக்கு இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். 43எப்எச்டிஜிகியூஎம்விஎஸ்எம்கியூ (43FHDGQMVSMQ) மாடலாகும்.
2025 எடிஷனாக இருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் மீடியாடெக் சிப்செட் கொண் மாடலாகவும் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி டிவி இருக்கிறது. பெசல்-லெஸ் டிஸ்பிளே (Bezel Less Display) கொடுத்து உள்ளது. 1 வருட வாரண்டியில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. ஸ்மார்ட் ரிமோட் மற்றும் டேபிள் மவுண்ட் ஸ்டேண்ட் கொடுக்கப்படும்.
மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (MOTOROLA 43 inch QLED TV Specifications): 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 300 நிட்ஸ் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட்டை இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கொண்டுள்ளது.
மேலும், எச்டிஆர் 10 (HDR 10), 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. யூசர், ஸ்போர்ட், விவிட், மூவி, கேம் மற்றும் எனர்ஜி சேவிங் மோட்களை கொடுத்து உள்ளது. சினிமாடிக் சவுண்ட் அவுட்புட் கொடுக்க டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 40W ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 7 சவுண்ட் மோட்களையும் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது.
பில்ட்-இன் குரோம்காஸ்ட், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் சப்போர்ட் கொண்ட கூகுள் டிவி 5.0 (Google TV 5.0) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவிக்கு கிடைக்கிறது. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. ஸ்கிரீன் மிரரிங் உள்ளது. எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் ஏவி போர்ட்கள் உள்ளன. எல்ஏஎன் மற்றும் ஹெட்போன் ஜாக் சப்போர்ட் கிடைக்கிறது. குவாட் கோர் மீடியாடெக் ப்ராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கொண்ட மாடலாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








